)
LPG Gas Cylinder Rate: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 25% வரி அறிவிப்பை தொடர்ந்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பொருளாதார ரீதியாக நாட்டில் ஒரு சவாலான சுழல் உள்ளது. இந்த நிலையில் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவில் சற்று நிம்மதி அளிக்கும் விதமாக ஒரு செய்தி வந்தது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மக்களுக்கு ஒரு நிவாரண செய்தியை வழங்கியுள்ளன.
எல்பிஜி சிலிண்டர் விலை குறைந்தது
- வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் 1, 2025 முதல், 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.33.50 குறைக்கப்பட்டுள்ளது.
- இந்த முடிவிற்குப் பிறகு, ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிக வர்த்தகர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
- இருப்பினும், இது சாதாரண மக்களின் சமையலறைக்கு எந்த நன்மையையும் அளிக்காது.
LPG Commercial Cylinder: வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை
- விலை குறைப்புக்கு பிறகு, தற்போது சென்னை முதல் டெல்லி வரை வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என இங்கே காணலாம்.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) வலைத்தளத்தின்படி, இந்த குறைப்புக்குப் பிறகு, சென்னையில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ₹1,823.50 -இலிருந்து ₹1,790 ஆகக் குறையும்.
முக்கிய நகரங்களில் விலை விவரம்:
ஏழாவது தொடர்ச்சியான விலை குறைப்பு
- கடந்த சில மாதங்களில் வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ந்து ஏழாவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ₹6 என்ற சிறிய அதிகரிப்பு இருந்தது.
- இருப்பினும், மற்ற அனைத்து மாதங்களிலும் இதன் விலைகள் குறைந்துள்ளன.
- வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை ஜூலை மாதத்தில், 8.50 குறைக்கப்பட்டது, ஜூன் மாதத்தில் இந்த விலை குறைப்பு ₹24 ஆகவும், ஏப்ரல் மாதத்தில் ₹41 ஆகவும், பிப்ரவரியில் குறைப்பு ₹7 ஆகவும் இருந்தது.
LPG Domestic Cylinder: வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை
- வீட்டு உபயோக 14.2 கிலோ வீட்டு எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
- வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செயப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- எனினும், இதன் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறனர்.
- வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டால் பொது மக்களுக்கு நேரடி நிவாரணம் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ