)
EPFO Latest News: தனியார் துறை பணிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மாத சம்பளத்தில் 12% இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது. நிறுவனமும் அதே அளவு தொகையை இபிஎஃப் உறுப்பினர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது. எனினும், இதில் ஒரு பங்கு இபிஎஃப் கணக்கிற்கும், ஒரு பங்கு இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது.
ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வடிவமைக்கப்பட்ட EPFO சலுகைகளின் ஒரு பகுதியாகும். உறுப்பினர் இறந்தாலோ அல்லது நிரந்தரமாக ஊனமுற்றாலோ இது குடும்ப மற்றும் ஊனமுற்ற ஓய்வூதியங்களையும் வழங்குகிறது. இந்தத் திட்டம் முக்கியமாக இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களை உள்ளடக்கியது.
ஊழியர் மற்றும் நிறுவனம் என இரு தரப்பும் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை EPF-க்கு பங்களிக்கின்றனர். முதலாளியின் பங்கில், 8.33 சதவீதம் (ரூ. 1,250 வரை) EPS-க்குச் செல்கிறது. மாதம் ரூ. 15,000 வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு அரசாங்கம் 1.16 சதவீதம் (ரூ. 174 வரை) சேர்க்கிறது.
EPS இன் கீழ் ஓய்வூதியம் பெற, நீங்கள் கண்டிப்பாக:
- EPFO உறுப்பினராக இருக்க வேண்டும்.
- குறைந்தது 10 ஆண்டுகளுக்கு EPS இல் பங்களிக்க வேண்டும்.
- 58 வயதை எட்டிய பிறகே ஓய்வூதியம் கிடைக்கும்.
- எனினும், எர்ளி ஓய்வூதியத்தை 50 ஆண்டுகளில் பெறலாம்.
- ஆனால் 58 வயதிற்கு முன்பு ஓய்வூதியம் பெற்றால், ஓய்வூதியத் தொகை வருடத்திற்கு 4 சதவீதம் குறைகிறது.
இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான சூத்திரம்: ஓய்வூதியம் = (சராசரி சம்பளம் × ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை) ÷ 70
சராசரி சம்பளம்: கடந்த 60 மாதங்களின் அடிப்படை ஊதியம் + DA (அதிகபட்சம் ரூ. 15,000)
ஓய்வூதிய சேவை: EPS இன் கீழ் பணிபுரிந்த மொத்த ஆண்டுகள் (அதிகபட்சம் 35 ஆண்டுகள்) உங்கள் சேவை 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால், உங்கள் சேவையில் கூடுதலாக 2 ஆண்டுகள் சேர்க்கப்படும்.
- குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்: மாதத்திற்கு ரூ. 1,000
- அதிகபட்ச ஓய்வூதியம்: ரூ. 15,000 × 35 ÷ 70 = ரூ. 7,500
EPS வெவ்வேறு சூழ்நிலைகளை உள்ளடக்கியது:
பணி ஓய்வு ஓய்வூதியம்: 58 வயதுக்குப் பிறகு
ஆரம்பகால ஓய்வூதியம்: 50 வயதிலிருந்து (குறைக்கப்பட்ட விகிதம்)
ஊனமுற்றோர் ஓய்வூதியம்: நிரந்தர ஊனமுற்றவர்களுக்கு
குடும்ப ஓய்வூதியம்: உறுப்பினரின் மரணத்திற்குப் பிறகு மனைவி அல்லது சார்ந்திருப்பவர்களுக்கு
இபிஎஸ் ஓய்வூதியம் சுருக்கமாக.....
- EPS -க்கான நிதியை நிறுவனங்கள் அளிக்கின்றன, ஊழியர்கள் இதில் பங்களிப்பதில்லை.
- ஓய்வூதியம் சேவை ஆண்டுகள் மற்றும் சராசரி சம்பளத்தைப் பொறுத்தது.
- ஓய்வூதியக் கணக்கீட்டிற்கான சம்பள வரம்பு ரூ. 15,000.
- EPFO போர்ட்டலில் உங்கள் EPF பாஸ்புக் மூலம் EPS விவரங்களை செக் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ