SBI Amrit Vrishti Scheme: மூத்த குடிமக்களுக்கு பலன் அளிக்கக்கூடிய பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் வழக்கத்தில் உள்ளன. வங்கிகள், தபால் அலுவலகங்களில் அதிக வட்டி விகிதங்களுடன் வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு என பிரத்யேக திட்டங்களும் உள்ளன. அந்த வகையில், முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு அதிக பலன்களை வழங்கும் வகையில், அம்ரித் விருஷ்டி திட்டம் செயல்பாட்டில் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலையான டெபாசிட் திட்டமான இதில் மூத்த குடிமக்களுக்கு, மற்ற வாடிக்கையாளர்களை விட அதிக வட்டி கொடுக்கப்படுகிறது. குறைந்த காலத்தில் பொருளாதார பலன்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பான பங்களிப்பை வழங்கும். இந்த திட்டம் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை திறந்திருக்கும். இந்த திட்டத்தில் சேர இதுவே கடைசி நாள் ஆகும். நீங்கள் நிலையான டெபாசிட் நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை வருமானம் பெற்றாலும் வரி சேமிப்பு கிடைக்கும். இது வருமான வரிச்சட்டம் 80C பிரிவின்படி வழங்கப்படுகிறது.


அம்ரித் விருஷ்டி திட்டம்


அம்ரித் விருஷ்டி திட்டத்தில் மூத்த குடிமக்கள் 444 நாள்கள் டெபாசிட் செய்யலாம். இதில் 7.75 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. நீங்கள் உள்நாட்டு சில்லறை டேர்ம் டெபாசிட், ரூ.3 கோடிக்கும் குறைவான வெளிநாடுவாழ் இந்தியர்களின் டேர்ம் டெபாசிட், புதிய மற்றும் புதுபிக்கப்பட்ட டெபாசிட்கள் ஆகியவை இந்த திட்டத்தில் பயன்பெறலாம். 


மேலும் படிக்க | டிசம்பர் 15: அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு... யார் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வேண்டும்?


நீங்கள் அதிகபட்சமாக ரூ.3 கோடி வரையும், குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரையும் டெபாசிட் செய்யலாம். நீங்கள் திட்டத்தின் முதிர்ச்சி காலத்திற்கு முன்னரே பணத்தை எடுக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 1 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அந்த வகையில், முத்த குடிமக்களான நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்தால், எவ்வளவு வட்டியை பெறுவீர்கள், மொத்த தொகை எவ்வளவு வரும் என்பதை இங்கு காணலாம்.


எவ்வளவு முதலீடு...? எவ்வளவு கிடைக்கும்...?


அம்ரித் விருஷ்டி திட்டத்தில் நீங்கள் ரூ.4 லட்சம் ரூபாயை முதலீடு செய்தீர்கள் என்றால், 444 நாள்களுக்கு பின் அதாவது திட்டம் முதிர்ச்சியடைந்த பின் உங்களுக்கு 39 ஆயிரத்து 718 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இதன்மூலம் மொத்தம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 719 ரூபாய் கிடைக்கும்.


அதேபோல், நீங்கள் ரூ.6 லட்சம் வரை முதலீடு செய்தீர்கள் என்றால் 59 ஆயிரத்து 577 ரூபாய் வட்டியாக கிடைக்கும் இதனால், 6 லட்சத்து 59 ஆயிரத்து 577 ரூபாய் வரை முதிர்ச்சி தொகை கிடைக்கும். நீங்கள் 8 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் 79 ஆயிரத்து 436 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இதனால், 8 லட்சத்து 79 ஆயிரத்து 436 ரூபாயை நீங்கள் முதிர்ச்சி தொகையாக பெறலாம்.


எஸ்பிஐ மற்ற FD திட்டங்கள்


அந்த வகையில், நீங்கள் திட்டம் முதிர்ச்சி அடைவதற்கு முன்னர், அதாவது 444 நாள்களுக்கு முன்னரே நீங்கள் இதில் இருந்து பணத்தை வெளியே எடுக்கிறீர்கள் என்றால் 1% வரை பிடித்தம் செய்யப்படும் என்றாலும், நீங்கள் 5 லட்சம் ரூபாய்க்குள் பணத்தை வெளியே எடுத்தால் 0.50% மட்டுமே பிடித்தம் செய்யப்படும்.


எஸ்பிஐ இதுபோன்ற பல்வேறு நிலையான டெபாசிட் திட்டங்களை மூத்த குடிமக்களுக்கு வழங்கி வருகிறது. 1 வருட FD திட்டத்தில் 7.30% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் ஒரு வருடத்தில் 2 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், முதிர்ச்சி தொகையாக 2 லட்சத்து 15 ஆயிரத்து 5 ரூபாயை பெறுவீர்கள். அதே நேரத்தில் 3 வருட FD திட்டத்திற்கு 7.25% வட்டி விகிதம் கிடைக்கும். இதில் 2 லட்சத்தை முதலீடு செய்து, முதிர்ச்சி தொகையாக 2 லட்சத்து 30 ஆயிரத்து 681 ரூபாயை பெறுவீர்கள். மேலும், 5 வருட FD திட்டத்திற்கு 7.50% வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இதனால் மொத்தமாக 2 லட்சத்து 89 ஆயிரத்து 989 ரூபாயை பெறுவீர்கள்.


மேலும் படிக்க | EPFO: அதிகபட்சமாக உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இபிஎஸ் ஓய்வூதிய கால்குலேட்டர் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ