)
SBI Rs 1 Crore Accidental-Insurance: இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி கிடைத்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சம்பளக் கணக்கு வைத்திருக்கும் இந்திய ரயில்வே ஊழியர்கள், இனி ரூ.1 கோடிக்கு விபத்து மரணக் காப்பீட்டைப் பெறுவார்கள். இந்த காப்பீட்டுத் தொகை முன்னர் சில லட்சங்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இரு தரப்பினரும் திங்களன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக ரயில்வே அமைச்சக அறிக்கையை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
STORY | Railway employees with SBI salary accounts to get Rs 1 crore accidental death cover
— Press Trust of India (@PTI_News) September 1, 2025
The Indian Railways on Monday signed a Memorandum of Understanding (MoU) with State Bank of India to provide significant insurance cover for its employees and their families, an official… pic.twitter.com/92kj1aUgPr
Insurance Cover: மத்திய அரசு ஊழியர் குழு காப்பீட்டுத் திட்டம்
மத்திய அரசு ஊழியர் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரயில்வே ஊழியர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். இது பின்வரும் வகையில் விபத்து மரணக் காப்பீட்டை வழங்குகிறது:
- குரூப் A ஊழியர்களுக்கு ரூ.1.20 லட்சம்
- குரூப் B ஊழியர்களுக்கு ரூ.60,000
- குரூப் C ஊழியர்களுக்கு ரூ.30,000
எந்த பிரீமியமும் செலுத்தாமல், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் இந்த ஒப்பந்தம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் இயற்கை மரணக் காப்பீட்டையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 700,000 ரயில்வே ஊழியர்கள் தங்கள் சம்பளக் கணக்கை SBI இல் வைத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்லது. இந்த திட்டத்தை "பணியாளர்களை மையமாகக் கொண்ட இரக்கமுள்ள" திட்டம் என்று அமைச்சகம் விவரித்தது. இந்த திட்டம் குறிப்பாக குரூப் C இல் உள்ள முன்னணி ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
இந்த கூட்டாண்மை இன்னும் பல காப்பீடு திட்டங்களையும் வழங்குகிறது:
- Air accident insurance (death):
விமான விபத்து காப்பீடு (இறப்பு): ரூ.1.60 கோடி, கூடுதலாக ரூபே டெபிட் கார்டில் ரூ.1 கோடி வரை
- Personal accident (permanent total disability):
தனிப்பட்ட விபத்து (நிரந்தர மொத்த இயலாமை): ரூ.1 கோடி
- Personal accident (permanent partial disability):
தனிப்பட்ட விபத்து (நிரந்தர பகுதியளவு இயலாமை): ரூ.80 லட்சம் வரை
இந்த நடவடிக்கை ஊழியர் நலனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய ரயில்வே மற்றும் எஸ்பிஐ இடையேயான ஆக்கபூர்வமான கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்று அமைச்சகம் குறிப்பிட்டது. ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, இந்த மேம்பாடு எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் அர்த்தமுள்ள நிதி பாதுகாப்பு வலையைக் குறிக்கிறது என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ