)
Gratuity Calculator: ஊழியர்களுக்கு பணிக்கு பிறகு கிடைக்கும் நிதி ஆதாயங்களில் கிராஜுவிட்டி என அழைக்கப்படும் பணிக்கொடையும் முக்கியமான ஒன்றாகும். ஊழியர்கள் ஆற்றிய நீண்ட நாள் சேவைக்காக நிறுவனம் இதை வழங்குகிறது. இது பணியாளருக்கு ஓய்வு, ராஜினாமா அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் வழங்கப்படும் ஒரு மொத்தத் தொகையாகும். பணிக்கொடை குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடித்தவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.
பணிக்கொடையை பெறுவதற்கான தகுதி என்ன? இதற்கான விதிகள் என்ன? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
-பணிக்கொடை செலுத்தும் சட்டம், 1972 இன் படி, ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை அளித்திருந்தால் மட்டுமே பணிக்கொடை கிடைக்கும்.
- ஓய்வு, ராஜினாமா, பணிநீக்கம் (தவறான நடத்தைக்காக அல்ல), மரணம் அல்லது இயலாமை காரணமாக ஊழியர் வேலையை விட்டு வெளியேறினால் பணிக்கொடை பெறலாம்.
பின்வரும் சூழ்நிலைகளில் பணிக்கொடை வழங்கப்படுகிறது:
- ஓய்வு: பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன்
- ராஜினாமா: 5 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடித்த பிறகு ராஜினாமா செய்தால்.
- இறப்பு அல்லது இயலாமை: பணியில் இருக்கும்போது விபத்து அல்லது நோய் காரணமாக மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால் பணிக்கொடை பெறலாம்.
- பணி ஓய்வு: பணி ஓய்வுக்கான வயதை எட்டும்போது பணிக்கொடை கிடைக்கும்
பணிக்கொடை = (கடைசியாகப் பெற்ற சம்பளம் x சேவை ஆண்டுகளின் எண்ணிக்கை) X 15/26
- இங்கே, 15 என்பது வருடத்திற்கு 15 நாட்கள் ஊதியத்தைக் குறிக்கிறது
- 26 என்பது ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஒரு மாதத்தில் 30 நாட்களைக் குறிக்கிறது.
ஓரு ஊழியரின் சேவை காலம் ஆறு மாதங்களுக்கு மேல் இருந்தால், அது அடுத்த முழு ஆண்டுக்கு ரவுண்ட் ஆஃப் செய்யப்படும். உதாரணமாக, ஒரு ஊழியர் 7 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களுக்கு பணியாற்றியுள்ளார் என வைத்துக்கொள்வோம். அவரது பணி ஆண்டுகள் 8 ஆண்டுகளாக கருதப்படும்.
ஓரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் பணிபுரிந்துள்ளார் என வைத்துக்கொள்ளலாம். அவர் கடைசியாகப் பெற்ற அடிப்படை சம்பளம் ரூ.50,000 - ரூ.1,00,000 ஆக இருந்தால், அவருக்கு எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும் என காணலாம்.
10.7 வருட சேவை, ரூ.50,000 அடிப்படை சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
அடிப்படை சம்பளம்: ரூ.50,000
சேவைகாலம்: 10 ஆண்டுகள் மற்றும் 7 மாதம் (11 ஆண்டுகள்)
பணிக்கொடை = (50,000 × 11 × 15) ÷ 26
பணிக்கொடை = ரூ.3,17,308
10.7 வருட சேவை, ரூ.60,000 அடிப்படை சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
அடிப்படை சம்பளம்: ரூ.60,000
சேவைகாலம்: 10 ஆண்டுகள் மற்றும் 7 மாதம் (11 ஆண்டுகள்)
பணிக்கொடை = (60,000 × 11 × 15) ÷ 26
பணிக்கொடை = ரூ.3,80,769
10.7 வருட சேவை, ரூ.70,000 அடிப்படை சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
அடிப்படை சம்பளம்: ரூ.70,000
சேவைகாலம்: 10 ஆண்டுகள் மற்றும் 7 மாதம் (11 ஆண்டுகள்)
பணிக்கொடை = (70,000 × 11 × 15) ÷ 26
பணிக்கொடை = ரூ. 4,44,230.8
10.7 வருட சேவை, ரூ.80,000 அடிப்படை சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
அடிப்படை சம்பளம்: ரூ.80,000
சேவைகாலம்: 10 ஆண்டுகள் மற்றும் 7 மாதம் (11 ஆண்டுகள்)
பணிக்கொடை = (80,000 × 11 × 15) ÷ 26
பணிக்கொடை = ரூ.507,692
10.7 வருட சேவை, ரூ.90,000 அடிப்படை சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
அடிப்படை சம்பளம்: ரூ.90,000
சேவைகாலம்: 10 ஆண்டுகள் மற்றும் 7 மாதம் (11 ஆண்டுகள்)
பணிக்கொடை = (90,000 × 11 × 15) ÷ 26
பணிக்கொடை = ரூ. 5,71,154
10.7 வருட சேவை, ரூ.1,00,000 அடிப்படை சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
அடிப்படை சம்பளம்: ரூ.1,00,000
சேவைகாலம்: 10 ஆண்டுகள் மற்றும் 7 மாதம் (11 ஆண்டுகள்)
பணிக்கொடை = (1,00,000 × 11 × 15) ÷ 26
பணிக்கொடை = ரூ. 6,34,615
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ