)
UPI Refund: UPI ஐப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இனி பரிவர்த்தனை தோல்வியுற்றால், பயனர்கள் உடனடியாக ரீஃபண்ட் பெற முடியும், அதாவது பணத்தைத் திரும்பப் பெற முடியும். இதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது.
தேசிய கொடுப்பனவு கழகம் அறிமுகம் செய்யவுள்ள புதிய விதி
தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஜூலை 15 முதல் ஒரு புதிய விதியை அமல்படுத்த உள்ளது. இதற்கு பிறகு, கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டு, ஆனால், பணம் செலுத்தப்படாவிட்டால், பயனர்கள் உடனடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியும். அதாவது, பணம் அவர்களது கணக்கிற்குத் திருப்பித் தரப்படும்.
இது மட்டுமல்லாமல், தவறான UPI எண்ணுக்கு பணம் அனுப்பிவிட்டால், பயனர் தனது வங்கியிடமிருந்து பணத்தைத் திரும்பக் கேட்டு பெற முடியும். புதிய வழிகாட்டுதல்களின் கீழ், NPCI இன் முன் ஒப்புதல் இல்லாமல் வங்கிகள் இப்போது சில நிராகரிக்கப்பட்ட கட்டணங்களை தாங்களாகவே எடுத்து செயல்படுத்த முடியும்.
பழைய க்ளெய்ம்களை தீர்ப்பது எளிதாக இருக்கும்
NPCI அறிமுகப்படுத்தும் புதிய UPI கட்டண முறை, முன்னர் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் நிவாரணம் அளிக்கும். புதிய விதிகளில், பழைய நிராகரிக்கப்பட்ட வழக்குகளை மறுபரிசீலனை செய்து தீர்த்து வைக்கும் சுதந்திரம் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்போது உள்ள நடைமுறை என்ன?
தற்போது, ஒரு கணக்கு அல்லது UPI ஐடி பேருக்கான வங்கியின் டிஸ்ப்யூட் ரெக்வஸ்ட் (சார்ஜ்பேக்) மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டால், NPCI இன் அமைப்பு "நெகடிவ் சார்ஜ்பேக் ரேட்ஸ்" (காரணக் குறியீடுகள் CD1/CD2) -ஐ காரணமாக காட்டி அடுத்தடுத்த முயற்சிகளைத் தானாகவே தடுக்கிறது. வாடிக்கையாளரின் கோரிக்கை நியாமானதாக கருதும் வங்கிகள், அந்த டிஸ்பியூட்டை "ஒயிட்லிஸ்ட்" செய்ய NPCI-யிடம் கைமுறையாக மனு அளிக்க வேண்டும். இந்த செயல்முறை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், இதனால் தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
Chargeback என்றால் என்ன?
ஓரு பயனர் UPI மூலம் பணம் செலுத்தி அந்த பரிவர்த்தனை தோல்வியடைந்தாலோ அல்லது நீங்கள் ஏமாற்றப்பட்டாலோ, பயனர் தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான செயல்முறைக்கான பொறுப்பை வங்கி எடுத்துக்கொள்வது சார்ஜ்பேக் எனப்படுகிறது.
UPI Payment Time: UPI மூலம் பணம் செலுத்துவது மிகவும் எளிதாகிவிட்டது
NPCI UPI-யின் கட்டண முறைகளை மாற்றியுள்ளது. முன்னதாக இந்த முறையில் பணம் செலுத்த 30 வினாடிகள் ஆகும். இப்போது அது 10-15 வினாடிகளுக்குள் செய்யப்படும். புதிய விதி ஜூன் 16, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம், NPCI, வங்கிகள் மற்றும் கட்டண செயலிகள், பணம் செலுத்தும் செயல்முறை வெறும் 15 வினாடிகளில் செய்யப்படும் வகையில் தங்கள் அமைப்புகளை மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. ஏப்ரல் 26, 2025 அன்று, செயல்திறனை மேம்படுத்த UPI பரிவர்த்தனைகளின் ரெஸ்பான்ஸ் நேரத்தைக் குறைக்க முயற்சிப்பதாக NPCI கூறியது. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ