Dr.Ambedkar Inter Caste Marriage Assistance Scheme: நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான், அம்பேத்கர் அறக்கட்டளை திருமண திட்டமாகும். கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் மூலம் தம்பதிகளுக்கு ரூ.2.50 லட்சம் மத்திய அரசு வழங்குகிறது. எனவே, இந்த திட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
அம்பேத்கர் திட்டம்
மத்திய அரசு அம்பேத்கர் அறக்கட்டளை திருமண திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 2013ஆம் ஆண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார பாதுகாப்புக்காகவும் சமூக அங்கீகாரத்துக்காகவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சில நிபந்தனைகள் உள்ளன. நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே, தம்பதிகளுக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டாலும், தமிழக்ததில் இன்னும் அறிமுகமாகவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
அம்பேத்கர் திட்டத்தில் சேர நிபந்தனைகள்
டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற விரும்புபவர்கள் மணமகன் அல்லது மணமகன் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மற்றவர் வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஒரே சாதியில் இருப்பவர்கள் இந்த திட்டம் பொருந்தாது. இந்து திருமணச் சட்டத்தின் கீழ் உள்ள சட்டத்தின்படி, திருமணத்தை முறையாகப் பதிவு செய்ய வேண்டும். சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணத்தையும், திருமண உறவுக்கான ஆவணத்தையும் தம்பதியினர் சமர்ப்பிக்க வேண்டும்.
திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தம்பதிக்கு Joint Account வைத்திருக்க வேண்டும். புதுமணத் தம்பதியினரின் மொத்த ஆண்டு வருமானம், இரண்டையும் சேர்த்தால், ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாநில அரசிடமிருந்தோ அல்லது யூனியன் பிரதேச அரசிடமிருந்தோ ஏற்கனவே ஊக்கத்தொகை பெற்ற தம்பதியினர் மீண்டும் இந்த திட்டத்தி பயனடைய தகுதி பெற மாட்டார்கள்.
உதவித் தொகை எப்படி அளிக்கப்படும்?
டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் தம்பதிக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். தம்பதியினரின் ஜாயிட் அக்கவுண்டில் 50 சதவீத தொகை DD வடிவத்திலும், மீதமுள்ள 50 சதவீத தொகை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதியான தம்பதியினருக்கும் வழங்கப்படும். அதாவது, ரூ.1,25,000 டிடியாக பெறுவார்கள். 5 ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.1,25,000 வழங்கப்படும்.
அம்பேத்கர் திட்டம் சேர தேவையான ஆவணங்கள்
தம்பதியினர் ஒருவர் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்காக சான்றிதழ், தம்பதியின் சாதி சான்றிதழ்கள், மணமகள் மற்றும் மணமகன் இருவரின் முதல் திருமணம் என்பதற்கான சான்றிதழ், தம்பதியின் இருபிடச் சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, தம்பதியினரின் திருமண புகைப்படம், பாஸ்போர்ட் புகைப்படம், கல்வி சான்றிதழ், சம்பள பட்டியல் சான்றிதழ் உள்ளிட்டவற்றை விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.
அம்பேத்கர் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
டாக்டர் அம்பேத்கர் திட்டத்தில் பயன்பெற ambedkarfoundation.Nic.In என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேவையான ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Aadhaar Card: வீட்டில் இருந்தே ஆதார் கார்டில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









