)
Tamil Nadu Government : விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான இயந்திரங்களை இ - வாடகை செயலி மூலம் பிற விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கி பயன்பெறலாம். தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் இந்த புதிய திட்டம் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம். விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான வேளாண் இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறையின் இ-வாடகை செயலியில் மற்றும் வலைதளத்தில் தங்களை சேவை வழங்குவதற்காக பதிவு செய்து பிற விவசாயிகளுக்கு இயந்திரங்களை வாடகைக்கு வழங்கலாம்.
இ-வாடகை செயலியில் பதிவு
இதை செய்ய விரும்பும் விவசாயிகள் இ-வாடகை செயலியில், சேவை வழங்குநர்களாக பதிவு செய்திட ஆதார், வங்கிக்கணக்கு விவரம் மற்றும் இயந்திர விவரங்கள் ஆகிய சரியான தகவல்களை இத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
வாடகைக்கு வழங்க உள்ள வேளாண் இயந்திரங்களின் பதிவு சான்றிதழ், இயந்திரத்தின் தகுதி சான்றிதழ், காப்பீட்டு சான்றிதழ் மற்றும் தேவையான பிற ஆவணங்களை துல்லியமாகவும், உண்மையாகவும் இத்தளத்தில் பதிவேற்றம் செய்து, வேளாண் இயந்திரங்கள் சரியாக பராமரிப்பதை உறுதி செய்திட வேண்டும். வேளாண் இயந்திரங்கள் இயக்குபவர்கள் தகுந்த பயிற்சி பெற்ற மற்றும் காப்பீடு செய்யப்பட்ட இயந்திரங்கள் இயக்குபவராகவும் இருத்தல் வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமங்கள் நடப்பில் உள்ளதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசின் நிபந்தனைகள்
·
இ-வாடகை தளத்தில் முன்பதிவு செய்யப்படும் பதிவுகளை உடனுக்குடன் ஏற்கவும் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இயந்திரங்கள் இயக்கப்படுவதையும் உறுதி செய்தல், வேளாண் இயந்திரங்கள் இயக்குபவர் மீது எவ்விதமான குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லாததை உறுதி செய்தல் வேண்டும். வாடகைக்கு உபயோகித்துக்கொள்ளும் விவசாயிகளின் விவரங்கள் போன்ற அனைத்து தரவுகளையும் ரகசியத்தன்மையுடன் சேவை வழங்குநர் பாதுகாக்க வேண்டும். இத்தரவுகளை வேறு பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்பதை சேவை வழங்குநர் உறுதி செய்திட வேண்டும். முன்பதிவின்போது உறுதி செய்யப்பட்ட சேவைக்கான தேதி மற்றும் நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
யார் பயன் பெறலாம்?
சேலம் மாவட்ட விவசாயிகள் இப்போது இந்த செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விவரங்களை பெற வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் மாவட்ட செயற் பொறியாளர் அலுவலகம் குமாரசாமிப்பட்டி, சேலம் -7 அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ) குமாரசாமிப்பட்டி, சேலம்-7, உதவி செயற்பொறியாளர் (வே.பொ), குஞ்சாண்டியூர், மேட்டூர், உதவி செயற் பொறியாளர் (வே.பொ), அப்பமசமுத்திரம், தென்னங்குடி பாளையம், ஆத்தூர் மற்றும் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), குப்பனூர் பைப்பாஸ், சங்ககிரி ஆகிய அலுவலகங்களில் உள்ள உதவி செயற்பொறியாளர்கள் அல்லது வட்டார அளவில் உதவிப் பொறியாளர் (வே.பொ) / இளநிலைப் பொறியாளர் (வே.பொ) களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ