EPFO UAN Activation: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அதன் டிஜிட்டல் சேவைகளை மிகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் மேம்படுத்தியுள்ளது. இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் முக அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம் தங்கள் UAN (யுனிவர்சல் கணக்கு எண்) ஐ தாங்களாகவே உருவாக்கி செயல்படுத்த முடியும்.
Face Authentication Technology: முக அங்கீகார தொழில்நுட்பம்
இந்த தொழில்நுட்பம் முற்றிலும் டிஜிட்டல் மற்றும் காண்டாக்ட்லெஸ் தொழில்நுட்பமாக உள்ளது. இது கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு பயனளிக்கும். இப்போது ஊழியர்கள் உமங் செயலி மூலம், முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி UAN -ஐ தாங்களாகவே உருவாக்க முடியும். இந்தச் செயல்பாட்டில், நிறுவனத்தின் ஈடுபாடு தேவைப்படாது, காகித வேலைகளுக்கான சிக்கல்களையும் சமாளிக்க வேண்டிய அவசியமிருக்காது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இதுவரை இருந்த செயல்முறை என்ன?
இதுவரை UAN -ஐ உருவாக்கும் பொறுப்பு முதலாளி / நிறுவனத்திடமே இருந்தது. நிறுவனங்கள் ஊழியர் தரவை EPFO க்கு அனுப்பின. இது ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்டது. ஆனால் சில நேரங்களில் அதில் தந்தையின் பெயர் அல்லது மொபைல் எண் போன்றவை தவறாக உள்ளிடப்படுவது, பணியாளருக்கு UAN தகவல் கிடைக்காத நிலை, UAN ஐ செயல்படுத்துவதற்கான OTP செயல்முறை காரணமாக குழப்பம் போன்ற பல தவறுகள் ஏற்பட்டன.
2024-25 நிதியாண்டில் உருவாக்கப்பட்ட 1.26 கோடி UAN-களில், 35% -ஐ மட்டுமே செயல்படுத்த முடிந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், ஊழியர்கள் பின்னர் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் க்ளெய்ம்களில் தாமதங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கூடுதலாக, தரவைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இப்போது இவற்றைப் போன்ற எந்தப் பிரச்சினையும் இருக்காது.
புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகள் என்ன?
- கைமுறை தரவு உள்ளீடு தேவையில்லை.
- 100% அடையாள உறுதிப்படுத்தல், ஆதாரிலிருந்து நேரடி சரிபார்ப்பு.
- ஒரு முறை UAN உருவாக்கம் மற்றும் செயல்படுத்தல்
- ஊழியர்கள் இந்த செயல்முறையை தாங்களாகவே முடிக்க முடியும்.
- அதாவது முதலாளி / நிறுவனத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
- அனைத்து EPFO சேவைகளுக்கும் உடனடி அணுகல் (பாஸ்புக் செக்கிங், KYC புதுப்பிப்புகள், க்ளெய்ம்கள் போன்றவை).
- வேலையில் சேரும் நேரத்தில் e-UAN அட்டையை முதலாளி / நிறுவனத்திடம் கொடுக்கலாம்.
UMANG App: நீங்களே UAN-ஐ உருவாக்குவது எப்படி?
- உமங் செயலியைப் பதிவிறக்கவும்.
- AadhaarFaceRD செயலியையும் பயன்படுத்தலாம்.
- உமங் செயலியைத் திறந்து 'UAN Allotment and Activation' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஆதார் எண்ணையும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணையும் உள்ளிடவும்.
- OTP மூலம் சரிபார்க்கவும்.
- அடுத்து, கேமராவை ஆன் செய்து - லைவ் புகைப்படம் எடுக்கவும் (பார்டர் க்ரீன் என்றால் சரி என்று பொருள்)
- புகைப்படம் ஆதார் தரவுகளுடன் பொருத்தப்படும்.
- பொருத்தம் சரியாக இருந்தால், UAN உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
- உங்கள் UAN-ஐ SMS மூலம் பெறுவீர்கள்.
- உங்கள் e-UAN கார்டை உமங் செயலி அல்லது போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வலுவான பாதுகாப்பு
OTP அல்லது பிற அடையாள செயல்முறைகளை விட முக அங்கீகாரம் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், EPFO-வில் அடையாளம் காணும் முறை முற்றிலும் மோசடி செய்ய முடியாததாக மாறும். எதிர்காலத்தில், EPFO அலுவலகத்தையோ அல்லது நிறுவனத்தையோ தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமின்றி, இன்னும் பல சேவைகள் தானாகவே கிடைக்கும். UAN வைத்திருந்து அது செயல்படுத்தப்படாத பழைய உறுப்பினர்கள், இப்போது உமங் செயலி மூலம் முக அங்கீகாரம் மூலம் UAN ஐ எளிதாக செயல்படுத்த முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









