EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், விவரம் இதோ

EPFO Update: தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்துமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2025, 10:37 AM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி.
  • இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.
  • நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை.
EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், விவரம் இதோ

EPS Pension Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்துமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் EPFO ​​சந்தாதாரர்களுக்கு, குறிப்பாக தற்போது மாதத்திற்கு ரூ.1,000 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி

2014 ஆம் ஆண்டில், மத்திய அரசு EPFO ​​உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.250 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தியது. இந்த நடவடிக்கை ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நிவாரணமாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் இந்த ஓய்வூதியத்தில் எந்த அதிகரிப்பும் ஏற்படவில்லை. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, வாழ்க்கை செலவுகளில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும். குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் எந்த வித அதிகரிப்பும் ஏற்படவில்லை. ஓய்வூதியதாரர்களுக்கு, ரூ.1,000 ஓய்வூதியம் போதுமானதாக இல்லை.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

ஓய்வூதியம் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளதால், ஓய்வூதியத்தை அதிகரிப்பது மிகவும் அவசியமாகிவிட்டது. இதனால் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைமை மேம்படும் என்ற கருத்து உள்ளது. மாத ஓய்வூதியமான ரூ.1,000 கொண்டு, ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிவதில்லை. ஆகையால், அதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.

Parliamentary Panel Recommendation: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, EPFO -வின் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2014 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றும், ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குழு தெரிவித்துள்ளது. இது தவிர, நிதி தாக்கத்தை மனதில் கொண்டு, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக அரசாங்கம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு கூறியுள்ளது.

இதனுடன், திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், இது 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் குழு தெரிவித்துள்ளது. இது ஓய்வூதியத் திட்டம் முற்றிலும் சரியான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்குத் தகுதியான ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.

EPS Pensioners: இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு

EPF திட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மூன்றாம் தரப்பு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், இது 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. தனியார் துறை பணிகளில் உள்ள ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாதா மாதம் 12 சதவீத தொகை இபிஎஃப் கணக்கிற்காக கழிக்கப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் ஒரு பகுதி EPS-க்குச் செல்கிறது. இது ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

ஓய்வூதிய அதிகரிப்பு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

அரசாங்கம் ஓய்வூதியத்தை அதிகரிக்க முடிவு செய்தால், அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான EPFO ​​உறுப்பினர்கள் மீது இருக்கும். ஓய்வூதிய அதிகரிப்பு ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு நிலையான மற்றும் வழக்கமான வருமான ஆதாரத்தையும் வழங்கும். இது தவிர, இது ஓய்வூதியதாரர்களுக்கு பணவீக்கத்திற்கு எதிராக ஒரு பெரிய பாதுகாப்பு கவசத்தை வழங்கும். இது அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும்.

மேலும் படிக்க | ஏழை மக்களுக்கு உதவ மத்திய அரசு தரும் 2 லட்ச ரூபாய்! எப்படி பெறுவது?

மேலும் படிக்க | Mutual Fund SIP: மாதம் ரூ.2000 முதலீட்டில் ரூ.1.1 கோடி கார்பஸ்.... சாத்தியமாக்கும் பரஸ்பர நிதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News