ரேஷன் கார்டுல பெயர் சேர்க்க போறீங்களா? இதை மட்டும் பண்ணுங்க

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள் பற்றி இந்த செய்தியில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 1, 2025, 08:11 PM IST
  • ரேஷன் கார்டில் யார் யாருடைய பெயரைச் சேர்த்துக்கொள்ள முடியும்?
  • ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்.
  • ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் ஒருவருடைய பெயரை சேர்ப்பது எப்படி.
ரேஷன் கார்டுல பெயர் சேர்க்க போறீங்களா? இதை மட்டும் பண்ணுங்க

How to Add Name In Ration Card: ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு தற்போது மத்திய மாநில அரசு மலிவு விலையில் மளிகை பொருட்களை விநியோகித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் பண்டிகைக் காலங்களில் தேவைப்படும் நேரங்களிலும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் பொங்கல் தொகுப்புகள் மற்றும் நிவாரண நிதிகள் போன்ற சிறப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் உங்கள் ரேஷன் அட்டையில் புதிய குடிம்ப நபரின் பெயரை சேர்க்க வேண்டுமா. அப்படியானால் கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும். 

Add Zee News as a Preferred Source

ரேஷன் கார்டில் யார் யாருடைய பெயரைச் சேர்த்துக்கொள்ள முடியும்?
புதிதாகப் பிறந்த குழந்தை
புதிதாக திருமணம் ஆகி வந்த பெண்

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்:
அடையாளச் சான்று - ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பான் கார்டு அல்லது பாஸ்போர்ட்.
முகவரிச் சான்று - பயன்பாட்டு பில், வாடகை ஒப்பந்தம் அல்லது புதுப்பிக்கப்பட்ட முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை.
திருமணச் சான்றிதழ்.
பிறப்புச் சான்றிதழ்.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் ஒருவருடைய பெயரை சேர்ப்பது எப்படி?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க பின்பற்ற வேண்டிய ஸ்டெப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1: முதலில் https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும். 
2: "பயனாளர் நுழைவு" என்பதைப் பயன்படுத்தி உள்நுழையவும். 
3: உங்கள் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை என்டர் செய்து கேப்ட்ச்சா குறியீட்டை கொடுத்து "பதிவு செய்" என்பதைக் கிளிக் செய்யவும். 
4: தற்போது உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். 
5: OTP-ஐ உள்ளிட்டவுடன் உள்நுழையவும். அதன் பின் குடும்பத்தில் உள்ள நபர்கள், உங்களுடைய குடும்ப அட்டை நம்பர், பெரியவர்களின் எண்ணிக்கை, சிறியவர்களின் எண்ணிக்கை, மற்ற குடும்ப அட்டை விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். 
6: "மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்" என்பதன் கீழ் "உறுப்பினரை சேர்க்க" என்பதைக் கிளிக் செய்யவும். 
7: திருமணம் ஆகி கணவர் வீட்டில் பெண்ணின் பெயர் ரேஷன் கார்டில் இணைக்கப்பட வேண்டும். 
8: பின்னர் 1 முதல் 3 நாட்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கப்படும். இதனை நீங்கள் ஆன்லைனில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

விண்ணப்ப நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
மாநில அரசு வலைத்தளம் (உள்நுழைந்து "விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும்" என்பதன் கீழ் சரிபார்க்கவும்).

SMS சேவை (சில மாநிலங்கள் ஒரு தனித்துவமான விண்ணப்ப ஐடியை அனுப்பி SMS கண்காணிப்பை வழங்குகின்றன).

மேலும் படிக்க | கௌதம் அதானிக்கு மேலும் சிக்கலா? இந்திய அரசின் உதவியை நாடிய அமெரிக்கா!

மேலும் படிக்க | EPFO claim செயல்முறையில் ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News