)
Punjab National Bank: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) செவ்வாயன்று அனைத்து சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்ச சராசரி இருப்பு (MAB) பராமரிக்காததற்கான அபராதக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த செய்தி பிஎன்பி வாடிக்கையாளற்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.
PNB: பெண்கள், விவசாயிகளுக்கு முக்கியத்துவம்
ஜூலை 1, 2025 முதல், பெண்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் போன்ற முக்கிய பிரிவுகளுக்கு உதவுவதற்காக இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கனரா வங்கிக்குப் பிறகு அனைத்து சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) பராமரிக்காததற்கான அபராதக் கட்டணங்களை நீக்கிய இரண்டாவது பொதுத்துறை வங்கியாக PNB மாறியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
“ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த வாடிக்கையாளர் முன்னுரிமை முயற்சி, குறிப்பாக பெண்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் போன்ற முன்னுரிமைப் பிரிவுகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பு பராமரிப்பு அபராதங்களின் மன அழுத்தம் இல்லாமல் வங்கி சேவைகளை எளிதாகவும் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும் அணுகுவதை இது உறுதி செய்கிறது.” என PNB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Minimum Average Balance: குறைந்தபட்ச சராசரி இருப்பு
குறைந்தபட்ச சராசரி இருப்பு (MAB) பராமரிக்காததற்கான அபராதக் கட்டணத்தை நீக்குவதற்கான முடிவு, அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவைக்கான PNB -யின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ அசோக் சந்திரா கூறினார். “இந்த கட்டணங்களைத் தள்ளுபடி செய்வது வாடிக்கையாளர்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் முறையான வங்கிச் சூழலில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
What is MAB? குறைந்தபட்ச சராசரி இருப்பு என்றால் என்ன?
MAB, அதாவது குறைந்தபட்ச சராசரி இருப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பொதுவாக மாதந்தோறும், வாடிக்கையாளர்ன் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டும் என வங்கி நிர்ணயிக்கும் ஒரு சராசரி தொகையாகும்.
SMS, ATM: எஸ்எம்எஸ், ஏடிஎம் கட்டணங்கள் இன்னும் உள்ளன
எஸ்எம்எஸ் எச்சரிக்கை (SMS alert) மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனை (ATM Transaction) உள்ளிட்ட பிற கட்டணங்கள் தொடர்ந்து வசூலிக்கப்படும். நிகழ்நேர பரிவர்த்தனை எச்சரிக்கைகள், கணக்கு செயல்பாட்டு அறிவிப்புகள் மற்றும் பிற புதுப்பிப்புகளை (உதாரணமாக, இருப்பு விசாரணைகள், மினி அறிக்கைகள்) வழங்கும் எஸ்எம்எஸ் எச்சரிக்கை சேவைகளுக்கு பிஎன்பி பெயரளவு கட்டணத்தை வசூலிக்கிறது.
பிஎன்பி ஏடிஎம்களில் பிஎன்பி டெபிட் கார்டுகளில் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளை PNB வழங்குகிறது. இதில் பணம் எடுப்பது, இருப்பு விசாரணைகள் மற்றும் பிற சேவைகள் அடங்கும். இலவச பரிவர்த்தனை வரம்பு முடிந்ததும், வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் விதிக்கப்படும்.
ஜூலை மாத முதல் நாளான நேற்று, குறைந்தபட்ச சராசரி இருப்பு (MAB) பராமரிக்காததற்கான அபராதக் கட்டணத்தை நீக்குவதாக வங்கி அளித்த அறிவிப்பு பிஎன்பி வாடிக்கையாளற்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ