)
New GST tax rates : மத்திய அரசு, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில், ஜிஎஸ்டி வரி அமைப்பில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி 2.0 என்ற புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம், பல அத்தியாவசியப் பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதனை மக்கள் வீட்டில் இருந்தபடியே அறிந்து கொள்ளலாம். எப்படி தெரியுமா?
‘savingwithgst.in’ புதிய இணையதளம்
இந்த வரி குறைப்புகளின் நன்மைகளை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், அரசு ஒரு பிரத்யேக இணையதளத்தை (website) 'savingwitgst.in' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் MyGov என்ற அரசுத் தளத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வரும் நிலையில், இந்த இணையதளம் மூலம் நுகர்வோர் பொருட்களின் விலைகளை, வரி குறைப்புக்கு முன்னும் பின்னும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
'X' தளத்தில் உள்ள MyGovIndia அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதுதொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் "அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வந்துவிட்டது! நீங்கள் எவ்வளவு சேமிக்கலாம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்குப் பிடித்த பொருட்களை கார்ட்டில் சேர்த்து, வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்" எனப் பதிவிட்டுள்ளது.
எந்தப் பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதைச் சரிபார்க்கும் முறை
நீங்கள் எந்தப் பொருளின் மீது எவ்வளவு சேமிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, முதலில் நீங்கள் விரும்பும் பொருளை அந்த இணையதளத்தின் கார்ட்டில் சேர்க்க வேண்டும். அதன்பிறகு, அந்தப் பொருளின் உண்மையான விலை, பழைய VAT வரியுடன் அதன் விலை, மற்றும் புதிய Next-Gen GST அமலுக்குப் பிறகு அதன் விலை ஆகிய விவரங்கள் காட்டப்படும். இதன்மூலம், நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு லிட்டர் பால் வாங்க நினைக்கிறீர்கள் என்றால், ஒரு லிட்டர் பாலை கார்ட்டில் சேர்க்க வேண்டும். அப்போது, ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.60 என்றும், VAT வரியுடன் அதன் விலை ரூ.63.6 என்றும், ஆனால் புதிய ஜிஎஸ்டி-யின் கீழ் அதன் விலை ரூ.60 ஆகவும் காட்டப்படும்.
முக்கிய வரி மாற்றங்கள் மற்றும் சேமிப்புகள்
பொருட்கள்: UHT பால், ப்ரீ பேக்டு பனீர் மற்றும் அனைத்து வகையான இந்திய பிரட் வகைகள் போன்ற பொருட்களுக்கு இனி பூஜ்ஜிய வரி விதிக்கப்படும்.
வீட்டு உபயோகப் பொருட்கள்: சோப்பு, ஷாம்பு, டூத் பிரஷ், டூத் பேஸ்ட், டேபிள்வேர் மற்றும் சைக்கிள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும்.
சேவைகள்: சிறிய வாகனங்கள், கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி-யில் 2 வரி விகிதங்கள்
ஜிஎஸ்டி கவுன்சில், வரி விதிப்புப் பிரிவுகளை (tax slabs) இரண்டு வகைகளாகக் குறைத்துள்ளது. அவை 5% பிரிவு, 18% பிரிவு. பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்கள் 5% வரிப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தவிர, சில பொருட்களுக்கு பூஜ்ஜிய வரியும், சில குறிப்பிட்ட பொருட்களுக்கு 40% வரியும் விதிக்கப்படும். இந்த அனைத்து சீர்திருத்தங்களும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இந்த நடவடிக்கை, இந்த ஆண்டு தீபாவளி காலத்தில் அமுல்படுத்தப்படும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ