RBI new rule : நாடு முழுவதும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகளுக்கு ஒரே நாளில் பணம் நடைமுறை அக்டோபர் 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி காசோலைகள் தீர்வு காணும் முறை (Cheque Clearing System) அறிமுகப்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய முறையின் கீழ், பணப் பரிமாற்றத்திற்காக இனி பல மணி நேரம், பல நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இனி வெறும் சில மணி நேரங்களில் காசோலை டெபாசிட் செய்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய காசோலை தீர்வு முறை என்றால் என்ன?
இதுவரை காசோலைகள் குறிப்பிட்ட நேரத்தில் குழுக்களாக (batches) மட்டுமே தீர்வு காணப்பட்டன. இந்த செயல்முறை இப்போது கைவிடப்பட்டு, தொடர்ச்சியான, கிட்டத்தட்ட ரியல்டைம் தீர்வு (continuous, near real-time settlement) முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள் என்ன?
பழைய முறையில் 1 முதல் 2 வணிக நாட்கள் (T+1) எடுத்துக் கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் குழுக்களாக (batches) காசோலைகளுக்கான பணம் டெபாசிட் செய்யப்பட்டன. இவை பணப்பரிமாற்றத்தை தாமதப்படுத்தியது. இப்போது நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய முறையில் காசோலை டெபாசிட் செய்யப்பட்ட சில மணிநேரங்களில், அதாவது காசோலை டெபாசிட் செய்யப்பட்ட அதே நாளில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
புதிய காசோலை முறை எவ்வாறு செயல்படும்?
காசோலைகளைச் சமர்ப்பித்தல்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சமர்ப்பிக்கப்படும் காசோலைகள், ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாகத் தீர்வுக்காக அனுப்பப்படும்.
வங்கித் தீர்வுகள்: வங்கிகளுக்கு இடையேயான தீர்வு காணும் செயல்முறை காலை 11 மணி முதல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை நடக்கும்.
கட்டாய ஒப்புதல் (Auto-Approval):
முதல் கட்டம் (Phase 1: அக்டோபர் 4, 2025 – ஜனவரி 2, 2026): காசோலை பணம் செலுத்தும் வங்கி (Paying Bank) மாலை 7 மணிக்குள் காசோலையை அங்கீகரிக்க (Honour) அல்லது நிராகரிக்க (Dishonour) வேண்டும். வங்கி பதிலளிக்கவில்லை என்றால், காசோலை தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிடும் (Auto-Approved).
இரண்டாம் கட்டம் (Phase 2: ஜனவரி 3, 2026 முதல்): இந்த கட்டத்தில், வங்கிகள் காசோலையைச் சரிபார்க்க மூன்று மணிநேரம் மட்டுமே அவகாசம் பெறும். உதாரணமாக, காலை 10 மணிக்கு வரும் காசோலைக்கு பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்க வேண்டும்.
வாடிக்கையாளருக்கு பணம்: தீர்வு செயல்முறை முடிந்த பிறகு, காசோலையைச் சமர்ப்பித்த வங்கி (Presenting Bank) வாடிக்கையாளரின் கணக்கில் ஒரு மணி நேரத்திற்குள் பணத்தைச் செலுத்தும்.
வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?
இந்த புதிய முறை வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. பணம் உங்கள் கணக்கில் சில மணிநேரங்களிலேயே வந்து சேர்வதால், அதை நீங்கள் மிக வேகமாகப் பயன்படுத்த முடியும். வணிக நிறுவனங்களுக்கான பரிமாற்றங்களும், பணம் செலுத்துவதும் விரைவாக முடிவடையும். இந்த விதிகள் டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் உள்ள RBI-இன் மூன்று தீர்வு மையங்களுக்கு கீழ் வரும் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் பொருந்தும் என்பதால், நாடு முழுவதும் ஒரே சீரான வேகத்தில் காசோலைகள் தீர்வு காணும். காசோலையின் நிலை என்ன என்பதைத் தெளிவாகவும் விரைவாகவும் தெரிந்துகொள்ள முடியும்.
காசோலை தீர்வு முறை வரலாறு
காலப்போக்கில் காசோலை தீர்வு முறை எவ்வாறு மேம்படுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
1980-களுக்கு முன்: கையேடு முறையில் (Manual) தீர்வு காணப்பட்டு, ஒரு வாரம் வரை ஆனது.
1980-களில்: MICR (Magnetic Ink Character Recognition) அறிமுகத்தால் உள்ளூர் தீர்வு 1-3 நாட்களாகக் குறைந்தது.
2008: CTS (Cheque Truncation System) அறிமுகத்தால் தீர்வு நேரம் ஒரு நாளாகக் குறைந்தது.
2021: நாடு தழுவிய கட்டமைப்பு மூலம் நாடு முழுவதும் T+1 என்ற ஒருநாள் தீர்வு முறை கொண்டு வரப்பட்டது.
2025: தொடர்ச்சியான தீர்வு முறை மூலம் தீர்வு நேரம் சில மணிநேரமாகக் குறைக்கப்படுகிறது.
இந்த புதிய முறையால் வங்கிகளுக்கு இடையில் ஏற்படும் இடர்களும் குறையும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது. வாடிக்கையாளர்கள் இந்த மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று RBI அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ஆர்பிஐ புதிய விதி! வாரிசுகளுக்கு குட் நியூஸ் - சொத்து, பணத்தை ஈஸியாக எடுக்கலாம்
மேலும் படிக்க | 3% உயர்ந்தது அகவிலைப்படி: ஊதிய உயர்வு யாருக்கு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ
மேலும் படிக்க | ஆயுள் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்களே உஷார்!! இந்த ஆவணம் இல்லையென்றால் ஓய்வூதியம் இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









