)
Aadhaar card address update : இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் UIDAI, ஆதார் அட்டையின் முகவரியை இலவசமாக மேம்படுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. ஆதார் அட்டையின் உண்மை தன்மையை மேம்படுத்தவும், ஆதார் கார்டு வைத்திருக்கும் பொதுமக்களின் அடிப்படை தகவல்கள் உண்மை தன்மை உறுதி செய்யும் வகையிலும் ஆதார் அட்டை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் முகவரியை மேம்படுத்த வேண்டும் என UIDAI அறிவித்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள அதிகார சபை (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இலவசமாக முகவரியை மேம்படுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 14, 2025 வரை நீட்டித்துள்ளது. இந்த தேதிக்குப் பிறகு, ஆதார் அட்டையில் எந்தவொரு மாற்றத்திற்கும் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு, டிசம்பர் 14, 2024 என இருந்த காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் இலவசமாக தங்கள் அடையாள சான்று (PoI) மற்றும் முகவரி சான்று (PoA) போன்றவற்றை மேம்படுத்த முடியும்.
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி?
* myAadhaar Portal-க்கு செல்லவும்.
* உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
* OTP (ஒரு முறை கடவுச்சொல்) உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்.
* OTP மூலம் லாக் இன் செய்யவும்.
* "Document Update" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* JPEG, PNG அல்லது PDF படிவத்தில் தேவையான ஆவணங்களை 2 MB-க்கு மேல் இல்லாமல் அப்லோட் செய்யவும்.
* "Submit" கிளிக் செய்யவும்.
* 14 இலக்க Update Request Number (URN) உங்களுக்கு வழங்கப்படும், இதன் மூலம் அப்ளிகேஷன் நிலையை ட்ராக் செய்யலாம்.
முகவரியை மேம்படுத்த தேவையான ஆவணங்கள்
* அடையாள சான்று (Proof of Identity - PoI):
* டிரைவிங் லைசென்ஸ்
* PAN கார்டு
* புகைப்படத்துடன் கூடிய பள்ளி வெளியேறும் சான்றிதழ்
* வேறு எந்த அரசு வழங்கிய அடையாள சான்றும் ஏற்கப்படும்.
* முகவரி மட்டும் மாற்ற (Proof of Address - PoA):
* கடந்த 3 மாத மின்சார, நீர், எரிவாயு அல்லது தொலைபேசி பில்
* வங்கி அல்லது தபால் பாஸ்புக்
* வாடகை ஒப்பந்தம்
* பிராபர்டி டேக்ஸ் ரசீது
* அடையாளம் & முகவரி இரண்டையும் மாற்ற:
* ரேஷன் கார்டு
* வோட்டர் ஐடி கார்டு
* பாஸ்போர்ட்
ஆதார் அட்டையின் முக்கியத்துவம்
* 12 இலக்க தனித்துவ எண், இது UIDAI-ஆல் வழங்கப்படுகிறது.
* பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவை இதில் உள்ளது.
* அரசு திட்டங்கள், வங்கி கணக்கு திறத்தல், ஐடி ரிட்டர்ன் தாக்கல், சப்ஸிடி பெறுதல் போன்றவற்றிற்கு ஆதார் கார்டு கட்டாயமாக தேவை.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
* ஜூன் 14, 2025 க்குள் இலவசமாக முகவரியை மேம்படுத்திக் கொள்ளவும்.
* ரூ. 50 கட்டணம் தவிர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கவும்.
* URN எண் மூலம் ஆதார் அப்டேட் நிலையை myAadhaar Portal-ல் ட்ராக் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ