)
EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இபிஎஃப் கணக்கின் மூலம் கிடைக்கும் ஓய்வூதியம் பற்றிய சில முக்கிய விஷயங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பணியில் சேர்ந்த ஆறு மாதங்களுக்குள் வேலையை விட்டு வெளியேறிய ஊழியர்கள் இனி தங்கள் ஓய்வூதிய பங்களிப்பை இழக்க மாட்டார்கள். இதை பற்றி இங்கே விரிவாக காணலாம்.
- குறுகிய காலத்திற்கு வேலை செய்திருந்தாலும் கூட ஓய்வூதிய பங்களிப்பை திரும்பப் பெற EPFO இப்போது அனுமதிக்கிறது.
- இதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் வேலை செய்து பங்களிப்பு செய்திருந்தால் போதும்.
- சமீப காலம் வரை, EPS விதிகள் ஆறு மாதங்களுக்கு குறைவாக உள்ள சேவை காலத்தை "ஜீரோ கம்ப்ளீடட் இயர்ஸ்”, அதாவது முழுமையடையாத ஆண்டாகவே கருதியது.
- இதன் விளைவாக ஓய்வூதிய கூறு தானாகவே பறிமுதல் செய்யப்பட்டது.
- இதனால், ஒரு ஊழியர் ஐந்து மாதங்களுக்குப் பிறகு வேலையை விட்டு வெளியேறினால், அவர் தனது ஓய்வூதியப் பங்கை இழப்பார்.
- அவர் தானாக வேலை விட்டு சென்றாலும் இதே விதிதான் பொருந்தும்.
இந்த முறை தற்போது மாறிவிட்டது. ஏப்ரல்-மே 2024 இல் வெளியிடப்பட்ட உள் சுற்றறிக்கைகளில், ஒரு மாத பங்களிப்பு சேவையைக் கொண்ட உறுப்பினர்கள் வெளியேறும்போது (தன்னார்வ ராஜினாமா வழக்குகள் உட்பட), அவர்களின் EPS பங்கைப் பெற தகுதியுடையவர்கள் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தெளிவுபடுத்தியது.
சில்லறை விற்பனை, BPO -க்கள், தளவாடங்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் போன்ற பல துறைகளுக்கு இந்த மாற்றம் மிகவும் தேவையான நிவாரணத்தைக் கொண்டுவருகிறது. அங்கு ஊழியர்கள் விரைவில் வெளியேறுவது பொதுவானது. இது இளைய தொழிலாளர்கள் மற்றும் ட்ரெய்னி தொழிலாளர்களைப் பாதுகாக்கிறது. ஏனெனில் முன்னர் குறுகிய காலப் பணிகளுக்கான ஓய்வூதியப் பலன்களை அவர்கள் இழந்துகொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அது மாறிவிட்டது.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்:
- ஜனவரி 2024 இல் பணியில் சேர்ந்து ஏப்ரல் 2024 இல் ராஜினாமா செய்த ஒரு ஊழியர் (நான்கு மாத சேவை) முன்பு ஊழியர் மற்றும் நிறுவனத்தின் PF பங்குகளை மட்டுமே பெறுவார்.
- நிறுவனம் செலுத்திய EPS பகுதி பறிமுதல் செய்யப்படும்.
- புதிய விதியின் கீழ், EPS பங்களிப்பு உட்பட முழுத் தொகையும் இப்போது அவருக்கு செலுத்தப்படும்.
முந்தைய விதி ஊழியர்களுக்கு ஒரு அநீதியாகக் கருதப்பட்டது. குறிப்பாக தனிப்பட்ட, உடல்நலம் அல்லது பயிற்சி தொடர்பான காரணங்களால் வேலையை விட்டு வெளியேறியவர்களுக்கு இது பாரட்சமான ஒரு விதியாக இருந்தது. இப்போது, ஒரு ஊழியர் ஒரு மாதத்திற்குப் பிறகு ராஜினாமா செய்தாலும், EPS தொகையை படிவம் 10C மூலம் கோரலாம்.
- பணியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்குள் ராஜினாமா செய்யும் ஊழியர்கள், PF பாஸ்புக்கைச் பார்த்து EPS பங்களிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
- ஓய்வூதியப் பங்கு செலுத்தப்படவில்லை என்றால், 2024 தெளிவுபடுத்தலை மேற்கோள் காட்டி EPFO விடம் புகார் தெரிவிக்கவும்.
- விண்ணப்பிக்கும் போது உங்கள் பாஸ்புக்கின் ஸ்கிரீன்ஷாட் அல்லது PDF ஐ துணை ஆதாரமாகச் சேவ் செய்யவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ