PPF கணக்கில் இதை செய்ய இனி கட்டணம் இல்லை: நிதி அமைச்சர் அளித்த குட் நியூஸ்

PPF Latest News: பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாமினி விவரங்களை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ இனி பிபிஎஃப் உறுப்பினரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 3, 2025, 03:10 PM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளதா?
  • முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
  • நிதி அமைச்சர் அளித்த தகவல்.
PPF கணக்கில் இதை செய்ய இனி கட்டணம் இல்லை: நிதி அமைச்சர் அளித்த குட் நியூஸ்

Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) கணக்கு வைத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். பிபிஎஃப் கணக்கு குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

பொது வருங்கால வைப்பு நிதி 

பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாமினி விவரங்களை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ இனி பிபிஎஃப் உறுப்பினரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. ஏனெனில் அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகள் 2018 இல் (Government Savings Promotion General Rules 2018) இதற்கான  தேவையான மாற்றங்கள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கின்றன.

"அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகள், 2018 இல், அட்டவணை II இல், 'சேவைகளுக்கு வசூலிக்க வேண்டிய கட்டணம்' என்பதன் கீழ், '(b) நாமினி நியமனத்தை ரத்து செய்தல் அல்லது மாற்றுதல் - ரூ.50' என்ற வார்த்தைகள் மற்றும் எண்கள் நீக்கப்படும்," என்று நிதி அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வந்துள்ளது.

Finance Minister Nirmala Sitharaman

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 'X' பதிவில், PPF கணக்குகளில், நாமினி விவரங்களைப் புதுப்பித்தல்/மாற்றியமைத்தல்" -க்காக நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் இந்தக் கட்டணம் குறித்து சமீபத்தில் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

“PPF கணக்குகளுக்கான நாமினி விவரத்தைப் புதுப்பிப்பதற்கு ஆகும் கட்டணங்களை நீக்க, அரசாங்க சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகள் 2018 -இல் 02/4/25 தேதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு மூலம் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்

PPF Account: பிபிஎஃப் கணக்குகளுக்கு நாமினி அவசியம்

அனைத்து பிபிஎஃப் கணக்குகளுக்கும் நாமினி விவரங்கள் முக்கியமானவை. ஏனெனில் கணக்கு வைத்திருப்பவர் திடீரென இறந்தால், கணக்கில் உள்ள நிதி நாமினியாக நியமிக்கப்பட்ட பயனாளிக்கு மாற்றப்படும்.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வங்கி திருத்த மசோதா 2025, பிபிஎஃப் கணக்குதாரரின் பணம், பாதுகாப்பான காவல் மற்றும் பாதுகாப்பு லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை திரும்பி அளிக்க, பிபிஎஃப் உறுப்பினர் 4 நபர்களை நாமினிகளாக பரிந்துரைக்க அனுமதிக்கிறது என்று நிதி அமைச்சர் மேலும் கூறினார்.

அரசாங்க ஆதரவு திட்டமான PPF -இல், வைப்புத்தொகைகளுக்கு 15 ஆண்டுகள் லாக் இன் காலம் உள்ளது. பிபிஎஃப் தற்போது 7.1% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது ஆண்டுதோறும் கூட்டு வட்டியாக அதிகரிக்கின்றது. EPF மற்றும் பல சிறிய சேமிப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​இந்த வருமான விகிதம் மிதமானதாகத் தெரிகிறது. ஆனால் இதில் கூட்டு வட்டி சலுகைகள் கிடைப்பதோடு இதில் வரி இல்லா வருமானமும் கிடைக்கின்றது. 

இந்த அம்சங்கள் PPF ஐ ஒரு பயனுள்ள, முதலீட்டை சீராக அதிகரிக்கக்கூடிய முதலீட்டு திட்டமாக பரிமளிக்கச் செய்கின்றன. பிபிஎஃப் மற்றும் பிற சிறிய சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசாங்கம் அவ்வப்போது மதிப்பாய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு மெகா ஓய்வூதிய உயர்வு: அரசு மும்முரம், விரைவில் குட் நியூஸ்

மேலும் படிக்க | Mutual Fund: பங்கு சந்தை சரிவால்... கடந்த ஒரு ஆண்டில் நஷ்டத்தை கொடுத்த ஃபண்டுகள் விபரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News