)
PMFME Scheme : உணவு சார்ந்த தொழில்கள் செய்பவர்களுக்கு, புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய அரசின் பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் தொழில் முனைவோர்கள் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் . தொழில் வளர்ச்சி மற்றும் தொழிற்கடன் சார்ந்த பல்வேறு திட்டங்களை மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பாரத பிரதமரின் உணவுப் பொருட்கள் உற்பத்தி முறைப்படுத்துதல் திட்டம் (Pradhana Mantri Formalization of Micro Food Processing Enterprises Scheme – PMFME) 01.12.2022 ஆம் ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டிற்கு 218 நபர்களுக்கு ரூபாய். 497.00 கோடி வரை மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிய மற்றும் விரிவாக்கம் முறையில் அனைத்து உணவுப் பொருட்கள் சார்ந்த குறு உற்பத்தித் தொழில்களுக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் தொழில் முனைவோர்கள் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 1 கோடி வரை தொழில் கடன்கள் பெற்றுக்கொள்ளலாம். அதில் 35% அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
தனிநபர் மற்றும் சிறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவர்கள் இத்திட்டதின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் ஆவர். சிறிய அரசி ஆலை, எண்ணெய் பிழியும் செக்கு மில், இட்லி தோசைக்கான ஈர மாவு, மீன் சார்ந்த பொருட்கள், அப்பளம் தயாரிப்பு தொழில், சிறுதானிய பொருட்கள் உற்பத்தி பொருட்கள், மசாலா பொடிகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்றவைகள் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் https://pmfme.mofpi.gov.in/pmfme என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம், குடும்ப அட்டை, இயந்திரங்களுக்கான விலைப்புள்ளி பட்டியல் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தொழில் தொடங்கவும் மேம்படுத்தவுமான தொழில் நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு, திட்டஅறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. நிதி நிறுவனங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன் தொழில் நடத்திடத் தேவையான சட்ட பூர்வ உரிமங்கள் மற்றும் தரச் சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்த தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற இவ்வலுவலக அமைந்துள்ள இடமான புனித தாமஸ் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர்(மு.கூ.போ) அவர்களை அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து தொழில் தொடங்கவுள்ள அனைத்து ஆவணங்களுடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ