PMAY Latest News: நாட்டில் உள்ள பல அரசு வங்கிகள் 8% முதல் 9.5% வரையிலான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. ஆனால், அரசாங்கத்தின் உதவியுடன், 2% வட்டி விகிதத்தில் அதே கடனைப் பெறலாம்.

Pradhan Mantri Awas Yojana: நடுத்தர மக்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. சொந்த வீடு கட்டும் அல்லது வாங்கும் ஆசை அனைவருக்கும் உள்ளது. ஆனால். பலருக்கு அது வெறும் கனவாகவே இருந்துவிடுகிறது. இதில் மத்திய அரசு மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
வீடு வாங்கும் பெரும்பாலான மக்கள் கடன் வாங்கிதான் அந்த கனவை நிஜமாக்கிக்கொள்கிறார்கள். நாட்டில் உள்ள பல அரசு வங்கிகள் 8% முதல் 9.5% வரையிலான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. ஆனால், அரசாங்கத்தின் உதவியுடன், நீங்கள் 2% வட்டி விகிதத்தில் அதே கடனைப் பெறலாம்.
வீடு வாங்குவதற்கான அரசாங்கத் திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் உதவியுடன் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் பெறலாம். ஆனால் அதற்கு எப்படி, எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது 2015 இல் தொடங்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க அரசுத் திட்டமாகும். மக்கள் அனைவருக்கும் மலிவு மற்றும் நிரந்தர வீட்டுவசதி வழங்குவதே இதன் குறிக்கோள். இந்தத் திட்டம் குறிப்பாக முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நலிந்த, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுக்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கு வீட்டுக் கடன் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இது வீடு வாங்குவதை எளிதாக்குகிறது.
PMAY இன் கீழ், வீட்டுக் கடன்களில் 6.5% வரை வட்டி மானியம் கிடைக்கிறது. இந்த மானியம் அதிகபட்சமாக 20 ஆண்டுகளுக்குக் கிடைக்கிறது. விண்ணப்ப செயல்முறையும் எளிதானது, ஆன்லைனில் உள்ளது. தற்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு 8 முதல் 9.5% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 2% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனைப் பெறலாம்.
PMAY திட்டத்தில், அரசாங்கம் மக்களை நான்கு வருமான வகைகளாகப் பிரித்துள்ளது.
- EWS, அதாவது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் - ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்கள்.
- LIG, அதாவது குறைந்த வருமானக் குழுவினர் - ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை உள்ளவர்கள்.
- MIG-I, அதாவது நடுத்தர வருமானக் குழுவினர் - ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்கள்.
- MIG-II, அதாவது நடுத்தர வருமானக் குழு - II - ஆண்டு வருமானம் ரூ.12 முதல் 18 லட்சம் வரை உள்ளவர்கள்.
- முதலில், நீங்கள் எந்த வருமானக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு PMAY இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmaymis.gov.in -க்கு செல்லவும்.
- இப்போது இணையதளத்தில் உள்ள குடிமக்கள் மதிப்பீட்டுப் பிரிவுக்குச் சென்று உங்கள் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஆதார் எண்ணை உள்ளிட்டு மேலும் தொடரவும்.
- பின்னர் விண்ணப்பப் படிவத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், வருமானம், வங்கி விவரங்கள் மற்றும் முகவரியை நிரப்பவும்.
- கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, அனைத்து விவரங்களையும் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.
- ஐடி ஆதாரம் - ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் ஐடி.
- முகவரி ஆதாரம்
- வருமானச் சான்றிதழ்
- வங்கி விவரங்கள்
- சொத்து தொடர்பான ஆவணங்கள்
வலைத்தளத்தில் உங்கள் மதிப்பீட்டு நிலையைக் கண்காணிக்கவும் விருப்பத்தைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்கலாம். முதல் முறையாக வீடு வாங்குபவர்களும், ஏற்கனவே பக்கா வீடு இல்லாதவர்களும் மட்டுமே இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ