)
Birth certificate : பிறப்புச் சான்றிதழ் என்பது ஒருவரின் முதல் அடையாள ஆவணம் மட்டுமல்ல, எதிர்கால வாழ்க்கையில் அனைத்து அரசு சார்ந்த சேவைகளுக்கும் இது மிகவும் அத்தியாவசிய ஆவணமாக இருக்கும். இதனை எளிதாக வீட்டில் இருந்தபடியே பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்வது அவசியம். பெரும்பாலான மக்கள் பிறப்புச் சான்றிதழைப் பள்ளி சேர்க்கைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக நினைக்கின்றனர். ஆனால், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவது என அனைத்துக்கும் பிறப்புச் சான்றிதழ் அவசியமான ஒரு ஆவணமாகும். இவை அனைத்தையும் விட, இது ஒருவரின் குடியுரிமைக்கு மிக முக்கியமான ஆவணமாகும்.
பிறப்புச் சான்றிதழ் பெறுவது எளிது
உங்களிடம் இந்த ஆவணம் இல்லையென்றால் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், இப்போது இதை எந்த வயதிலும் எளிதாகப் பெறலாம். இன்றைய டிஜிட்டல் உலகில், இதை வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பித்துப் பெறலாம் அல்லது ஆஃப்லைனிலும் பெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
* முதலில், அரசு வலைத்தளமான https://dc.crsorgi.gov.in/crs என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
* பிறப்புச் சான்றிதழ் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பதிவுப் படிவத்தை நிரப்பவும்.
* கேட்கப்பட்ட தகவல்களுடன் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
* விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததும், உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும்.
* உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆஃப்லைனில் விண்ணப்பிக்கும் முறை
நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பவில்லை என்றால், அருகில் உள்ள மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பித்து பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
பெற்றோரின் ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நிரந்தர மொபைல் எண்
இந்த ஆவணம் இல்லாதவர்கள், மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தகவலைப் பிறருக்கும் பகிர்ந்து, பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவத்தை உணரச் செய்யலாம்.
பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான விதிமுறைகள்
குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் இலவசமாக குழந்தையின் சேர்ப்பு செய்யலாம். ஒரு வருடம் நிறைவுற்ற பின்னர் ரூ.5/- கால தாமதக் கட்டணமாகப் பெற்று கீழ்கண்ட ஆதார ஆவணங்களை பெற்று பெயர் சேர்ப்பு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட குழந்தையின் பெயரை எக்காரணம் கொண்டும் முழுமையாக திருத்தம் செய்யக்கூடாது.
பிறப்பு பதிவு செய்து 6 ஆண்டுகளுக்குள்:
• பெற்றோரின் அடையாளம் & முகவரிக்கான ஆதாரங்கள் - குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்,
பிறப்பு பதிவு செய்து 6 ஆண்டுகளுக்கு மேல்:
குழந்தையின் பெயர், பிறந்த தேதி & தந்தை பெயர் குறிப்பிட்டு வழங்கப்படும் பள்ளியின் சான்று (Bonafide certificate), பெற்றோரின் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதார ஆவணங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர வருமான கணக்கு அட்டை, பாஸ்போர்ட் போன்றவை கொடுக்க வேண்டும்
பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டுகளுக்கு மேல்:
SSLC பள்ளி மதிப்பெண் பட்டியல் நகல், பெற்றோரின் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரங்கள் - குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமானம் அட்டை, பாஸ்போட் போன்றவை கொடுக்க வேண்டும். பெற்றோரால் நோட்டரி பப்ளிக் முன்பாக 20 ரூபாய் முத்திரைத் தாளில் வழங்கப்படும் பிரமாண பத்திரம். பிரமாண பத்திரத்தில் பெற்றோர் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
திருத்தங்களுக்காக வழங்கப்படவேண்டிய ஆவணங்கள்:
பிறப்பு பதிவில் திருத்தம் செய்ய
திருத்தங்களுக்காக குழந்தையின் பெற்றோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோர் மரித்துள்ள நிலையில் தனியர் 18 வயது பூர்த்தியடைந்திருந்தால் பெற்றோரின் இறப்புச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம், தனியர் 18 வயது பூர்த்தியாகாத நிலையில் பாதுகாவலர் தங்கள் அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
* குழந்தை பிறந்த காலத்திற்கான பெற்றோரின் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதார ஆவணங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பெற்றோரின் திருமணச் சான்று, நிரந்தர வருமான கணக்கு அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெற்றோரால் நோட்டரி பப்ளிக் முன்பாக 20 ரூபாய் முத்திரைத் தாளில் வழங்கப்படும் பிரமாண பத்திரம். பிரமாண பத்திரத்தில் பெற்றோர் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
* இரண்டு நம்பதகுந்த நபர்களிடமிருந்து பெறப்படும் சான்றிதழ்.
* குழந்தையின் பெயரை எக்காரணங்கொண்டும் முழுமையாக திருத்தம் செய்ய இயலாது. துணை பெயர், குடும்பப் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யலாம், இனிசியல் விரிவாக்கம் செய்யலாம்.
ஓராண்டுக்குள் காலம் தாழ்ந்த பிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்ய வழங்கப்படவேண்டிய ஆவணங்கள்
பெற்றோரிடமிருந்து விண்ணப்பம் மற்றும் நோட்டரி பப்ளிக் முன்பாக ரூ.20-க்கான முத்திரைத் தாளில் வழங்கப்படும் பிரமாணப்பத்திரம். பிரமாண பத்திரத்தில் பெற்றோரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.பெற்றோரின் அடையாள அட்டை நகல்கள் (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அடையாள அட்டை, நிரந்தர வருமான கணக்கு அட்டை, பாஸ்போர்ட் போன்றவை) தாயார் கருவுற்றிருந்த காலத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்கான அட்டை (Antenatal Care Card), குழந்தை பிறந்தபின்னர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்கான அட்டை (Post Natal Care Card)
பிரசவம் பார்த்த நபர் வழங்கும் கடிதம் மற்றும் அவருடைய அடையாள அட்டை நகல் வீட்டில் பிரசவம் நடந்ததை அறிந்த இரண்டு நபர்களிடமிருந்து பெறப்படும் கடிதம். உரிய கோட்ட சுகாதார ஆய்வாளரின் கள விசாரணை அறிக்கை கொடுக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ