EPF கணக்கில் வட்டி வந்துவிட்டதா? எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது? இந்த 4 எளிய வழிகளில் செக் செய்யலாம்

EPFO Balance Check: ஆன்லைனில் இபிஎஃப்ஓ போர்ட்டல் மற்றும் உமங் செயலி மூலமாகவும் ஆஃப்லைனில் மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் இந்த தகவலை பெற முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2025, 12:08 PM IST
  • உங்கள் கணக்கில் உள்ள இபிஎஃப் இருப்பு எவ்வளவு?
  • 4 எளிய வழிகளில் இதை தெரிந்துகொள்ளலாம்.
  • அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF கணக்கில் வட்டி வந்துவிட்டதா? எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது? இந்த 4 எளிய வழிகளில் செக் செய்யலாம்

EPFO Balance Check: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான முக்கியமான நிதி பாதுகாப்பாக்க கருதப்படுகின்றது. இதன்  மூலம் பணி ஓய்வுக்கு பிறகு மொத்த பணமாக ஒரு குறிப்பிட்ட தொகை கிடைப்பதோடு, ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் மாதா மாதம் ஓய்வூதியமும் கிடைக்கின்றது.

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்

எனினும் பணி ஓய்வுக்கு பிறகுதான் இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையை எடுக்க வேண்டும் என்பதில்லை. சில குறிப்பிட்ட சதர்ப்பங்களில் இபிஎஃப் சந்தாதாரர்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையை பணி ஓய்வுக்கு முன்னரே எடுக்கலாம். 

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் எந்தெந்த சந்தர்ப்ப்பங்களில் பணி ஓய்வுக்கு முன்னர் பணத்தை எடுக்க முடியும்?

- வீடு கட்டுதல் / வாங்குதல்
- மருத்துவ அவசரநிலை
- திருமணம்
- கல்வி

போன்ற சில சூழ்நிலைகளில் ஊழியர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். 

EPF Interest Amount: இபிஎஃப் வட்டித் தொகை

தற்போது இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளில் வட்டி தொகைக்காக காத்திருக்கிறார்கள். உங்கள் கணக்கில் இபிஎஃப் வட்டி வந்து விட்டதா? உங்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள இபிஎஃப் இருப்பு (EPF Balance) எவ்வளவு? 4 எளிய வழிகளில் இதை தெரிந்துகொள்ளலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

EPF Balance Check

ஆன்லைனில் இபிஎஃப்ஓ போர்ட்டல் மற்றும் உமங் செயலி மூலமாகவும் ஆஃப்லைனில் மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் இந்த தகவலை பெற முடியும்.

EPFO ​​portal: இபிஎஃப் போர்டல் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்யும் முறை

- முதலில் உங்கள் UAN ஐ செயல்படுத்த வேண்டும்.
- EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திட்கு செல்லவும்.
- ‘For Employees’ என்ற விரிவின் கீழ், ‘Member UAN/Online Service’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ‘Activate UAN’என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் UAN, மொபைல் எண் மற்றும் PF உறுப்பினர் ஐடியை நிரப்பவும்.
- ‘Member UAN/Online Services’ திரைக்குச் செல்லவும்.
- உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு லாக்-இன் செய்யவும்.
- ‘View’ டேபைக் கிளிக் செய்யவும்.
- ‘Passbook’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் PF பாஸ்புக் இருப்பு மற்றும் பரிவர்த்தனை விவரங்களைக் காண்பிக்கும்.
 
UMANG App: உமங் செயலி மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்யும் முறை

UMANG செயலி என்பது ஒரு அரசாங்க தளமாகும். இதன் மூலம் உறுப்பினர்கள் EPFO ​​தொடர்பான சேவைகளைப் பெறலாம்.

- செயலியின் முகப்புத் திரைக்குச் சென்று தேடல் பட்டியில் ‘EPFO’ என டைப் செய்யவும்.
- EPFO ​​சேவைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- ‘View Passbook’ அல்லது ‘PF Balance’ விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் UAN ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
- இப்போது உங்கள் PF இருப்பு, பரிவர்த்தனை வரலாறு மற்றும் பிற விவரங்களைக் காணலாம்.

Missed Call: மிஸ்டு கால் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்யும் முறை

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம்

SMS: எஸ்எம்எஸ் மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்யும் முறை

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு 'EPFOHO UAN ENG' என்று டைப் செய்து SMS அனுப்ப வேண்டும். 'ENG' என்பது மொழி விருப்பத்தை குறிக்கிறது (உதாரணமாக, ஆங்கிலம்). தமிழில் செய்தியை பெற  EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும். அதன் பிறகு, EPF கணக்குத் தகவலுடன் SMS ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.

மேலும் படிக்க | EPFO Update: UAN ஆக்டிவேட் செய்துவிட்டீர்களா? பிப்ரவரி 15 கடைசி தேதி... எளிய ஆன்லைன் செயல்முறை இதோ

மேலும் படிக்க | BoB FD vs PNB 40 FD: 400 நாள்கள் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? எதில் அதிக வட்டி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News