குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்யணுமா? இந்த ட்ரிக் பாலோ பண்ணுங்க!
பலருக்கும் விமானத்தில் செல்ல ஆசை இருக்கும். ஆனால் அதன் பயண செலவு காரணமாக பலரும் அதனை விரும்புவதில்லை. பின்வரும் வழிகளில் குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்யலாம்.
விமான டிக்கெட்டுகளில் அதிக பணத்தை சேமிக்க விரும்பினால், செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் விமான நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை மாலைகளில் தங்கள் விலைகளை மாற்றுகின்றன. பலரும் வார இறுதி நாட்களில் மட்டுமே டிக்கெட்டுகளை தேடுகிறார்கள். எனவே, வாரத்தின் முதல் நாட்களில் டிக்கெட்டுகள் மலிவாக இருக்கலாம். புள்ளிவிவரங்களின்படி, பெரும்பாலோர் வெள்ளி, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விமான டிக்கெட்களை முன்பதிவு செய்கின்றனர்.
நீங்கள் பயணம் செய்வதற்கு 4 முதல் 5 வாரங்களுக்கு முன்பு டிக்கெட்களை புக் செய்ய முயற்சி செய்யுங்கள். சர்வதேச விமான பயணமாக இருந்தால் சில மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய பழங்குங்கள். இதன் மூலம் குறைந்த விலையில் டிக்கெட்களை புக் செய்ய முடியும். அதே போல முதலில் புக் செய்பவர்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கும். ஒரு விமானத்தில் 300 இருக்கைகள் இருக்கிறது என்றால் முதல் 50 பயணிகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்களை நிறுவனங்கள் தருகின்றன. அடுத்த 150 பேருக்கு நடுத்தர விலையில் டிக்கெட் கிடைக்கும். மீதமுள்ள நபர்களுக்கு அதிக விலையில் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன.
விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் முடிந்தவரை செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் பயணம் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலான விமான நிறுவனங்கள் இந்த இரண்டு நாட்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்களை தருகின்றன. இந்த சமயத்தில் அதிக கூட்டம் இருக்காது என்பதால் இந்த ஆபரை வழங்குகின்றன. வார இறுதி நாட்களில் அனைத்து விமானங்களும் நிரம்பி இருக்கும். அந்த சமயத்தில் ஆபர் எதிர்பார்க்க முடியாது.
முடிந்தவரை சிறிய விமான நிலையங்களில் இறங்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்களது செலவை குறைக்க முடியும். லண்டனுக்கு செல்ல விரும்பினால் பெரும்பாலும் ஹீத்ரோவில் இறங்க முயற்சிப்பார்கள். அடுத்த முறை, சிறிய விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சிக்கவும். அங்கிருந்து ரயில் மூலம் நீங்கள் செல்லும் இடத்திற்கு பயணம் செய்யுங்கள். இதன் மூலம் செலவை பாதியாக குறைக்கலாம்.
பிலைட் டிக்கெட்களை புக் செய்ய ஒரு இணையதளத்தை மட்டும் பார்க்க வேண்டாம். விலைகளை ஒப்பிட பல இணையதளங்களைப் பார்க்கவும். நீங்கள் சிறிது தேடினால், அதே விமான நிறுவனத்தில் குறைந்த விலையில் டிக்கெட்களை பெற முடியும். ஏர்லைன் இணையதளங்களை நீங்கள் அடிக்கடி பார்த்து இருந்தால் உங்கள் குக்கீஸ்களை அழிப்பது நல்லது. குக்கீகள் என்பது உங்கள் கணினியில் இணையதளங்கள் பற்றிய விவரங்களை சேமிக்கும் சிறிய தகவல்களாகும். நீங்கள் இதற்கு முன்பு தளத்தை அதிகம் பார்வையிட்டது தொடர்பான விவரங்களை அவை சேமித்து வைக்கும். இதனால் சில சமயங்களில் அதிக விலையில் டிக்கெட்களை காமிக்கும்.
மேலும் படிக்க | வருமான வரி சேமிப்பு டிபஸ்... இந்த அலவன்சுகளுக்கு வரி கிடையாது.. நோட் பண்ணுங்க மக்களே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ