)
PM Ujjwala Yojana: நம் நாட்டில், மக்களுக்கு நன்மை பயக்கும் பல வகையான நலத்திட்டங்கள் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. அத்தகைய ஒரு திட்டம் 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா'. இந்தத் திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது, தற்போது ஏராளமான மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை யாரெல்லாம் பயன்படுத்துக்கொள்ள முடியும்? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதில் சேருவதற்கான தகுதி என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம்: இலவசமாக கிடைக்கும் எரிவாயு சிலிண்டர்கள்
- இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் பயனாளிகளுக்கு இலவசமாக எரிவாயு சிலிண்டர்களை வழங்குகிறது.
- மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு உஜ்வலா திட்டத்தைத் தொடங்கியது.
- இதற்கான சில தகுதி அளவுகோல்களையும் அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
- உஜ்வாலா திட்டத்தின் பலன் அனைவருக்கும் கிடைக்காது.
- பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் பலன் ஆண்களுக்குக் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலன் யாருக்குக் கிடைக்கும்?
- பிஎம் உஜ்வாலா திட்டத்தின் கீழ், பெண்கள் மட்டுமே இலவச எரிவாயு சிலிண்டரின் பலன்களைப் பெற முடியும்,
- அதுவும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.
- இந்த திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற, பெண்கள் BPL அட்டை வைத்திருக்க வேண்டும்.
- BPL அட்டை வைத்திருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரப் பெண்ணின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும், இந்த திட்டத்திற்கு விண்னப்பிக்கும் பெண்களின் வங்கிக் கணக்கையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்.
பிஎம் உஜ்வாலா திட்டம்: இதற்கு தேவைப்படும் ஆவணங்கள்
- உஜ்வாலா இணைப்புக்கு E-KYC கட்டாயமாகும்.
- இருப்பினும், அசாம் மற்றும் மேகாலயாவிற்கு இந்த விதி கட்டாயமில்லை.
- விண்ணப்பதாரர் அடையாளச் சான்றாக ஆதார் அட்டை மற்றும் முகவரிச் சான்றினை வழங்க வேண்டும்.
- இது தவிர, திட்டத்தின் நன்மைகளைப் பெற, விண்ணப்பம் செய்யப்படும் மாநிலத்தால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு, பயனாளி மற்றும் குடும்பத்தின் வயது வந்த உறுப்பினர்களின் ஆதார், பயனாளியின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் IFSC மற்றும் குடும்பத்தின் நிலையை உறுதிப்படுத்தும் துணை KYC ஆகியவை தேவைப்படும்.
உஜ்வாலா யோஜனாவிற்கு விண்ணப்பிக்கும் செயல்முறை:
- பிஎம் உஜ்வாலா யோஜனாவில் சேர விரும்பினால், இதற்கு முதலில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmuy.gov.in/ க்குச் செல்லவும்.
- இங்கே கொடுக்கப்பட்டுள்ள ‘Apply For New Ujjwala 2.0 Connection’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- இதன் பிறகு, உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும், மேலும் பல விருப்பங்கள் தோன்றும்.
- இங்கே நீங்கள் வெவ்வேறு எரிவாயு நிறுவனங்களிடமிருந்து சிலிண்டர் பெறுவதற்கான இணைப்பைப் பெறுவீர்கள்.
- நீங்கள் சிலிண்டர் வாங்க விரும்பும் நிறுவனத்தின் முன் உள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் மீண்டும் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- அதில் நீங்கள் விண்ணப்பதாரரின் பெயர், விநியோகஸ்தரின் பெயர், முகவரி, மொபைல் எண்ணை நிரப்ப வேண்டும்.
- இதன் பிறகு, உங்கள் PIN எண்ணையும் இங்கே உள்ளிடவும்.
- இப்போது படிவத்தை நிரப்பிய பிறகு உங்கள் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
- இங்கே சில ஆவணங்கள் உங்களிடம் கேட்கப்படும், அவற்றை இங்கே பதிவேற்றவும்.
- பின்னர் இறுதியாக ‘Apply’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு உங்கள் விண்ணப்பம் நிறைவடையும்.
- அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், உங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டரின் நன்மை வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ