)
Advance Salary For Central Government Employees: பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்திருக்கிறது.
மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான ஆகஸ்ட் மாத சம்பளத்தை முன்கூட்டியே விடுவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதை தொடர்ந்து, பொருளாதார சௌகரியத்தை கருத்தில் கொண்டும், குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் சம்பளம் முன்கூட்டியே விடுவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் விரைவாக விடுவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மகாராஷ்டிராவில் பணிபுரியும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாத சம்பளம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி (செவ்வாய்) அன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியை பெரியளவில் விழா எடுத்து கொண்டாடுவார்கள். மாநிலம் முழுவதும் விநாயகர் சிலையை அமைத்து, தொடர்ந்து வழிபாடுகளை நடத்துவார்கள். மேலும் ஒரு வார வழிபாட்டுக்கு பின்னர் நீர்நிலைகளில் அந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைப்பார்கள். வீட்டில் பலகாரங்கள், இனிப்புகளை செய்து சாப்பிடுவார்கள். எனவே, இந்த பண்டிகையை ஒட்டி, அதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சம்பளத்தை விடுவிக்கிறது.
அதே நேரத்தில், கேரள மாநிலத்தை பொருத்தவரை ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதிவரை கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவார்கள். இதனால், கேரளாவில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு அவர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் முன்கூட்டியே விடுவிக்கப்படுகிறது. கடந்த ஆக. 21ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகியவை வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி (திங்கள்) அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மத்திய அரசு இதில் ஒன்றை தெளிவாக விளக்கி உள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளம் மட்டுமே முன்கூட்டியே வழங்கப்படுகிறது. ஊழியர்களின் சம்பளத்தொகையில் இருந்து கூடுதலாக எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், மத்திய அரசு முன்கூட்டியே சம்பளத்தை விடுவிப்பது குறித்து அனைத்து வங்கி கிளைகளுக்கும் உத்தரவிடுமாறு ஆர்பிஐக்கு அறிவுறுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ