)
Central Government Health Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி வந்துள்ளது. CGHS பயனாளிகளுக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் விகிதங்களை திருத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. CGHS இன் கீழ் வசதிகளை மேம்படுத்தக் கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
அமைச்சர் மன்சுக் மண்டவியா கொடுத்த குட் நியூஸ்
- CGHS இன் கீழ் வழங்கப்படும் சுகாதார சேவைகளின் விகிதங்களை அரசாங்கம் விரைவில் திருத்தும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கவுன்சில் கூட்டு ஆலோசனை இயந்திரத்தின் (NC JCM) ஊழியர்கள் தரப்பு, CGHS வசதிகள் தொடர்பான மனுக்கள் மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, CGHS சேவைகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்குமாறு NC JCM நிதியமைச்சரை வலியுறுத்தியது.
- ஆகஸ்ட் 10, 2023 அன்று மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் 162வது அறிக்கையில், நாடாளுமன்ற நிலைக்குழு, CGHS சேவைகளை மேம்படுத்த மனுக்கள் மீதான பல நடவடிக்கைகளை பரிந்துரைத்திருந்தது.
- தற்போதைய சந்தை நிலவரங்களை பிரதிபலிக்கும் வகையில் CGHS விகிதங்களை திருத்துவது குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாகும்.
இதற்கு முன் விகிதங்கள் எப்போது திருத்தப்பட்டன?
- CGHS விகித திருத்தத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு பிப்ரவரியில் அரசாங்கம் CGHS விகிதங்களை திருத்தியது.
- இப்போது விகிதங்கள் மீண்டும் திருத்தப்படக்கூடும் என அமைச்சரின் கருத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.
- இந்த அறிக்கை, அரசாங்கம் ஊழியர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருவதையும், CGHS ஐ மிகவும் பயனுள்ளதாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதில் தீவிரமாக செயல்பட்டு வருவதையும் குறிக்கிறது.
CGHS விகித திருத்தத்திம் பயனாளிகளுக்கு எவ்வாறு பயனளிக்கும்?
- CGHS விகிதங்கள் தனியார் மருத்துவமனைகளுடன் ஒத்துப்போகவில்லை என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களால் தொடர்ந்து கோரப்பட்டு வருகிறது.
- இதன் காரணமாக பல மருத்துவமனைகள் பயனாளிகளுக்கு சேவைகளை அளிக்க தயக்கம் காட்டுகின்றன.
- குறிப்பாக பெருநகரங்கள் மற்றும் பெரிய தனியார் மருத்துவமனைகளில், மிகக் குறைந்த CGHS விகிதங்கள் காரணமாக சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை பெறுவதில் சிக்கல்கள் உள்ளன.
- பிப்ரவரியில் விகித திருத்தம் இருந்தபோதிலும், இந்த வேறுபாடு இன்னும் நீடிக்கிறது.
- இப்போது அமைச்சரின் சமீபத்திய அறிக்கை, அரசாங்கம் இந்த சமத்துவமின்மையை மேலும் நீக்க விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதற்காக அரசாங்கம் அவ்வப்போது பல்வேறு வழிகாட்டுதல்களை மாற்றியமைத்து சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது.
பிப்ரவரி 2024 இல் ஏற்பட்ட CGHS மாற்றங்கள்
- பிப்ரவரி 2024 இல், சுகாதார அமைச்சகம் CGHS தொகுப்பு விகிதங்களை தற்போதைய சந்தை விகிதங்களுடன் சீரமைக்க முயற்சித்தது.
- 432 மருத்துவ நடைமுறைகளின் விகிதங்கள் அதிகரிக்கப்பட்டன.
- அதே போல் மருந்துகள் மற்றும் பரிசோதனை சேவைகளுக்கான கட்டண விகிதங்களும் யதார்த்தத்திற்கு ஏற்றவாறு மாற்றப்படன.
- இது தவிர, CGHS இல் பதிவுசெய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் நிலுவைத் தொகையை செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும் சேவையின் தரத்தை உறுதி செய்யவும் சுகாதார அமைச்சகம் ஆன்லைன் பில்லிங் மற்றும் கட்டண செயல்முறையை மேம்படுத்தியது.
கடந்த ஒரு வருடத்தில் CGHS செய்துள்ள பிற முக்கிய சீர்திருத்தங்கள்
கடந்த ஒரு வருடத்தில் CGHS தொடர்பாக பல நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானவை இதோ:
- CGHS அட்டைக்கான விண்ணப்ப செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது.
- ‘CGHS Beneficiary App’ மேம்படுத்தப்பட்டுள்ளது.
-‘CGHS குறை தீர்க்கும் போர்டல்’ (CGHS Grievance Redressal Portal) புகார்களை நேர்த்தியுடன் விரைவாக தீர்க்கும் வகையில் மேம்படுத்தப்படுள்ளன.
- மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கான பில்லிங் செயல்பாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
- இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் CGHS ஐ நம்பகமான, வெளிப்படையான மற்றும் பயனாளிகளை மையமாகக் கொண்ட சேவை அமைப்பாக உருவாக்குவதாகும்.
மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் என்ன?
- சந்தைக்கு ஏற்ப விகிதங்களை உருவாக்கவும், குறை தீர்க்கும் முறையை மேம்படுத்தவும், குழுவில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சேவை வழங்குநர்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும் ஊழியர்கள் அரசாங்கத்திடம் கேட்டு வருகின்றனர்.
- பிப்ரவரியில் செய்யப்பட்ட விகித திருத்தம் ஓரளவு நிவாரணத்தை அளித்தது.
- ஆனால் நிலைமை இன்னும் முழுமையாக திருப்திகரமாக இல்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
- மத்திய அமைச்சரின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு, அடுத்த சில மாதங்களில் CGHS இன் விகிதங்களில் மற்றொரு திருத்தம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதனுடன், சேவையின் தரத்திலும் மேம்படுத்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
- இது மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஒரு பெரிய நடவடிகையாக இருக்கும்.
CGHS விகித திருத்தம்m சுருக்கமாக....
- கடந்த ஒரு வருடத்தில் CGHS-இல் ஏற்பட்டுள்ள விரிவான மாற்றங்கள், அரசாங்கம் சுகாதார சேவைகளில் தீவிரமாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
- CGHS விகிதங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட வேண்டியது அவசியம்.
- பயனாளிகள் உண்மையான பலன்களைப் பெறும்போது மட்டுமே சேவையின் உண்மையான பயன்பாடு அதிகரிக்கும்.
- மத்திய அரசு ஊழியர்கள் இப்போது அடுத்த சாத்தியமான விகித திருத்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ