ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Ration Card e-KYC: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கட்டாயம் e-KYC செய்ய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 26, 2025, 03:54 PM IST
  • e-KYC ஐ வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
  • e-KYC ஏன் கட்டாயம்?
  • மொபைல் மூலம் e-KYC செய்து முடிப்பது எப்படி?
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Ration Card e-KYC: ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு தற்போது மத்திய மாநில அரசு மலிவு விலையில் மளிகை பொருட்களை விநியோகித்து வருகிறது. அந்த நிலையில், தற்போது ரேஷன் கார்டுதாரர்களின் மின்னணு சரிபார்ப்பைச் செய்வதில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி டெல்லியில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கட்டாயம் e-KYC செய்து முடிக்க வேண்டும், இல்லையெனில் அரசாங்கத் திட்டங்களின் பலன்களை பெற முடியாமல் போகலாம். மேலும் இதன் மூலம் மகிளா சம்ரிதி யோஜனா, ஆயுஷ்மான் பாரத் கார்டு மற்றும் உஜ்வாலா யோஜனா போன்ற முக்கியமான வசதிகளையும் பெற முடியாமல் போகலாம். எனவே ரேஷன் அட்டைதாரர்கள் e-KYC ஐ வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

இந்நிலையில் நீங்களும் e-KYC செய்ய வேண்டுமானால் மொபைல் செயலியைப் பயன்படுத்தி அல்லது அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று e-KYC-ஐ எளிதாகச் செய்துக்கொள்ளலாம். எனவே இந்த செயல்முறையை பூர்த்தி செய்து அரசாங்கத் திட்டங்களின் பலன்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

e-KYC ஏன் கட்டாயம்?
கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் ரேஷன் கார்டுதாரர்களின் e-KYC சரிபார்ப்பு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சரிபார்ப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுகளில், டெல்லி ரேஷன் கார்டுதாரர்களின் நிலைமை நிறைய மாறியிருக்கிறது. பலருக்கு அரசு வேலைகள் கிடைத்திருக்கலாம். சிலர் உயிரிழந்திருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், ரேஷன் கார்டுகளின் பட்டியலைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம். இத்தகைய சூழ்நிலையில், ரேஷன் கார்டு பட்டியலைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்லியை ஆண்டு வரும் பாஜக அரசு இந்த செயல்முறையை உடனடியாக முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மொபைல் மூலம் e-KYC செய்து முடிப்பது எப்படி?
1. வீட்டிலிருந்தப் படி மொபைலில் இருந்து e-KYC செய்ய விரும்பினால், மிகவும் எளிதானது.
2. 'Mera KYC' மற்றும் 'AadhaarFaceRD' செயலிகளைப் பதிவிறக்கவும்.
3. பயன்பாட்டைத் திறந்து, டெல்லி மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பிடத்தைச் சரிபார்க்கவும்.
4. ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தொடரவும்.
5. உங்கள் தகவல் திரையில் தோன்றும், Face e-KYC பொத்தான் கீழே தென்படும்.
6. நீங்கள் பொத்தானை அழுத்தியவுடன், கேமரா வரும், அதில் உங்கள் முகத்தை வட்ட வட்டத்திற்குள் கொண்டு கண்களை சிமிட்டவும்.
7. அந்த வட்டம் பச்சை நிறமாக மாறியதும் உங்கள் KYC சரிபார்ப்பு நிறைவடையும்.

மொபைல் மூலம் e-KYC செய்ய முடியவில்லை என்றால் ரேஷன் கடைக்கு சென்று e-KYC செய்து கொள்ளலாம். 

POS இயந்திரம் மூலம் கட்டைவிரல் அல்லது கைரேகைகள் மூலம் e-KYC பூர்த்தி செய்யப்படும்.

உங்கள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டையை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.

e-KYC செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?

நீங்கள் e-KYC செய்து, செயல்முறை முடிந்ததா இல்லையா என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

'Mera KYC' மொபைல் செயலியைத் திறக்கவும். மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, இருப்பிடத்தைச் சரிபார்க்கவும்.
ஆதார் எண்ணை உள்ளிட்டு, OTP மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்.
உங்கள் ஸ்டேட்டஸில் 'Y' தோன்றினால், உங்கள் e-KYC முடிந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த தேதிக்குப் பிறகு உங்கள் e-KYC முடிக்கப்படாவிட்டால், நீங்கள் ரேஷன் திட்டம் மற்றும் பிற அரசாங்க சலுகைகளை இழக்க நேரிடும்.

மேலும் படிக்க | SIP vs PPF: மாதம் ரூ.5500 முதலீட்டை... 15 ஆண்டுகளில் ரூ.25 லட்சமாக பெருக்க உதவும் திட்டம் எது?

மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: 3 ஓய்வூதிய திட்டங்களிலும் உள்ள முக்கிய வேறுபாடுகளின் பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News