ம்யூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதிய முதலீட்டின் மூலம் உங்கள் நீண்ட கால நிதி இலக்குகளை எளிதாக அடைய முடியும். குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுகளை சமாளித்தல், ஓய்வு காலத்திற்கான மாத வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் என அனைத்தையும் செய்யலாம்.
சிறிய அளவிலான முதலீடுகள் மூலம் பெரிய அளவிலான நிதி இலக்கை அடையலாம்
கடுமையான சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக முதலீடுகள் சரிந்தால், பீதி அடைய வேண்டாம், அவை மீண்டு வர நேரம் கொடுங்கள். அவை மீண்டு வரத் தொடங்கியதும், உங்கள் நிதி இலக்கை அடையும் வரை காத்திருங்கள். நீங்கள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால், சிறிய அளவிலான முதலீடுகள் மூலம் கூட பெரிய அளவிலான நிதி இலக்கை அடைய உதவும். ம்யூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒரு முறை நீண்ட கால முதலீடு செய்து, பின்னர் ஓய்வு பெற்ற பிறகு முறையான திரும்பப் பெறும் திட்டம் (SWP) மூலம் ரூ.1.5 லட்சம் என்ற அளவில் மாத வருமானம் ஈட்டலாம்.
முதலீடுகளை பன்மடங்காக பெருக்கும் கூட்டு வளர்ச்சி
பெரும்பாலான மக்கள் தங்கள் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்க 35 - 40 வயது வரை காத்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அவர்களின் வருமானம் குறைவாக உள்ளது என்பது தான். ஆனால், தன்னால் முடிந்த அளவு முதலீடு செய்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். தாமதமாக முதலீட்டை தொடங்குவதால், இவர்கள் முதலீடுகளை பன்மடங்காக பெருக்கும் கூட்டு வளர்ச்சியின் பல ஆண்டு பலன்களை இழக்கிறார்கள். இளமையில் தொடங்குவதால் கிடைக்கும் பலன்களை எளிய உதஅரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ம்யூச்சுவல் பண்டில் மொத்தமாக ரூ.10,00,000 முதலீடு
A மற்றும் B இருவரும் ம்யூச்சுவல் பண்டில் மொத்தமாக ரூ.10,00,000 முதலீடு செய்கிறார்கள். A 25 வயதிலும், B 35 வயதிலும் முதலீடு செய்திருக்கிறார்கள் என எடுத்துக் கொள்வோம். இவர்கள் தனது 60வது வயதில் பெறும் தொகை என்னவாக இருக்கும் என்பதை கணக்கிடலாம்
35 ஆண்டுகளில், A நபரின் ரூ.10,00,000 மொத்த முதலீடு ரூ.5,27,99,620 என்ற அளவில் வளர்ந்திருக்கும்.
25 ஆண்டுகளில், B நபரின் ரூ.10,00,000 மொத்த முதலீடு ரூ.1,70,00,064 என்ற அளவில் தான் வளர்ந்திருக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதால், வருமானத்தில் வித்தியாசத்தைப் பாருங்கள்.
ம்யூச்சுவல் ஃபண்டில் ஒரு முறை மொத்தமாக ரூ.9,00,000 முதலீடு
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதல் கட்டமாக, 30 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ. 9,00,000 முதலீடு செய்திருப்பதாக வைக் கொள்வோம். இரண்டாவது கட்டத்தில், அதை மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து, 30 ஆண்டுகளுக்கு ரூ. 1,57,000 மாத வருமானம் ஈட்ட ஒரு SWP தொடங்கலாம். எனவே, 25 வயதுடைய ஒருவர் இந்தத் தொகையை முதலீடு செய்து 55 வயது வரை வளர அனுமதித்தால், அவர்கள் 85 வயது வரை மாத வருமானம் ஈட்டலாம். இது குறித்த எளிய கணக்கீடு இதோ
LTCG மீதான வரி விகிதம்
30 ஆண்டுகளுக்கான மொத்த முதலீடான ரூ.9,00,000 மூலம் ஓய்வூதிய நிதி ரூ.2,69,63,930 என்ற அளவில் வளரும். இது நீண்ட கால மூலதன ஆதாயம் (LTCG) என்பதால், முதலீட்டாளருக்கு ரூ.1,25,000 வரி விலக்கு கிடைக்கும். அதன் பிறகு, LTCG மீதான வரி விகிதம் 12.5 சதவீதம்.விலக்குக்குப் பிறகு, மதிப்பிடப்பட்ட வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ.2,59,38,930 ஆக இருக்கும். ஓய்வூதிய நிதியின் மீதான வரி 12.5 சதவீத வரி விகிதத்தில், வருமானத்தின் மீதான மொத்த வரி ரூ. 32,42,366.25 ஆக இருக்கும். வரிக்குப் பிந்தைய நிதியின் மீதான வருமானம் ரூ. 2,37,21,563.75 ஆக இருக்கும்.
SWP கணக்கீடுகள்
SWP திட்டத்திற்கான முதலீட்டுத் தொகை ரூ. 2,37,21,563.75 ஆக இருக்கும். இந்தத் தொகையை ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான ஒரு கன்சர்வேடிவ் அல்லது கடன் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அங்கு சாராசரியாக குறைந்த பட்சம் 7 சதவீத வருடாந்திர வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
SWP நிதியிலிருந்து மாதாந்திர வருமானம்
பரஸ்பர நிதியிலிருந்து 30 ஆண்டுகளுக்கு நாம் பெறக்கூடிய மதிப்பிடப்பட்ட மாத வருமானம் ரூ.1,56,900 ஆக இருக்கும்.
7 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில், இந்தத் தொகையிலிருந்து திரும்பப் பெறப்படும் மொத்த வருமானம் ரூ.5,64,84,000 ஆகவும், அதைத் திரும்பப் பெற்ற பிறகு மதிப்பிடப்பட்ட இருப்பு ரூ.5,984 ஆகவும் இருக்கும் என கணக்கிடப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









