ரேஷன் கார்டுதாரர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

தற்போது டெல்லியில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு e-KYC தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்களும் டெல்லியில் வாசிப்பவராக இருந்து ரேஷன் கார்டு வைத்திருக்கிறீர்கள் என்றால் ரேஷன் கார்டின் e-KYC செயல்முறையையும் உடனே பூர்த்தி செய்யவும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 19, 2025, 01:28 PM IST
  • ரேஷன் கார்டின் e-KYC ஐ செய்யும் முறை
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் முழு எண்ணிக்கை
ரேஷன் கார்டுதாரர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

Ration Card New Update : டெல்லியில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு அண்மையில் பாஜக அரசு ஆச்சி அமைத்தது. இதன் மூலம் டெல்லியின் பல நிலுவையில் உள்ள பணிகளை விறுவிறுப்பாக டெல்லி அரசு முடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது டெல்லியில் ரேஷன் கார்டுக்கான e-KYC செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த e-KYC ஆனது முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், தற்போது டெல்லியின் ரேஷன் கார்டின் e-KYC செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களுடமும் டெல்லியின் ரேஷன் கார்டு இருக்கிறது என்றால் உங்கள் ரேஷன் கார்டின் e-KYC செயல்முறையையும் உடனடியாக முடித்துக் கொள்ளுங்கள். இப்போது டெல்லியின் ரேஷன் கார்டின் e-KYC செயல்முறையை எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்வோம். 

Add Zee News as a Preferred Source

டெல்லி ரேஷன் கார்டின் e-KYC ஐ செய்யும் முறை:
டெல்லியில், மக்கள் ரேஷன் கார்டின் e-KYC-ஐ இரண்டு முறைகளில் செய்துக்கொள்ளலாம். டெல்லியில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் டெல்லியில் உள்ள POS இயந்திரம் மூலம் e-KYC செய்துக்கொள்ளலாம். இந்த பிஓஎஸ் இயந்திரம் டெல்லியில் உள்ள ரேஷன் கடைகளில் இருக்கிறது. இங்கே நீங்கள் உங்களின் கைரேகை மற்றும் OTP உதவியுடன் ரேஷன் கார்டின் e-KYC-ஐ பூர்த்தி செய்திக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, முகவரிச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | Aadhaar card: ஆதாரை அப்டேட் செய்யவில்லை என்றால் செல்லுபடி ஆகாதா? UIDAI முக்கிய தகவல்!

இது தவிர, டெல்லி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே இருந்தப்படி ரேஷன் கார்டின் e-KYC-யைப் பூர்த்தி செய்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் "மேரா இ-கேஒய்சி" செயலியைப் பயன்படுத்த வேண்டி இருக்கும். இதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும். அத்தகைய சூழ்நிலையில், இந்த தேதிக்கு முன்னதாக ரேஷன் கார்டின் e-KYC செயல்முறையை உடனடியாக முடித்துக் கொள்ளவும். இந்த செயல்முறை செய்வதை தவிர்த்துவிட்டால் ரேஷன் பெற முடியாமல் போகிவிடும்.

டெல்லியில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் முழு எண்ணிக்கை:
இதனிடையே தற்போது, ​​டெல்லியில் 17.41 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர், மேலும் மொத்தமாக 1971 ரேஷன் கடைகள் உள்ளன.

E-KYC நிறைவு செய்யும் செயல்முறை:
E-KYC நிறைவு செய்ய, நீங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும்.
பிஓஎஸ் இயந்திரம் இங்கே கிடைக்கும். இங்கே நீங்கள் கைரேகை அல்லது OTP உதவியுடன் சரிபார்ப்பைச் செய்யலாம்.
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, முகவரிச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து ஆவணங்களுடனும் ஐடி சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை முடிந்ததும், E-KYC நிறைவடையும்.

மேலும் படிக்க | NPS: மாதம் ரூ.88,915 பென்ஷன் வரும்... இந்த முறையில் முதலீடு செய்ய வேண்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News