)
GST Reforms Latest News: சரக்கு மற்றும் சேவை வரி முறையில், தற்போதைய நான்கு-விகித கட்டமைப்பை நீக்கி, 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரட்டை விகிதங்களுக்கு மாறுவதற்கான திட்டத்திற்கு, ஜிஎஸ்டி விகித பகுத்தறிவு குறித்த அமைச்சர்கள் குழு (அரசு) ஆகஸ்ட் 22 வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மாற்றத்திற்கு பிறகு எந்த பொருட்களின் விலைகள் குறையும், எவற்றின் விலை அதிகரிக்கும் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
"பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்த அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் இது முதல் பெரிய படியாகும்" என்று மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் லிமிடெட்டின் ஆராய்ச்சி, வெல்த் மேனேஜ்மெண்ட் தலைவர் சித்தார்த்த கெம்கா கூறினார். இந்த பரிந்துரைகள் குறித்த இறுதி முடிவு செப்டம்பரில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும்.
- ஒப்புதலுக்குப் பிறகு, 28 சதவீத அடுக்கு 18 சதவீதமாகவும், 12 சதவீத அடுக்கு 5 சதவீதமாகவும் மாறும்.
- ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளையும் குறைக்கும்.
ஜிஎஸ்டி விகிதங்களின் திருத்தம் அமலுக்கு வங்த பிறகு எவற்றின் விலை குறையும், எவற்றின் விலை அதிகரிக்கும்? அந்த பொருட்களின் பட்டியலை இங்கே காணலாம்.
மருந்துகள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மது அல்லாத பானங்கள், சில பால் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களுக்குப் பிறகு இந்த அனைத்துப் பொருட்களும் மலிவாகும். ஹோட்டல் அறைகள் மற்றும் சில கட்டுமானப் பொருட்கள் போன்ற பிற பொருட்களும் தற்போது 12 சதவீத வரியின் கீழ் வருகின்றன.
ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் விலைகளும் இப்போது குறையும். ஏனெனில் இந்த பொருட்களுக்கு தற்போதைய ஜிஎஸ்டி விகிதம் 28 சதவீதமாக உள்ளது, இது 18 சதவீதமாகக் குறையும்.
1,200 சிசிக்குக் குறைவான எஞ்சின் திறன் கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 500 சிசி வரையிலான இரு சக்கர வாகனங்கள் தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி வரியின் கீழ் வருவதால், இவற்றின் விலைகளும் குறையக்கூடும்.
புதிய 40 சதவீத வரி அடுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதில் ஆடம்பரப் பொருட்கள், உயர் ரக கார்கள், மதுபானம், சூதாட்டம், குளிர்பானங்கள், மருந்துகள், துரித உணவு, காபி, சர்க்கரை மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற சின் பொருட்கள் என அழைகப்படும் பாவப் பொருட்களும் அடங்கும். தற்போது இவை 28 சதவீத அதிகபட்ச வரி அடுக்கின் கீழ் வருவதால், இந்தப் பொருட்கள் விலை உயரக்கூடும்.
சின் டேக்ஸ் என்பது அரசாங்கம் சில தீங்கு விளைவிக்கும், அத்தியாவசியமில்லாத பொருட்களின் மீது விதிக்கும் ஒரு சிறப்பு வரியாகும். மக்கள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், அவை ஏற்படுத்தக்கூடிய தீங்கைக் குறைப்பதும் இதன் நோக்கமாகும்.
தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு GST விலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையையும் GoM மதிப்பாய்வு செய்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ