குட் நியூஸ்... ரெப்போ விகிதத்தை குறைத்தது RBI... வீடு, வாகன் கடன் EMI குறையும்

RBI Repo Rate Cut: வீட்டு கடன், கார் கடன், தனிநபர் கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைப்பதாக அறிவித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 9, 2025, 11:52 AM IST
  • RBI ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
  • வீடு, கார் மற்றும் நிறுவனக் கடன்களுக்கான EMI குறையும்.
  • பிப்ரவரி மாதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டன.
குட் நியூஸ்... ரெப்போ விகிதத்தை குறைத்தது RBI... வீடு, வாகன் கடன் EMI குறையும்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. பணவியல் கொள்கை குழு (MPC), உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது. 'பணவியல் கொள்கை குழுவின் (MPC) உறுப்பினர்கள், பாலிசி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 6% ஆக மாற்றி உடனடியாக அமலுக்கு கொண்டு வர ஒப்புதல் அளித்துள்ளனர்' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார். கூட்டத்தில் உலக வளர்ச்சிக்கான புதிய சவால்களையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

Add Zee News as a Preferred Source

வீடு, கார் மற்றும் நிறுவனக் கடன்களுக்கான EMI குறையும்

தொடர்ந்து இரண்டாவது முறையாக முக்கிய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக ரிசர்வ் வங்கி புதன்கிழமை அறிவித்தது. மத்திய வங்கியின் இந்த முடிவு, அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு ஆதரவை வழங்கும் நம்பிக்கையை எழுப்பியுள்ளது. வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகு, முக்கிய கொள்கை விகிதம் அதாவது ரெப்போ விகிதம் 6 சதவீதமாகக் குறைந்தது. இந்த நடவடிக்கை வீடு, வாகன மற்றும் கார்ப்பரேட் கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

பிப்ரவரி மாதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டன

பிப்ரவரியில் அதன் முந்தைய பணவியல் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25 சதவீதமாகக் குறைத்தது. 2020 மே மாத்தில் நடந்த வட்டி விகிதக் குறைப்புக்குப் பிறகு, நடந்த முதல் ரெப்போ விகித குறைப்பு பிப்ரவரி மாத்தில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இடையில் 2023 பிப்ரவரி மாதத்தில் ரெப்போ விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.5 சதவீதமாக மாற்றப்பட்டது.

ரெப்போ விகிதம் குறைப்பு மற்றும் அதன் தாக்கம்

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் (Repo Rate) எனப்படும். ரெப்போ விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் கடன் விகிதங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். வீடு அல்லது கார் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு ரெப்போ விகித குறைப்பினால் EMI தொகை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும் என்பதால், இது நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாகும்.

அமெரிக்காவின் வர்த்த வரி அறிவிப்பிற்கு பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்புகள் குறைக்கப்பட்டன

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 9 முதல் இந்திய இறக்குமதிகள் மீது 26 சதவீத பரஸ்பர வரியை அறிவித்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2026 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.5% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கணித்துள்ளார். கொள்கை மற்றும் வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக வளர்ச்சி மதிப்பீடுகள் 20 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

2025-26 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்புகள்

முதல் காலாண்டில் 6.5% வளர்ச்சி

இரண்டாவது காலாண்டில் 6.7% வளர்ச்சி

மூன்றாம் காலாண்டில் 6.6% வளர்ச்சி

நான்காவது காலாண்டில் 6.3% வளர்ச்சி

மேலும் படிக்க | ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிது தான்... உங்களுக்கு கை கொடுக்கும் 7 ஃபார்முலாக்கள்

மேலும் படிக்க | Mutual Fund:ரூ.3,00,000 முதலீடு போதும்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.52,000 வருமானம் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News