)
HDFC Bank News : ஹெச்டிஎப்சி வங்கி வாடிகையாளர்களாக இருந்தால் உங்களுக்கான மிக முக்கிய செய்தி இது. 4 மணி நேரத்திற்கு, நீங்கள் UPI மற்றும் பல வங்கி சேவைகளைப் பெற முடியாது. எனவே நீங்கள் யாருக்காவது பணத்தை மாற்ற வேண்டும் அல்லது பில் செலுத்த வேண்டும் என்றால், அதற்கேற்ப திட்டமிடுங்கள். ஹெச்டிஎப்சி வங்கியின் இந்த அறிவிப்பு குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
எப்போது முதல் எப்போது UPI ஐப் பயன்படுத்த முடியாது?
ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 மணி முதல் காலை 6:30 மணி வரை HDFC வங்கி அதன் முக்கிய டிஜிட்டல் சேவைகளை மூடி வைத்திருக்கும். ஒரு பெரிய அமைப்பு மேம்படுத்தலுக்காக வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகள் மூடப்படும்.
வங்கியின் இந்த சேவைகள் பாதிக்கப்படும்
HDFC சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான அனைத்து UPI பரிவர்த்தனைகளும் செயல்படாது
HDFC வழங்கும் RuPay கிரெடிட் கார்டு UPI பேமெண்ட்ஸ் செயல்படாது
HDFC மொபைல் பேங்கிங் செயலி UPI செயல்பாடு
HDFC உடன் ஒருங்கிணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் UPI பரிவர்த்தனைகள் செயல்படாது
HDFC மூலம் வணிகர்களுக்கு UPI பேமெண்ட்ஸ் செய்வது செயல்படாது
நெட்பேங்கிங் செயல்படாது
* நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், IMPS, NEFT, RTGS நிதி பரிமாற்றங்களுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
* கணக்கு விவரங்கள், வைப்புத்தொகை, வணிகர்களுக்கான பேமெண்ட்ஸ் செயல்படாது
* வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்த வழக்கமான உள்கட்டமைப்பு மேம்படுத்தலுக்காக வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
ஜூன் 8 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு முன் பில் பேமெண்ட்ஸ் மற்றும் பரிமாற்றங்களைத் திட்டமிடுங்கள். இந்த தடையின் போது EMIகள் அல்லது சந்தாக்கள் போன்ற தொடர்ச்சியான பரிவர்த்தனைகளை திட்டமிடுவதைத் தவிர்க்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ