மார்ச் 14 | HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! UPI, நெட் பேங்கிங் சேவை நிறுத்தம்

HDFC Bank Maintenance UPI Down: மார்ச் 14, 2026 அன்று அதிகாலை 02:30 மணி முதல் 06:30 மணி வரை HDFC வங்கியின் கணினி பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த 4 மணி நேர இடைவெளியில் UPI, நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் சேவைகள் இயங்காது. ஆனால், PayZapp வாலட் தடையின்றி செயல்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 14, 2026, 02:03 PM IST
மார்ச் 14 | HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! UPI, நெட் பேங்கிங் சேவை நிறுத்தம்

வங்கிச் சேவை செய்திகள:  HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திட்டமிடப்பட்ட கணினி பராமரிப்புப் பணிகள் (System Maintenance) காரணமாக, மார்ச் 14 அன்று நெட் பேங்கிங் (NetBanking) மற்றும் UPI பரிவர்த்தனைகள் உட்பட பல டிஜிட்டல் வங்கி சேவைகள் நான்கு மணி நேரத்திற்கு தற்காலிகமாக செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்தெந்த சேவைகள் பாதிக்கப்படும்?, எத்தனை நாட்கள் பேங்கிங் சேவைகள் பாதிக்கப்படும்?, அதற்கான தீர்வு என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

எச்டிஎஃப்சி வங்கி சேவை எதற்காக நிறுத்தம்?

எதற்காக (HDFC) வங்கி தனது டிஜிட்டல் வங்கி சேவைகளை மேம்படுத்தும் வகையில், திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதன் காரணமாக மார்ச் 14, 2026 அன்று அதிகாலை சுமார் 4 மணி நேரம் வங்கி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது HDFC வங்கி  சேவைகள் பாதிக்கப்படும்?

HDFC வங்கி வழங்கிய தகவலின்படி, பராமரிப்பு பணிகள் கீழ்க்கண்ட நேரத்தில் நடைபெறும்:

  • தேதி: 14 மார்ச் 2026
  • நேரம்: அதிகாலை 02:30 மணி முதல் 06:30 மணி வரை (IST)

வங்கி சேவை முடக்கம்: எந்தெந்த சேவைகள் கிடைக்காது?

எச்டிஎஃப்சி வங்கி சேவை நிறுத்தப்படும் இந்த 4 மணி நேர இடைவெளியில், வங்கியின் நெட் பேங்கிங் (NetBanking) மற்றும் மொபைல் ஆப் (Mobile App) மூலம் பின்வரும் சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியாது.

  1. கணக்கு விவரங்களை அணுகுதல் (Accounts access)
  2. டெபாசிட்கள் (Deposits)
  3. UPI, NEFT, IMPS, RTGS மற்றும் வங்கிக்குள்ளான பணப்பரிமாற்றங்கள் (Funds transfers)
  4. ஆன்லைன் கட்டணச் செலுத்தல்கள் (Online payments)
  5. கணக்கு தொடர்பான இதர பரிவர்த்தனைகள்

@okhdfcbank UPI பரிவர்த்தனை இயங்காது

Google Pay, PhonePe போன்ற பிற செயலிகள் (Third-party apps) HDFC வங்கியின் UPI ஐடி (உதாரணமாக: @okhdfcbank) பயன்படுத்தி, அதன்மூலம் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளும் இந்த நேரத்தில் இயங்காது என்று வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

HDFC வங்கி சேவைக்கான தீர்வு என்ன?

முக்கியமான டிஜிட்டல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், வங்கியின் PayZapp Wallet வசதி இந்த பராமரிப்பு நேரத்திலும் தடையின்றி இயங்கும் என வங்கி தெரிவித்துள்ளது. அவசரத் தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் PayZapp வாலட்டைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் தடையற்ற டிஜிட்டல் வங்கி அனுபவத்தை வழங்குவதற்காகவே இந்த தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்படுகிறது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, மார்ச் 14 அதிகாலை நேரத்தில் நீங்கள் ஏதேனும் முக்கியமான பணப் பரிமாற்றங்கள் செய்யத் திட்டமிட்டிருந்தால், அதை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

1. HDFC வங்கி சேவைகள் எப்போது கிடைக்காது?
மார்ச் 14, 2026 அன்று அதிகாலை 02:30 மணி முதல் 06:30 மணி வரை சேவைகள் கிடைக்காது.

2. HDFC வங்கி ஏன் சேவைகளை நிறுத்துகிறது?
வங்கி தனது கணினி அமைப்பில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.

3. எந்த வங்கி தளங்கள் பாதிக்கப்படும்?
HDFC வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகிய இரண்டு சேவைகளும் பாதிக்கப்படும்.

4. இந்த நேரத்தில் UPI பேமெண்ட்கள் வேலை செய்யுமா?
இல்லை, HDFC வங்கியுடன் இணைக்கப்பட்ட UPI பரிவர்த்தனைகள் செயல்படாது.

மேலும் படிக்க - பிபிஎப், எஸ்எஸ்ஒய், என்பிஎஸ் கணக்கு உள்ளதா? மார்ச் 31-க்குள் கட்டாயம் இதை செய்யவும்

மேலும் படிக்க - எந்த வங்கியில் குறைவான வட்டியில் நகைக்கடன் வாங்கலாம்? முழு விவரம்

மேலும் படிக்க - Advance Tax: மார்ச் 15 கடைசி தேதி, அபராதங்களை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News