கடன் வாங்கிய அல்லது வாங்க நினைக்கும் வாடிக்கையாளருக்கு குட் நியூஸ்.. வட்டி குறைப்பு!

SBI Interest Rates Reduced: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்குப் பிறகு, எஸ்பிஐ கடன் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதனால் கடன்கள் சுமை சற்று குறையும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 15, 2025, 02:36 PM IST
கடன் வாங்கிய அல்லது வாங்க நினைக்கும் வாடிக்கையாளருக்கு குட் நியூஸ்.. வட்டி குறைப்பு!

Repo Rate Reduction Latest Update: கடன் வாங்கிய அல்லது வாங்க நினைக்கும் வங்கி வாடிக்கையாளருக்கு ஹாப்பி நியூஸ் என்னவென்றால், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 25 காசுகள் மேலும் குறைத்தது. இதன் மூலம் தற்போதைய 6.25%லிருந்து 6% ஆக குறைக்கப்படுகிறது என ரிசர்வ் வங்கியினுடைய ஆளுநர் சஞ்சய் மல்கத்தரா தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) அதன் கடன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன்மூலம் ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் மற்றும் புதிய கடன் வாங்குபவர்களுக்கு கடன்களுக்கான வட்டி குறையும்.

எஸ்பிஐ வங்கி தனது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட செய்தியில், "திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஏப்ரல் 15, 2025 முதல் அமலுக்கு வருகின்றன" என அறிவித்துள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தைக் குறைத்ததை அடுத்து, பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளதால், வங்கி வாடிக்கையாளர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அதேநேரத்தில் வங்கியில் நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு காரணமா வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை 10-25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதுவும் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது.

பாங்க் ஆஃப் இந்தியா புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் இருவருக்கும் பயனளிக்கும் வகையில், வீட்டுக் கடன் வட்டி விகிதங்களில் 25 அடிப்படைப் புள்ளிகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. 

வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், சொத்து மீதான கடன், கல்விக் கடன் மற்றும் ஸ்டார் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது என பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தனியார் துறையின் முக்கிய வங்கியான எச்டிஎஃப்சி (HDFC) வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 2.75 சதவீதமாக குறைத்துள்ளது. இது தனியார் துறையில் உள்ள மற்ற வங்கிகளை விட மிகக் குறைவு.

மேலும் படிக்க - SIP: பங்குச் சந்தை சரிவிலும்... 20% வருமானம் தந்த டாப் 10 மியூச்சுவல் பண்டுகள் இவை தான்

மேலும் படிக்க - PPF முதலீடு... ஓய்வு காலத்தில் மாதம் ரூ.70,000 வரி இல்லா வருமானம் பெறலாம்

மேலும் படிக்க - சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்... RBI விதிகள் கூறுவது என்ன...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News