Post Office FD: வட்டியில் மட்டும் இரு மடங்கு வருமானம், இப்படி முதலீடு செய்தால் ஜாக்பாட்

Post Office FD: தபால் நிலைய நிரந்தர வைப்புத்தொகையின் அசல் வட்டியை இரட்டிப்பாகப் பெறுவதற்கான தந்திரம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 12, 2025, 02:59 PM IST
  • தபால் நிலைய திட்டம் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இரு மடங்காக அதிகரிக்கலாம்.
  • 5 லட்சம் முதலீட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான வட்டி கிடைக்கும்.
  • கணக்கை எவ்வாறு நீட்டிப்பது?
Post Office FD: வட்டியில் மட்டும் இரு மடங்கு வருமானம், இப்படி முதலீடு செய்தால் ஜாக்பாட்

Post Office Time Deposit Scheme: மனித வாழ்க்கைக்கு பணத்தை சேமிப்பது மிக அவசியமாகும். பணத்தை ஈட்டுவதற்கு நாம் அளிக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை அதை சேமிப்பதற்கும் கொடுக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் தொகையை சேமிக்கவும், முதலீடு செய்து பெருக்கவும் பல வித திட்டங்கள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பான அரசு திட்டங்களும் அடங்கும்.

Add Zee News as a Preferred Source

Post Office Schemes: தபால் அலுவலக திட்டங்கள்

வங்கிகளைப் போலவே, தபால் நிலையத்திலும் முதலீடு செய்ய பல திட்டங்கள் உள்ளன. தபால் நிலையத் திட்டங்களிலும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கிறது. தபால் நிலைய நேர வைப்புத்தொகை (Post Office Time Deposit) அதாவது தபால் நிலைய நிரந்தர வைப்புத்தொகை (Post Office FD) அவற்றில் ஒன்று. 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட நிரந்தர வைப்புத்தொகை விருப்பத்தேர்வுகள் தபால் நிலையங்களில் கிடைக்கின்றன. 

Interest Rate: வட்டி விகிதம் எவ்வளவு?

தபால் நிலைய எஃப்டி திட்டங்களுக்கான வட்டி விகிதம் கால அளவைப் பொறுத்து மாறுபடும். ஆனால் வாடிக்கையாளர் நீண்ட காலத்திற்கு தபால் நிலையத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், நிரந்தர வைப்புத்தொகை விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். இதில், 5 வருட நிரந்தர வைப்புத்தொகை உங்கள் முதலீட்டை மூன்று மடங்காக உயர்த்தும் திறன் கொண்டது. இதில் முதலீட்டாளர்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்தாலும், வட்டியிலிருந்து மட்டுமே இரட்டிப்பு தொகையைப் பெறுவார்கள். 

ஆனால் இதற்கு வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். தபால் நிலைய நிரந்தர வைப்புத்தொகையின் அசல் வட்டியை இரட்டிப்பாகப் பெறுவதற்கான தந்திரம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

தபால் நிலைய திட்டம் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இரு மடங்காக அதிகரிக்கலாம். இதை செய்ய, 

- 5 வருட நிரந்தர வைப்புத்தொகையைத் தேர்வு செய்ய வேண்டும். 
- தற்போது, ​​இந்த நிரந்தர வைப்புத்தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. 
- இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, அது முதிர்ச்சியடைவதற்கு முன்பு அதை நீட்டிக்க வேண்டும். 
- இந்த நீட்டிப்பை நீங்கள் தொடர்ச்சியாக 2 முறை செய்ய வேண்டும்.
- அதாவது, இந்த FD-ஐ 15 ஆண்டுகளுக்கு இயக்க வேண்டும்.

5 லட்சம் முதலீட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான வட்டி கிடைக்கும்

- இந்த FD-யில் நீங்கள் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தின்படி, 5 ஆண்டுகளில் இந்தத் தொகைக்கு ரூ.2,24,974 வட்டி கிடைக்கும். 
- இந்த வழியில், மொத்தத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும். 
- ஆனால் இந்தத் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், வட்டியாக மட்டுமே ரூ.5,51,175 கிடைக்கும்.
- 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்தத் தொகை ரூ.10,51,175 ஆக இருக்கும். 
- அது முதிர்ச்சியடைவதற்கு முன்பு நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நீட்டிக்க வேண்டும். 
- இந்த வகையில், 15வது ஆண்டில், உங்களுக்கு வட்டியாக மட்டுமே ரூ.10,24,149 கிடைக்கும். 
- இந்த வழியில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அசல் தொகையுடன் மொத்தம் ரூ.15,24,149 கிடைக்கும். 
- அதாவது, மூன்று மடங்கு தொகை உங்களுக்கு கிடைக்கும்.
- அதில் வட்டியிலிருந்து மட்டுமே நீங்கள் இரண்டு மடங்குக்கு மேல் சம்பாதிக்கலாம்.

கணக்கை எவ்வாறு நீட்டிப்பது?

- அஞ்சல் அலுவலக 1 வருட FD -ஐ முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் நீட்டிக்கலாம்.
- 2 வருட FD 12 மாதங்களுக்குள் நீட்டிக்கப்படலாம்.
- 3 மற்றும் 5 வருட FD நீட்டிப்புக்கு, முதிர்வு காலத்திற்கு 18 மாதங்களுக்குள் அஞ்சல் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். 
- இது தவிர, கணக்கைத் திறக்கும் நேரத்திலும் முதிர்வுக்குப் பிறகு கணக்கை நீட்டிக்கக் கோரலாம். 
- முதிர்வு நாளில் அந்தந்த TD கணக்கிற்குப் பொருந்தும் வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்குப் பொருந்தும்.

அஞ்சல் அலுவலகத்தின் பிற FD -களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?

அஞ்சல் அலுவலகத்தின் வெவ்வேறு FD -களுக்கு வெவ்வேறு வட்டி வழங்கப்படுகிறது. 1 வருட FD -க்கு 6.90% வருடாந்திர வட்டியும், 2 வருட FD -க்கு 7.00% வருடாந்திர வட்டியும், 3 வருட FD -க்கு 7.10% வருடாந்திர வட்டியும், 5 வருட FD -க்கு 7.50% வருடாந்திர வட்டியும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Mutual Fund: ரூ.10,000 முதலீட்டை ரூ.2 கோடியாக பெருக்க உதவும் டாப்-அப் SIP மந்திரம்

மேலும் படிக்க | மீண்டும் அகவிலைப்படி அதிகரிப்பு: காத்திருக்கும் ஊழியர்கள்.... இன்று வருகிறதா முக்கிய அறிவிப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News