)
Gratuity Rules 2025: இந்தியாவின் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கும் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கிராஜுவிட்டி விதிகள் 2025 முக்கிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்ததியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட விதிகள் நிலையான அல்லது அமைப்புசாரா தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு கிராஜுவிட்டி சலுகைகளை நீட்டிக்கின்றன. கிராஜுவிட்டி விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிராஜுவிட்டி விதிகள் 2025 மூலம் அறிமுகம் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் நோய், இயலாமை அல்லது இறப்பை எதிர்கொள்பவர்களுக்கு தகுதி விதிமுறைகளில் தளர்வுகளும் அளிக்கப்படுகின்றன. மோசடியைத் தடுக்க சம்பள வரையறைகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வரி இல்லாத வரம்புகள் தனியார் துறை ஊழியர்களுக்கு ரூ.20 லட்சமாகவும், அரசு ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
நிறுவனம் இப்போது கிராஜுவிட்டியை 30 நாட்களுக்குள் வழங்கவேண்டும். அல்லது தாமதங்களுக்கு 10 சதவீத வருடாந்திர வட்டியை செலுத்த வேண்டும். வேகமான செயலாக்கம் மற்றும் பரந்த பாதுகாப்புடன், புதிய விதிகள் ஊழியர்களுக்கு நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்திய அரசு கிராஜுவிட்டி விதிகள் 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது சமூகப் பாதுகாப்பு கவரேஜை விரிவுபடுத்துவதையும் ஊழியர்களுக்கான நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய மாற்றமாகும். புதுப்பிக்கப்பட்ட விதிகள் தகுதி விதிமுறைகளை நவீனப்படுத்துகின்றன, ஊதியங்களை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் நிலையான மற்றும் கிக் தொழிலாளர்களக்கும் நன்மைகளை நீட்டிக்கின்றன.
புதிய கட்டமைப்பின் கீழ், பணிக்கொடை இனி நீண்ட கால நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் ஒரு சலுகையாக இருக்காது. இப்போது பணிக்கொடை பின்வரும் தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது:
- ஃபிக்ஸ்ட் டர்ம் ஊழியர்கள்
- தெருவோர மற்றும் கிக் தொழிலாளர்கள்
- ஒப்பந்த ஊழியர்கள்
குறைந்தபட்ச சேவை காலத்திற்குப் பிறகு ஒரு ஊழியர் இறந்தாலோ, இயலாமை ஏற்பட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, அப்படிப்பட்டவர்களை உள்ளடக்கவும் தகுதி அலவுகோல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பு அமைப்பின் கீழ் அதிகமான தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.
பெரும்பாலான ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டு சேவைக்கான தேவை உள்ளது. எனினும், விதிகளில் இப்போது நெகிழ்வுத்தன்மை அதிகரித்துள்ளது.
- நோய், அங்கீகரிக்கப்பட்ட விடுப்பு, வேலைநிறுத்தங்கள் அல்லது தற்காலிக பணிநிறுத்தங்கள் காரணமாக ஏற்படும் இடைவெளிகள் இடைவெளிகளாகக் கணக்கிடப்படாது.
- ஒரு ஊழியருக்கு மரணம் ஏற்பட்டாலோ, அல்லது நிரந்தர இயலாமை ஏற்பட்டாலோ, குறைந்தபட்ச சேவைத் தேவை எதுவும் பொருந்தாது.
- ஃபிக்ஸ்ட் டர்ம் ஊழியர்கள் குறுகிய காலத்திற்கும் விகிதாசார பணிக்கொடைக்கு தகுதியுடையவர்கள்.
கிராஜுவிட்டி கணக்கீட்டிற்கான முக்கிய சூத்திரம் அப்படியே உள்ளது: பணிக்கொடை = கடைசியாகப் பெற்ற சம்பளம் × 15/26 × நிறிவு செய்யப்பட்ட சேவை ஆண்டுகள்
இருப்பினும், விதிகள் இப்போது சம்பளக் கூறுகளை தெளிவுபடுத்துகின்றன:
அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி மொத்த சம்பளத்தில் குறைந்தது 50 சதவீதமாக இருக்க வேண்டும்.
இது செயற்கை ஊதிய மறுசீரமைப்பு மூலம் நிறுவனம் பணிக்கொடையைக் குறைப்பதைத் தடுக்கிறது. பருவகாலத் தொழிலாளர்கள் வேலை பருவத்திற்கு ஏழு நாட்கள் ஊதியத்தின் அடிப்படையில் பணிக்கொடையைப் பெறுவார்கள்.
கிராஜுவிட்டி அல்லது பணிக்கொடை என்பது ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பின் கிடைக்கும் ஒரு முக்கியமான நிதி நிவாரணமாகும். பொதுவாக, ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், பணிக்கொடை மூலம் கணிசமான நிதியை உருவாக்கலாம். இது ஊழியர் கடைசியாக பெற்ற சம்பளம் மற்றும் சேவை காலத்தின் அடிப்படையில் கிடைக்கும் ஒரு ஓய்வூதியப் பலனாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ