Indian Railways, ATM On Train: இந்தியன் ரயில்வே, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களை தினமும் இயக்கி வருகிறது. இந்த ரயில் சேவைகள் தினமும் கோடிக்கணக்கான பயணிகளால் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.
ஏழை எளிய மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பலரும் பயன்படுத்தும் சேவையாக இந்தியன் ரயில்வே உள்ளது எனலாம். அதிவிரைவு ரயில்கள் முதல் பயணிகள் ரயில் வரை பல தரப்பினரின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியன் ரயில்வே பல்வேறு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை அளிப்பது உள்ளிட்டவை இந்தியன் ரயில்வேவை தனித்துவமான சேவைகளில் ஒன்று எனலாம்.
ATM On Train: ரயிலிலும் இனி ஏடிஎம்
அந்த வகையில், இந்தியன் ரயில்வே தற்போது தனது பயணிகளுக்கு வசதியளிக்க புதிய முன்னெடுப்பு ஒன்றையும் தொடங்கியிருக்கிறது. நாட்டிலேயே முதல்முறையாக மும்பை - மன்மாட் பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சேவை பல்வேறு பயணிகளையும் கவர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஒரு ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ரயில் அதன் பயணத்தில் இருக்கும்போது நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்திய ரயில்வேயின் புதுமையான மற்றும் கட்டணம் அல்லாத வருவாய் யோசனைகள் திட்டத்தின் (INFRIS) அடிப்படையில் இந்த முன்னெடுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.
ATM On Train: சோதனை வெற்றி
இந்தியன் ரயில்வேயின் பூசாவல் கோட்டம் மற்றும் பேங்க் ஆப் மகாராஷ்டிரா இரண்டும் கைக்கோர்த்து இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், சோதனை தற்போது நன்றாக முடிந்துள்ளது என்றும் ரயில் பயணம் முழுவதும் இந்த ஏடிஎம் இயந்திரம் சிறப்பாக இயங்கியது என்றும் கூறினார்.
அதே நேரத்தில், மும்பை - மன்மாட் பஞ்சாவதி ரயில் பயணத்தில் இகத்புரி மற்றும் கசாரா ஆ்கிய பகுதிகளுக்கு இடையே நொட்வார்க் சார்ந்த பிரச்னை இருந்துள்ளது. இந்தியன் ரயிவ்வே பூசாவலின் கோட்ட ரயில்வே மேலாளர் இட்டி பாண்டே கூறுகையில்,"சோதனை முடிவுகள் நன்றாக இருந்தன. மக்கள் இப்போது பயணம் செய்யும் போது பணத்தை எடுக்க முடியும். இயந்திரத்தின் செயல்திறனை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.
பூசாவல் கோட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட INFRIS கூட்டத்தின் போது இந்த யோசனை முதலில் முன்மொழியப்பட்டது என்றும் இந்த திட்டத்திற்கான பரிந்துரை வழங்கப்பட்ட உடனே அதை எவ்வாறு சாத்தியமாக்குவது என்பது குறித்து குழு விரைவாகப் பணியாற்றத் தொடங்கினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ATM On Train: ஒட்டுமொத்த ரயில் பயணிகளும் பயன்படுத்தலாம்
இந்த ஏடிஎம் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் மட்டும் பொருத்தப்பட்டிருந்தாலும், ரயிலின் மொத்த 22 பெட்டிகளின் பயணிகளும் இந்த ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி எந்த நேரத்திலும் பணம் எடுத்துக்கொள்ள இயலும். பெட்டிகள் அனைத்தும் இணைப்பிலேயே இருக்கும் என்பதால் நீங்கள் ரயிலில் நடந்தே ஏடிஎம் இயந்திரம் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடலாம்.
ATM On Train: பணம் எடுப்பது மட்டுமின்றி...
பணம் எடுப்பது மட்டுமின்றி பயணிகள் காசோலை புத்தகங்களை ஆர்டர் செய்தல், கணக்கு அறிக்கைகளை பெறுதல் ஆகியவற்றுக்கும் இந்த ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தலாம். மேலும், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மும்பை-ஹிங்கோலி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளும் இதே ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துக்கொள்ள முடியும். அதாவது, இந்த ரயில் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகளையும் பகிர்ந்துகொள்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ATM On Train: பாதுகாப்பு அம்சங்கள்
நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது பேரூதவியாக இருக்கும். மேலும் ஏடிஎம் இயந்திரத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக, அதற்கு ஷட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 24x7 சிசிடிவி இயந்திரமும் ஏடிஎம் இயந்திரத்தை கண்காணிக்கிறது. பயணிகள் மத்தியில் இந்த சேவைக்கு வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், மேலும் பல ரயில்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படலாம் என்று இந்தியன் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் புக் செய்யும் நேரத்தில் மாற்றமா? IRCTC விளக்கம்
மேலும் படிக்க | தட்கல் புக்கிங் செய்ய சரியான நேரம் எது தெரியுமா? இந்த தவறுகளை பண்ணாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









