)
Gratuity Calculator: அலுவலக பணிகளில் உள்ள ஊழியர்கள் பெறும் பணிக்கு பிறகான நிதி நன்மைகளில் பணிக்கொடை முக்கியமான ஓன்று. ஒரு பணியாளருக்கு அவரது நீண்டகால சேவையை பாராட்டும் வகையில் பணிக்கொடை வழங்கப்படுகின்றது. பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சேவையாற்றிய ஊழியர்களுக்கு இது கிடைக்கிறது. நிறுவனத்திடமிருந்து ஊழியர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் பாராட்டின் ஒரு அடையாளமாக இது பார்க்கப்படுகின்றது.
Gratuity Rules: பணிக்கொடை எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?
ஒரு பணியாளரின் பணிக்கால ஆண்டுகளின் எண்ணிக்கை மற்றும் கடைசியாகப் பெற்ற அடிப்படை சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கொடைத் தொகை கணக்கிடப்படுகின்றது. 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலம் ஒரு முழு வருடமாக கருதப்படும்.
பணிக்கொடையை பெறுவதற்கான தகுதி என்ன?
பின்வரும் சந்தர்ப்பங்களில் பணிக்கொடை வழங்கப்படும்:
- ஓய்வு பெறும்போது
- 5 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவைக்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்தால்.
- விபத்து அல்லது நோய் காரணமாக மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால்.
- பணி ஓய்வுக்கான வயதை எட்டிய பிறகு.
கிராஜுவிட்டித் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஒரு பணியாளர் கடைசியாகப் பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் பணி ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, பணிக்கொடை தொகை கணக்கிடப்படுகிறது.
அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு பணிக்கொடை கொடுக்க வேண்டுமா?
1972 ஆம் ஆண்டு பணிக்கொடை வழங்கல் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு பணிக்கொடையை அளிக்க வேண்டும்.
கிராஜுவிட்டியைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?
- பணிக்கொடை = (கடைசியாகப் பெற்ற சம்பளம் x சேவை ஆண்டுகளின் எண்ணிக்கை) X 15/26
இங்கே, 15 என்பது வருடத்திற்கு 15 நாட்கள் ஊதியத்தையும், 26 என்பது ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து, ஒரு மாதத்தில் 30 நாட்களையும் குறிக்கிறது.
பணிக்கொடைக்கு விண்ணப்பிக்க ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை அவசியமா?
ஆம், பணிக்கொடை சட்டத்தின் கீழ், பணிக்கொடைக்கு விண்ணப்பிக்க ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்வது கட்டாயமாகும்.
பணிக்கொடை கணக்கீடு
பணிக்கொடை கணக்கீட்டை சில உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். 7 ஆண்டுகள் மற்றும் 7 மாத சேவைக்குப் பிறகு கடைசியாகப் பெற்ற அடிப்படை சம்பளம் ரூ.39,000, ரூ.59,000 மற்றும் ரூ.66,000 ஆக உள்ள ஊழியர்களுக்கான பணிக்கொடைத் தொகையை இங்கே கணக்கிடலாம்.
7.5 ஆண்டுகள் சேவை, ரூ.35,000 அடிப்படை சம்பளத்தில் உங்கள் பணிக்கொடை எவ்வளவு இருக்கும்?
ரூ.35,000 அடிப்படை சம்பளம், 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சேவை (7 ஆண்டுகளாக ரவுண்ட் ஆஃப் செய்யப்படும்) கொண்ட ஒரு ஊழியருக்கு எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும் என கணக்கிடலாம்.
பணிக்கொடை = (35,000 × 7 × 15) ÷ 26
பணிக்கொடை = ரூ.1,41,346
7.5 ஆண்டுகள் சேவை, ரூ.55,000 அடிப்படை சம்பளத்தில் உங்கள் பணிக்கொடை எவ்வளவு இருக்கும்?
ரூ.55,000 அடிப்படை சம்பளம், 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சேவை (7 ஆண்டுகளாக ரவுண்ட் ஆஃப் செய்யப்படும்) கொண்ட ஒரு ஊழியருக்கு எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும் என கணக்கிடலாம்.
பணிக்கொடை = (55,000 × 7 × 15) ÷ 26
பணிக்கொடை = ரூ.2,22,115
7.5 ஆண்டுகள் சேவை, ரூ.75,000 அடிப்படை சம்பளத்தில் உங்கள் பணிக்கொடை எவ்வளவு இருக்கும்?
ரூ.ரூ.75,000அடிப்படை சம்பளம், 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சேவை (7 ஆண்டுகளாக ரவுண்ட் ஆஃப் செய்யப்படும்) கொண்ட ஒரு ஊழியருக்கு எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும் என கணக்கிடலாம்.
பணிக்கொடை = (75,000 × 7 × 15) ÷ 26
பணிக்கொடை = ரூ.3,02,884
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பொதுவான கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது. சரியான தொகையை அறிய, உங்கள் நிதி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் நிறுவனத்தின் மனிதவளத் துறையிலிருந்து தகவலைப் பெறலாம்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ