)
Gratuity Calculator: அலுவலக பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் ஊதியத்தை தவிர பல வித அலவன்சுகளும், பணி ஓய்வுக்கு பிறகான நன்மைகளும் கிடைக்கின்றன. குறிப்பாக பணி ஓய்வுக்கு பிறகு ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் ஓய்வூதியமும் பணிக்கொடையும் மிகப்பெரிய நிதி ஆதாரமாக உள்ளன. பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சேவையாற்றிய ஊழியர்களுக்கு, அவர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் பணிக்கொடை கிடைக்கிறது. பணிக்கொடைக்கான தகுதி விதிகள், தகுதி ஆண்டுகள், கணக்கீடு மற்றும் வரி விலக்கு வரம்பு ஆகியவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பணிக்கொடை என்றால் என்ன?
பணிக்கொடை என்பது, பணி ஓய்வு அல்லது வேலை மாற்றங்களின் போது நிதித் திட்டமிடலை வலுப்படுத்தி நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மதிப்புமிக்க ஓய்வூதியப் பலனாகும். ஊழியர்கள் ஆற்றும் சேவையை பாராட்டும் வகையில் பணிக்கொடை வழங்கப்படுகின்றது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்யும் ஊழியர்கள், பணிக்கொடை செலுத்தும் சட்டம், 1972 இன் கீழ் பணிக்கொடைக்கு தகுதியுடையவர்கள்.
கிராஜுவிட்டியை எப்போது கோர முடியும்?
ஊழியர்கள் பின்வரும் அடிப்படையில் பணிக்கொடையை கோரலாம்:
- பணி ஓய்வு
- 5 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ராஜினாமா
- ஓய்வூதிய வயதை எட்டியவுடன்
- இறப்பு அல்லது நிரந்தர இயலாமை (இவை இரண்டுக்கும் குறைந்தபட்ச சேவை தேவையில்லை)
பணிக்கொடையில் பணி ஆண்டுகளுக்கான கணக்கீடு எப்படி செய்யப்படுகின்றது?
ஊழியர்களின் சேவை 6 மாதங்களைத் தாண்டினால், அது முழு ஆண்டாக கணக்கிடப்படும். உதாரணமாக ஒருவர் ஒரு நிறுவனத்தில் 6 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் பணிபுரிந்தால், கிராஜுவிட்டி கணக்கீட்டின் போது 7 மாதங்கள் ஒரு முழு ஆண்டாக கருதப்படுகின்றது.
Gratuity Calculation Formula:
பணிக்கொடை கணக்கிடும் சூத்திரம்
பணிக்கொடை = (கடைசியாகப் பெற்ற சம்பளம் × சேவை ஆண்டுகள் × 15) ÷ 26
15 = 15 நாட்கள் சம்பளம்
26 = ஒரு மாதத்தில் சராசரி வேலை நாட்கள்
பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியர் 6 ஆண்டுகள் 7 மாதங்கள் பணிபுரிகிறார் என வைத்துக்கொள்ளலாம். கடைசியாகப் பெற்ற சம்பளம் ரூ.40,000, ரூ.60,000 மற்றும் ரூ.80,000 ஆக இருந்தால், பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும் என இங்கே காணலாம்.
6 ஆண்டுகள் மற்றும் 7 மாத சேவைக்கு ரூ. 40,000 சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
6 ஆண்டுகள் மற்றும் 7 மாத சேவை 7 ஆண்டுகளாக கருதப்படும்.
பணிக்கொடை = (40,000 × 7 × 15) ÷ 26 = ரூ. 1,61,538
6 ஆண்டுகள் மற்றும் 7 மாத சேவைக்கு ரூ. 60,000 சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
6 ஆண்டுகள் மற்றும் 7 மாத சேவை 7 ஆண்டுகளாக கருதப்படும்.
பணிக்கொடை = (60,000 × 7 × 15) ÷ 26 = ரூ. 2,42,308
6 ஆண்டுகள் மற்றும் 7 மாத சேவைக்கு ரூ. 80,000 சம்பளத்தில் பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
6 ஆண்டுகள் மற்றும் 7 மாத சேவை 7 ஆண்டுகளாக கருதப்படும்.
பணிக்கொடை = (80,000 × 7 × 15) ÷ 26 = ரூ. 3,23,077
கிராஜுவிட்டி மீதான வரிச் சலுகைகள்
தற்போதைய வருமான வரி விதிகளின்படி ரூ. 20 லட்சம் வரையிலான பணிக்கொடைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வரம்பைத் தாண்டிய தொகை அனைத்தும் வரிக்கு உட்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ