)
LPG Gas Cylinder Rate: செப்டம்பர் மாத முதல் நாளே நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மலிவாகியுள்ளது. எனினும், வீட்டு உபயோக எல்பிஜி விலைகள் மாறவில்லை.
- எண்ணெய் சந்தைப்படுத்தல் பொதுத்துறை நிறுவனங்கள் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை திருத்தியுள்ளன.
- ஒரு யூனிட்டுக்கு விலை ரூ.51.5 குறைத்துள்ளது. புதிய விலைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வருகின்றன.
- இந்த முடிவிற்குப் பிறகு, ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிக வர்த்தகர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
- இருப்பினும், இந்த முறையும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
- வணிக எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது (19 கிலோ).
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) வலைத்தளத்தின்படி, இந்த குறைப்புக்குப் பிறகு, சென்னையில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ₹1,738 ஆக உள்ளது.
- விலை குறைப்புக்கு பிறகு, தற்போது சென்னை முதல் டெல்லி வரை வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என இங்கே காணலாம்.
முக்கிய நகரங்களில் விலை விவரம்:
சென்னை: ரூ.1,738
டெல்லி: ரூ.1,580
கொல்கத்தா: ரூ.1,684
மும்பை: ரூ.1,531.5
இன்று முதல், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் சேவை வழங்குநர்கள் போன்ற வணிகங்கள் எல்பிஜி ரீஃபில்லுக்கு செலுத்த வேண்டிய தொகை இதுதான்.
வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ஐந்தாவது முறையாக தொடர்ச்சியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னர், வணிக எல்பிஜி விலைகள் சில மாதங்களாக தொடர்ந்து அதிகமாகவே இருந்தன.
- வீட்டு உபயோக 14.2 கிலோ வீட்டு எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- இதன் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறனர்.
- வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டால்தான் பொது மக்களுக்கு நேரடி நிவாரணம் கிடைக்கும்.
முக்கிய பெருநகரங்களில் வீட்டு உபயோக 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை விவரங்கள் இதோ:
சென்னை: ரூ.868.5
டெல்லி: ரூ.853
மும்பை: ரூ.852.5
கொல்கத்தா: ரூ.879
தற்போது, அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை வீட்டு உபயோக மற்றும் வணிக எல்பிஜி விலைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, சர்வதேச அளவுகோல் விகிதங்கள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் திருத்தங்களை செய்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ