Gratuity Calculator: 50% ஊதிய விதி சம்பள அமைப்புகளை மாற்றியமைப்பதால், ஊழியர்கள் முன்பு போலவே அதே CTC-ஐப் பெற்றாலும், அவர்களது கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Gratuity Calculator: மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. சில அடிப்படை விதிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். உங்கள் சம்பள அமைப்பில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். புதிய அடிப்படை ஊதிய விதி நடைமுறைக்கு வருவதால், பணிக்கொடை ஒரு தெளிவான மாற்றத்தைக் காணக்கூடும்.
50% ஊதிய விதி சம்பள அமைப்புகளை மாற்றியமைப்பதால், ஊழியர்கள் முன்பு போலவே அதே CTC-ஐப் பெற்றாலும், அவர்களது கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும். இந்த மாற்றத்தால், ஊழியர்களின் நீண்ட காலப் பலன்களுக்கு, குறிப்பாக பணிக்கொடைக்கு, என்ன தாக்கம் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
- திருத்தப்பட்ட ஊதிய வரையறையின் கீழ், அடிப்படை ஊதியம் மொத்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும்.
- இது தற்போதைய தொழில் நடைமுறைகளிலிருந்து ஒரு தெளிவான மாற்றத்தைக் குறிக்கிறது.
- தற்போது நிறுவனங்கள் பெரும்பாலும் படிகளுக்கு இடமளிக்க அடிப்படை ஊதியத்தின் அளவைக் குறைவாக வைத்திருக்கின்றன.
- தொழில்துறை நடைமுறையின்படி, குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் பொதுவாக சுமார் 40% ஆகவும், அதிக வருமானம் பெறும் ஊழியர்களுக்கு 30% ஆகவும் பராமரிக்கப்படுகிறது.
- பணிக்கொடை அடிப்படைச் சம்பளத்தின் மீது கணக்கிடப்படுவதால், இதில் ஏற்படும் மாற்றம், ஊழியர்களின் நீண்ட காலப் பலன்களை நேரடியாக பாதிக்கிறது.
பணிக்கொடையில் என்ன மாற்றம் எற்படும். சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
ரூ. 12 லட்சம் ஈட்டும் ஊழியர்களுக்கு பணிக்கொடையில் என்ன மாற்றம் வரும்?
- உதாரணமாக, ஒரு ஊழியர் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் சம்பாதிக்கிறார் என வைத்துக்கொள்வோம்.
- அவருக்கு இந்த மாற்றம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
- தற்போது, அடிப்படை ஊதியம் 40% ஆக இருக்கும்போது, மாத அடிப்படை ஊதியம் சுமார் ரூ. 40,000 ஆகிறது.
- இதன் விளைவாக, ஆண்டுக்கு சுமார் ரூ. 23,076 பணிக்கொடைப் பங்களிப்பு கிடைக்கிறது.
- அடிப்படை ஊதியம் 50% ஆக, அதாவது மாதத்திற்கு ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டால், பணிக்கொடை ஆண்டுக்கு சுமார் ரூ. 28,846 ஆக அதிகரிக்கும்.
- இதனால் ஆண்டுக்கு ரூ. 5,770 உயர்வு ஏற்படுகிறது.
அதாவது, புதிய விதியால் ஏற்படும் மாற்றம் படிப்படியாக நிகழ்கிறது. ஆகையால், குறுகிய காலத்தில் இதன் தாக்கம் பெரிதாகத் தெரியாமல் போகலாம்.
ரூ. 30 லட்சம் ஈட்டும் ஊழியர்களுக்கு பணிக்கொடையில் என்ன மாற்றம் வரும்?
- அதிக சம்பள நிலைகளில் இந்த வேறுபாடு மேலும் தெளிவாகத் தெரிகிறது.
- உதாரணமாக, ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் சம்பாதிக்கும் ஒருவருக்கு, நிறுவனங்கள் பொதுவாக அடிப்படை ஊதியத்தை சுமார் 30% ஆக, அதாவது மாதத்திற்கு ரூ. 75,000 ஆக வைத்திருக்கிறார்கள்.
- இதன் விளைவாக, ஆண்டுக்கு சுமார் ரூ. 43,269 பணிக்கொடை கிடைக்கிறது.
- புதிய விதியின்படி அடிப்படை ஊதியம் 50% ஆக (மாதத்திற்கு ரூ. 1.25 லட்சம்) உயர்த்தப்படும்.
- இதனால், பணிக்கொடை ஆண்டுக்கு சுமார் ரூ. 72,115 ஆக உயர்கிறது.
- இது ஆண்டுக்கு ரூ. 28,846 உயர்வுக்கு வழிவகுக்கிறது.
- இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கமாகும்.
- ஊழியரின் கையில் கிடைக்கும் சம்பளத்தில் சுமார் 1% உயர்வு ஏற்படுகின்றது.
புதிய விதியால், அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக வித்தியாசத்தை உணர்கிறார்கள். இதற்கான காரணம் மிகவும் எளிமையானது. உங்கள் அடிப்படைச் சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்ததோ, அது 50% ஆக உயர்த்தப்படும்போது அந்த சரிசெய்தல் அவ்வளவு பெரியதாக இருக்கும். அதன்படி, முன்பு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியம் எவ்வளவு குறைவாக இருந்ததோ, அந்த அளவிற்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, பொதுவாக, அதிக கட்டமைக்கப்பட்ட படிகளைக் கொண்ட, அதிக சம்பளம் வாங்குபவர்கள், இந்த மாற்றத்தை மிகவும் கவனிக்கத்தக்க வகையில் காணலாம்.
இந்த மாற்றத்தின் உண்மையான தாக்கம் காலப்போக்கில்தான் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படும். மேலே உதாரணத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட அதே ஊழியர் 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்தால், பணிக்கொடையாக, நிறுவனம் சுமார் 25% அதிகரிப்பை ஊழியரின் கணக்குப் புத்தகங்களில் சேர்க்க வேண்டி இருக்கும். அதாவது, இன்று அதிக அடிப்படைச் சம்பளம் என்பது பிற்காலத்தில் அதிக பணிக்கொடை வழங்குவதைக் குறிக்கிறது.
இதன் காரணமாக, பிஎஃப் மற்றும் பணிக்கொடை போன்ற சலுகைகளுக்கான அதிக பங்களிப்புகள் காரணமாக ஊழியர்கள் கையில் கிடைக்கும் சம்பளம் சற்று குறையக்கூடும். ஆனால், இதற்கு ஈடாக எதிர்காலத்தில் வலுவான நிதிப் பாதுகாப்பு கிடைக்கும். மேலும், காலப்போக்கில், சம்பளக் கட்டமைப்புகள் மேலும் தரப்படுத்தப்பட்டு வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களுக்கு, இந்த புதிய மாற்றத்தை புரிந்துகொள்ள சிறிது காலம் ஆகலாம், ஆனால் நீண்ட கால ஆதாயங்கள் இந்த புதிய அதை மதிப்புள்ளதாக மாற்றக்கூடும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
1. பணிக்கொடை என்றால் என்ன?
ஒரு நிறுவனம் தனது ஊழியரின் பணி அனுபவத்தைப் பாராட்டி, அவரது சேவைக்காக வழங்கும் ஒரு வகையான வெகுமதி பணிக்கொடை எனப்படும்.
2. 50% ஊதிய விதி சம்பள அமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன?
50% ஊதிய விதி சம்பள அமைப்புகளை மாற்றியமைப்பதால், ஊழியர்கள் முன்பு போலவே அதே CTC-ஐப் பெற்றாலும், அவர்களது கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும்.
3. பணிக்கொடைக்கு வரி விலக்கும் கிடைக்குமா?
ஆம், பணிக்கொடைக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகின்றது.
(குறிப்பு: இந்த செய்தி பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் தகவல்களைப் பெற, நிதி ஆலோசகரிடமிருந்து சரியான ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறது. துல்லியமான மற்றும் சமீபத்திய தகவல்களுக்கு சம்பந்தப்பட அதிகாரப்பூர்வ தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகின்றது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!