DA Hike, 7th Pay Commission: தீபாவளி என்றாலே மக்கள் குஷியாகிவிடுவார்கள். பண்டிகை கொண்டாட்டம் ஒருபுறம் என்றால் வேலைப்பார்க்கும் இடத்தில் போனஸ் போடுவதும் பலருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும். அப்படியிருக்க, இந்த தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மற்றொரு கொண்டாட்டமாக அகவிலைப்படி உயர்வு அமைந்துள்ளது.
DA Hike: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அன்று, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 3% உயர்த்தப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகி மத்திய அரசு ஊழியர்களையும், ஓய்வூதியதாரர்களையும் குஷியில் ஆழ்த்தியது. இதனால், 55% ஆக இருந்த அகவிலைப்படி தற்போது 58% ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தின் அரியர் தொகையுடன் கிடைக்கும் என்பதால் அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மொத்தம் 49.19 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இதனால் பயனடைந்தனர்.
DA Hike: அகவிலைப்படியை உயர்த்திய மாநிலங்கள்
மத்திய அரசை தொடர்ந்து தற்போது பாஜக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் தங்களின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அதன் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தற்போது வரை பீகார், ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அகவிலைப்படியை உயர்த்தி (DA Hike) அறிவித்துள்ளன. இந்நிலையில், தற்போது நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் தனது ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது.
DA Hike: உத்தர பிரதேசத்தில் அகவிலைப்படி உயர்வு
உத்தர பிரதேச மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம்3% உயர்த்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று (அக். 18) அறிவித்துள்ளார். இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.
DA Hike: 28 லட்சம் பேர் பயன்
உத்தர பிரதேசத்தின் (Uttar Pradesh) மொத்தம் 28 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதனால் பயனடைவார்கள். அவர்களின் சம்பளத்தில் 55% ஆக இருந்த அகவிலைப்படி தற்போது 58% ஆக உயரும். மேலும், கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து இது கணக்கிடப்பட்டு அரியர் தொகையும் வழங்கப்படும். அகவிலைப்படி உயர்த்தப்பட்டது குறித்து உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவரது X பக்கத்திந் வாயிலாக அறிவித்தார்.
DA Hike: முதல்வர் X பதிவு
அந்த பதிவில் மேலும், "தீபாவளிப் பண்டிகையின் போது, அகவிலைப்படி உயர்வு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஊக்கமாக இருக்கும். அதே நேரத்தில் சுமார் 28 லட்ச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையில் திருப்தி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் விளக்கை ஏற்றும்" என்றும் தீபாவளியை பண்டிகையை (Diwali 2025) குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
उत्तर प्रदेश सरकार ने राज्य कर्मचारियों और पेंशनरों/पारिवारिक पेंशनरों के महंगाई भत्ते व महंगाई राहत की दर 55% को 01 जुलाई, 2025 से बढ़ाकर 58% कर दिया है।
महापर्व दीपावली के अवसर पर यह निर्णय लगभग 28 लाख कर्मयोगियों और पेंशनरों के जीवन में संतोष, सुरक्षा और समृद्धि का दीप जलाने…
— Yogi Adityanath (@myogiadityanath) October 17, 2025
DA Hike: 8வது ஊதியக்குழு எப்போது?
தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரையின் கீழ் ஆகும். 7வது ஊதியக்குழு வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் நிலையில், அடுத்தாண்டு 8வது ஊதியக்குழு (8th Pay Commission) கொண்டுவரப்படலாம். இதனால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் வரும். இருப்பினும், 8வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு தரப்பில் இன்னும் எவ்வித அப்டேட்டும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | குஷியில் அரசு ஊழியர்கள்... டிஏ உயர்வு - இந்த 2 மாநிலங்களும் அடுத்தடுத்து அறிவிப்பு
மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் ஹேப்பி... அகவிலைப்படி உயர்வு - இந்த 2 மாநிலங்களும் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









