EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) மூன்றாம் தரப்பு மதிப்பீட்டை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், முடிந்தவரை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்குமாறு தொழிலாளர் அமைச்சகத்திடம் நாடாளுமன்றக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இப்படி ஒரு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, "வாழ்க்கைச் செலவில் பன்மடங்கு அதிகரிப்பு" ஏற்பட்டுள்ளதால், EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 -இலிருந்து அதிகரிக்க துரித கதியில் பரிசீலிக்குமாறு அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி
நவம்பர் 1995 இல் நடைமுறைக்கு வந்த ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS), ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படுகிறது.
"திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பீடு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுவதைக் கவனித்து, இந்த பயிற்சி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், முடிந்த வரை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று குழு கடுமையாக பரிந்துரைக்கிறது," என்று குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்மொழிவு கோரிக்கை (RFP) வழியின் மூலம் EPS இன் முதல் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சகம் வழங்கியுள்ளதாகவும், தற்போது இந்தப் பயிற்சி நடைபெற்று வருவதாகவும் குழு தெரிவித்துள்ளது. "கடந்த காலங்களில் இதுபோன்ற மதிப்பீட்டை நடத்துவதைப் பொறுத்தவரை, கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, இதற்கு முன்னர் அத்தகைய மதிப்பீடு எதுவும் நடத்தப்படவில்லை" என்று அமைச்சக பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
EPS இன் கீழ் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களாக உள்ளார்கள். இதனால் பணிக்காலத்தில் அவர்களால் ஓய்வூதிய நிதிக்கு அதிகம் பங்களிக்க முடிவதில்லை. ஒரு தொழிலாளியின் வாழ்நாளில் ஊதியத்தில் தேக்கம் மற்றும் பணவீக்கத்தில் அதிகரிப்பு ஆகியவை மிகக் குறைந்த கார்பஸ் மற்றும் குறைந்த ஒய்வூதியத்திற்கு வழிவகுக்கின்றது. ஆகையால், இந்தத் திட்டம் மதிப்பீடு செய்யப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். எனினும், இது சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டியது அவசியம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்
2014 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட பன்மடங்கு அதிகரிப்பு மற்றும் பிற தொடர்புடைய காரணிகளைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதில் நிதி தாக்கங்கள் இருக்கும் என்றாலும், அமைச்சகம்/EPFO இந்த குறிப்பிடத்தக்க பணியை அவசர உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது கிடைக்கும் ஓய்வூதியம் எவ்வளவு?
தற்போது, EPS 1995 இன் கீழ், மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டக் கூறுகளின் கீழ் (செப்டம்பர் 2014 முதல் அமலில் உள்ளது) மானிய உதவியை வழங்குகிறது. குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ரூ.1000 -இலிருந்து ரூ.2000 ஆக உயர்த்துவதற்கான திட்டம் 2020 இல் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இது FY25 இல் தொழிலாளர் அமைச்சகத்தின் பட்ஜெட்டுக்கு முந்தைய திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும் தொழிலாளர் அமைச்சகம் குழுவிடம் தெரிவித்தது.
2023-24 ஆம் ஆண்டில் EPS இன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 78.5 லட்சமாக இருந்தது. அவர்களில், 36.6 லட்சம் ஓய்வூதியதாரர்கள் அந்த நிதியாண்டில் ரூ.1000 குறைந்தபட்ச ஓய்வூதியத்தைப் பெற்றனர். மேலும் 20.6 லட்சம் பேர் இந்த குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகையைப் பெற அரசாங்க ஆதரவைப் பெற்றனர்.
மேலும் படிக்க | உங்கள் EPF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 5 வழிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ