ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில், அது தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்து விட்டாலோ, நமது மிக முக்கியமான பணிகள் பல பாதிக்கப்படலாம். எனவே, காகித அட்டைக்கு பதிலாக பிவிசி ஆதார் கார்டு வைத்துக் கொள்வது எப்போதுமே நல்லது.
அரசு தொடர்பான பணிகள் மட்டுமல்ல, தனியார் நிறுவனம் தொடர்பான பல பணிகளுக்கும் ஆதார் அட்டை மிக அவசியம். வங்கிக் கணக்கு தொடங்கினாலும் சரி, சிம்கார்டு வாங்கினாலும் சரி, இது போன்ற வேறு எந்த வேலையாக இருந்தாலும் சரி, ஆதார் அட்டை வைத்திருப்பது மிகவும் அவசியம். அடையாளச் சான்றாக ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஆதார் அட்டை காகித வடிவில் இருந்தால், அது பழுதடையும் வாய்ப்பு அதிகம். லேமினேஷன் கூட சில சமயங்களில் சேதமடைவதால், சிக்கல்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. அதோடு லேமினேஷனுடன் ஒப்பிடுகையில், ஆதார் PVC கார்டின் அளவு சிறியது மற்றும் அதை எளிதாக பர்ஸில் வைத்துக்கொள்ளலாம். இது தவிர, அதன் தரமும் சிறப்பாக உள்ளது. PVC என்பது பாலிவினைல் குளோரைடைக் குறிக்கிறது. இந்த பிளாஸ்டிக் ஏடிஎம், டெபிட் கார்டுகள் அல்லது டிரைவிங் லைசென்ஸ் தயாரிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
PVC ஆதார் அட்டையில் தகவல்களை விரைவாக ஸ்கேன் செய்து சரிபார்க்க இது உதவும். இது ஏடிஎம் கார்டு போன்றது. எனவே எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த அட்டை எளிதில் அழுக்காகாது. பிளாஸ்டிக் ஆதார் அட்டை என்றும் அழைக்கலாம்.
PVC ஆதார் அட்டையை UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.50 செலுத்தி ஆர்டர் செய்யலாம். இதற்காக நீங்கள் UIDAI இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் PVC ஆதார் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
PVC ஆதார் அட்டையை ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கான ஆன்லைன் செயல்முறையைப் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
PVC ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை (How To Apply For PVC Aadhaar Card)
1. முதலில் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
2. பின்னர் முகப்புப் பக்கத்திலிருந்து லாக் இன் செய்ய வேண்டும்.
3. ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, Send OTP என்பதைக் கிளிக் செய்து லாக் இன் செய்யலாம்
4. இதற்குப் பிறகு 'Order Aadhaar PVC Card' ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அதன் பிறகு, விவரங்களைச் சரிபார்த்து, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
6. PVC கார்டுக்கு நீங்கள் ஆன்லைனில் மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். ஆதார் பிவிசி அட்டைக்கான பணம் செலுத்தும் பக்கத்திற்கு சென்று, 50 ரூபாய் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு, PVC ஆதார் கார்டின் ஆர்டர் செயல்முறை நிறைவடையும்.
7. பிவிசி ஆதார் அட்டைக்கான செயல்முறையும் முடிந்ததும், UIDAI ஆதாரை அச்சிட்டு 5 நாட்களுக்குள் இந்திய அஞ்சல் நிறுவனத்த்தின் ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்கள் வீட்டு முகவரிக்கு அட்டையை அனுப்பும்.
மேலும் படிக்க | மத்திய அரசு வழங்கும் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! விண்ணப்பிப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









