)
EPFO Latest News: தீபாவளிக்கு முன்னதாக இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது. திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில், EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு, பணம் எடுக்கும் விதிகளை எளிமைப்படுத்துதல், வழக்குகளைக் குறைப்பதற்கான விஸ்வாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் EPFO 3.0-ன் கீழ் டிஜிட்டல் உருமாற்றத் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுத்தது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
இனி ஊழியர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து முழு தொகையையும் எடுக்க முடியும். இது குறித்த ஒரு முக்கிய முடிவு நேற்று எடுக்க்ப்பட்டது. தொழிலாளர் அமைச்சகம் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில், 'பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவதற்கான 13 கடுமையான விதிகள் நீக்கப்பட்டு, பார்ஷியல் வித்டிராயலுக்கான விதிகள் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன: அத்தியாவசியத் தேவைகள் (நோய், கல்வி, திருமணம்), வீட்டுத் தேவைகள் மற்றும் சிறப்பு சூழ்நிலைகள். பணியாளர் மற்றும் முதலாளி பங்களிப்புகள் உட்பட, உறுப்பினர்கள் இப்போது தங்கள் முழு PF கணக்கு இருப்பையும் திரும்பப் பெறலாம்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது கல்விக்காக 10 மடங்கு மற்றும் திருமணத்திற்கு 5 மடங்கு வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. முன்பு மொத்தத்தொகையில், மூன்று பகுதி திரும்பப் பெறுவதற்கான வரம்பு இருந்தது. மேலும், பணம் எடுக்கும் அனைத்து வகைகளுக்கும் குறைந்தபட்ச சேவைத் தேவை 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
STORY | EPFO liberalises EPF part withdrawals, members can withdraw up to 100 pc
— Press Trust of India (@PTI_News) October 13, 2025
The board of retirement fund body EPFO on Monday approved liberalised part withdrawals for its more than seven crore subscribers, allowing up to 100 per cent EPF withdrawal.
READ:… pic.twitter.com/xUiw4rgKZ1
இனி சிறப்பு சூழ்நிலைகளில், பணம் எடுப்பதற்கான காரணத்தை வழங்க வேண்டிய அவசியமில்லை. முன்பு, பணம் எடுப்பதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது இந்த தொந்தரவு நீக்கப்பட்டுள்ளது.
புதிய EPFO விதியின் கீழ், உறுப்பினர்கள் தங்கள் மொத்த பங்களிப்புகளில் குறைந்தபட்சம் 25% இருப்பை தங்கள் கணக்குகளில் பராமரிக்க வேண்டும். இது உறுப்பினர்கள் EPFOவின் ஆண்டுக்கு 8.25% அதிக வட்டி விகிதம் மற்றும் கூட்டுத்தொகையின் பலன்களைத் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்யும்.
PF தொகையை செலுத்த தாமதமானால், அதற்கான தண்டனை சேதங்கள் தொடர்பான, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க விஸ்வாஸ் திட்டத்தையும் CBT அங்கீகரித்தது. மே 2025 நிலவரப்படி, ₹2,406 கோடி மதிப்புள்ள தண்டனை சேதங்கள் நிலுவையில் இருந்தன. மேலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் உட்பட பல்வேறு மன்றங்களில் 6,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்தத் திட்டத்தின் கீழ், தாமதமான PF வைப்புத்தொகைக்கான அபராதம் மாதத்திற்கு 1% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் வரை தாமதமானால் 0.25 சதவீத அபராதமும், நான்கு மாதங்கள் வரை தாமதமானால் 0.50 சதவீத அபராதமும் விதிக்கப்படும். இந்தத் திட்டம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும், இது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம்.
EPFO கூட்டம் EPFO 3.0 இன் கீழ் டிஜிட்டல் மாற்ற கட்டமைப்பையும் அங்கீகரித்தது. இது வங்கிகளின் செயல்முறை போல EPFO சேவைகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும். இதில் முக்கியமாக ஏடிஎம், யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி, வங்கி தீர்வுகள், கிளவுட் அடிப்படையிலான அமைப்பு மற்றும் தானியங்கி க்ளெய்ம் தீர்வு ஆகியவை அடங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ