EPFO Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உயர் முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (CBT), அக்டோபர் 13 ஆம் தேதி EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மெகா சலுகைகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. EPFO 3.0 சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தப்படாத ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் குறித்த முடிவு உட்பட பல முக்கிய முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழு கூட்டம்
குறைந்தபட்ச ஓய்வூதியம் பற்றிய பிரச்சினை திங்கட்கிழமை CBT கூட்டத்தில் விவாதிக்கப்படும் நிகழ்ச்சி நிரல்களில் இல்லை என்று கூறப்படுகின்றது. இருப்பினும், EPS ஓய்வூதியம் விவாதத்திற்கு கொண்டு வரப்படலாம் என்று பிசினஸ் டுடே அறிக்கை ஆதாரங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம்
பல ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சில ஆண்டுகளாக குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி வருகின்றன. குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற கருத்தும் உள்ளது. எனினும், இதை இப்போது அரசாங்கம் கண்டிப்பாக உயர்த்தும் என கூறப்படுகின்றது. இது உயர்த்தப்பட்டால், அதற்கான செலவை அரசாங்கம் ஏற்க வேண்டும். அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தினால், EPS கணக்கின் கீழ் 11 ஆண்டுகளில் இது முதல் திருத்தமாக இருக்கும்.
ஓய்வூதியம் எவ்வளவு உயர்த்தப்படும்?
குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதைய ரூ.1,000 இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற பிரபலமான எதிர்பார்ப்பு உள்ளது. எனினும், சில மாதங்களாக EPS இன் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஆனால், அது சாத்தியமில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ.2500? ரூ.7500? EPS குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு உயரும்?
EPFO இந்த வார இறுதியில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.2,500 ஆக உயர்த்தக்கூடும் என சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது தீபாவளிக்கு முந்தைய பரிசாக இருக்கும். இது நடந்தால், குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதைய ரூ.1,000 ஓய்வூதியத்திலிருந்து 1.5 மடங்கு, அதாவது 150% உயரும்.
Minimum Monthly Pension: அதிகரிக்குமா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்?
இருப்பினும், முன்னதாக, பல்வேறு தொழிற்சங்கங்களும் ஊழியர்களும் ரூ.7,500 குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கான கோரிக்கையை வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் அரசாங்கத்தின் ஆக்சுவேரியல் பற்றாக்குறையின் சுமை அதிகரிக்கும் என்பதால் ரூ.7,500 குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்ந்தால், அது தற்போதைய ஓய்வூதியத்திலிருந்து 7.5 மடங்கு, அதாவது 750% அதிகரிப்பாக இருக்கும்.
EPS 95 என்பது "வரையறுக்கப்பட்ட பங்களிப்பு-வரையறுக்கப்பட்ட நன்மை" சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். ஊழியர் ஓய்வூதிய நிதியின் மூலதனம் (i) ஊதியத்தில் 8.33 சதவீதம் முதலாளியின் பங்களிப்பு; மற்றும் (ii) மாதத்திற்கு ரூ.15,000/- வரை ஊதியத்தில் 1.16 சதவீத பட்ஜெட் ஆதரவு மூலம் மத்திய அரசின் பங்களிப்பு ஆகியவற்றால் ஆனது என்று அரசாங்க வலைத்தளம் தெரிவிக்கிறது.
இபிஎஸ் ஓய்வூதியத்திற்கு யார் தகுதியுடையவர்?
- EPS, 1995 இன் அனைத்து உறுப்பினர்களும் 10 ஆண்டுகள் தகுதியான சேவையுடன் 58 வயதை எட்டும்போது ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராகின்றனர்.
- ஒரு உறுப்பினர் வேலையில் இல்லாவிட்டால், 10 ஆண்டுகள் தகுதியான சேவை இருந்து 50 வயதை எட்டினால், குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தையும் தேர்வு செய்யலாம்.
இபிஎஸ் ஓய்வூதியம் சுருக்கமாக....
- அக்டோபர் 13 ஆம் தேதி மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடக்கவுள்ளது.
- இதில் இபிஎஸ் ஓய்வூதிய உயர்வு உட்பட பல முக்கிய விஷயங்கள் பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இபிஎஸ் ஓய்வூதியம் ரூ.1,000 -இலிருந்து ரூ.2,500 ஆக அதிகரிக்கும் என கூறப்படுகின்றாது.
- இபிஎஸ் ஓய்வூதியம் உயர்ந்தால், அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









