வருமான வரித்துறையின் படி ஆண் மற்றும் பெண் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

நல்ல நாளில் நகைகள் வாங்குவது வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்தியாவில் தங்க நகைகள் வெறும் அணிகலன் மட்டுமல்ல, அது பரம்பரை மற்றும் சமூக அந்தஸ்தின் சான்றாக உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Mar 24, 2025, 09:07 AM IST
  • ஒருவர் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்?
  • இந்திய வருமான வரித்துறையின் வரம்பு இதுதான்.
  • மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரித்துறையின் படி ஆண் மற்றும் பெண் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

இந்தியாவில் தங்கம் என்பது விலைமதிப்பற்ற உலோகத்தை தாண்டி, நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. செல்வம், செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக, தங்கம் இந்திய சமூகங்களின் ஒரு புனிதமான இடத்தைப் பிடித்துள்ளது. மணப்பெண்கள் தங்கள் திருமண நாளில் அணியும் விதவிதமான நகைகள் தொடங்கி, பண்டிகைகளின் போது வாங்கப்படும் நகைகள் வரை அனைத்தும் புனிதமாக பார்க்கப்படுகிறது. நல்ல நாளில் நகைகள் வாங்குவது வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. தங்க நகைகள் வெறும் அணிகலன் மட்டுமல்ல, அது பரம்பரை மற்றும் சமூக அந்தஸ்தின் சான்றாக உள்ளது. ஒவ்வொரு குடும்பங்களும் தங்கத்தை வாங்குவதில் பெருமிதம் கொள்கின்றனர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | Retirement Planning: நிம்மதியான ஓய்வு காலத்திற்கு உதவும்... அரசின் சில சூப்பர் முதலீட்டு திட்டங்கள்

தங்கத்திற்கு வரி உண்டா?

இருப்பினும், தங்கம் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக இந்திய வருமான வரித் துறையால் அமல்படுத்தப்பட்ட சிக்கலான விதிமுறைகளும் உள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும், அரசாங்கம் தங்கம் வைத்திருப்பதில் சில கடுமையான வரம்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருநபர் குறிப்பிட்ட அளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும், தனிநபர்கள் தங்கம் வாங்கியதற்கான வருமான ஆதாரம் குறித்து எப்போதும் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை மீறி நகைகளை வைத்திருக்கும் போது அது வரி ஏய்ப்பு போன்ற சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும்.

எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

இது சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அச்சுறுத்தலாகவும் பொருளாதார ரீதியாகவும் சுமையாக இருக்கலாம். மத்திய நேரடி வரிகள் வாரியம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, தங்கம் வைத்திருப்பதற்கான அனுமதிக்கப்பட்ட வரம்புகள் பாலினம் மற்றும் திருமண நிலையைப் பொறுத்து மாறுபடும். விதிகளின்படி, திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்கலாம். மேலும் திருமணம் ஆகாத பெண் 250 கிராம் தங்கம் வரை வைத்திருக்கலாம். ஆண்களுக்கு 100 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்க அனுமதி உள்ளது.

தலைமுறை தலைமுறையாகக் ஒரு குடும்பத்தில் இருக்கும் தங்கம், அதன் ஆதாரத்தைப் பொறுத்து அது வரி தாக்கங்களையும் கொண்டுள்ளது. பரம்பரைப் பொருளாகப் பெறப்பட்ட தங்கம் அல்லது விவசாய வருமானம் போன்ற வரி விலக்கு வருமானத்தைப் பயன்படுத்தி வாங்கியது வரிவிதிப்புக்கு உட்பட்டது அல்ல. ஆனால் பாரம்பரிய தங்கத்தை விற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும். எனவே, தனிநபர்கள் இந்த விதிமுறைகளைப் புரிந்துகொள்வது அவசியம். தங்கம் வைத்திருப்பவர்கள் இந்தச் சட்டங்களை தெரிந்து கொள்வது முக்கியமானது. தங்கம் செல்வம் மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டின் அடையாளமாக இருக்கும் இந்த சமூகத்தில், அதைச் சுற்றியுள்ள விதிகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் UPS: பதிவு செய் கட்-ஆஃப் டேட் இதுதான், முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News