)
Gratuity Calculator: ஊழியர்கள் ஆற்றும் சேவையை பாராட்டும் வகையில் பணிக்கொடை வழங்கப்படுகின்றது. பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சேவையாற்றிய ஊழியர்களுக்கு, அவர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் பணிக்கொடை கிடைக்கிறது. நிறுவனத்திடமிருந்து ஊழியர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் பாராட்டின் ஒரு அடையாளமாக இது பார்க்கப்படுகின்றது. நீண்ட கால சேவைக்கான பாராட்டுக்கான அடையாளமாக ஊழியருக்கு நிறுவனம் சார்பில் அளிக்கப்படும் நிதி உதவிதான் பணிக்கொடை. பணிக்கொடை செலுத்தும் சட்டத்தின் கீழ், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையைக் கொண்ட ஊழியர்கள் பணிக்கொடைக்கு தகுதியுடையவர்கள்.
கிராஜுவிட்டிக்கான சேவை காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி அளிக்கப்படுகின்றது. கிராஜுவிட்டி கணக்கீட்டிற்கு 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேலான சேவைகாலம் ஒரு முழு ஆண்டாக கருதப்படுகின்றது. உதாரணமாக ஒருவர் 9 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்திருந்தால், அது 10 முழு ஆண்டுகளாகக் கருதப்படுகிறது.
பணிக்கொடையை எப்போது கோரலாம்?
பின்வரும் சூழ்நிலைகளில் பணியாளர்கள் பணிக்கொடையை கோரலாம்:
- ஓய்வு பெறும்போது
- 5+ ஆண்டுகள் சேவைக்கு பிறகு பணியை ராஜினாமா செய்தால்
- இறப்பு அல்லது நிரந்தர இயலாமை ஏற்பட்டால்
- ஓய்வு பெறும் வயதை அடையும்போது
உங்கள் பணிக்கொடைத் தொகைக்கு முக்கிய கூறுகள் என்ன?
உங்கள் பணிக்கொடை கணக்கீடு இரண்டு முக்கிய காரணிகளை சார்ந்துள்ளது:
- நீங்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை சம்பளம்
- உங்கள் தொடர்ச்சியான சேவையின் மொத்த ஆண்டுகள்
பணிக்கொடை சூத்திரம்
பணிக்கொடைத் தொகை இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது:
(அடிப்படை சம்பளம் × சேவை ஆண்டுகள் × 15) ÷ 26
இங்கே, 15 என்பது வருடத்திற்கு சம்பள நாட்களைக் குறிக்கிறது, மேலும் 26 என்பது ஒரு மாதத்தில் வேலை நாட்களைக் குறிக்கிறது (ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர).
பணிக்கொடை எவ்வளவு கிடைக்கும்?
ஊழியர்களுக்கான பணிக்கொடை கணக்கீட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். 9 ஆண்டுகள் மற்றும் 6 மாத சேவையை முடித்த, ரூ.65,000, ரூ.75,000 மற்றும் ரூ.85,000 ஆகிய அடிப்படை ஊதியங்களை கொண்ட ஊழியர்களுக்கு எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும் என இங்கே கணக்கிடலாம். கிராஜுவிட்டி செலுத்தும் சட்டத்தின்படி, 9 ஆண்டுகள் மற்றும் 6 மாத பணிக்காலம் கணக்கீட்டிற்கு 10 ஆண்டுகளாகக் கருதப்படுகிறது.
10 ஆண்டு சேவைக்குப் பிறகு ரூ.65,000 அடிப்படை சம்பளத்திற்கான பணிக்கொடை
கடைசியாகப் பெற்ற அடிப்படை சம்பளம் - ரூ.65,000
சேவை காலம் 10 ஆண்டுகள்
பணிக்கொடை = (65,000 × 10 × 15) ÷ 26 = ரூ.3,75,000
10 ஆண்டு சேவைக்குப் பிறகு ரூ.75,000 அடிப்படை சம்பளத்திற்கான பணிக்கொடை
கடைசியாகப் பெற்ற அடிப்படை சம்பளம் - ரூ.75,000
சேவை காலம் 10 ஆண்டுகள்
பணிக்கொடை = (75,000 × 10 × 15) ÷ 26 = ரூ. 4,32,692
10 ஆண்டு சேவைக்குப் பிறகு ரூ.85,000 அடிப்படை சம்பளத்திற்கான பணிக்கொடை
கடைசியாகப் பெற்ற அடிப்படை சம்பளம் - ரூ.85,000
சேவை காலம் 10 ஆண்டுகள்
பணிக்கொடை = (85,000 × 10 × 15) ÷ 26 = ரூ. 4,90,384
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பொதுவான கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது. சரியான தொகையை அறிய, உங்கள் நிதி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் நிறுவனத்தின் மனிதவளத் துறையிலிருந்து தகவலைப் பெறலாம்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ