பண புழக்கத்தில், ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயமாகும். எனினும், சில ரிசர்வ் வங்கி செயலி மூலம், அசல் மற்றும் கள்ள நோட்டுகளை எளிதில் அடையாளம் காணலாம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்கிய பிறகு தற்போது 500 ரூபாய் நோட்டு தான், அதிக மதிப்புள்ள நோட்டாக உள்ள நிலையில், இதன் போலி நோட்டுகளும் (Fake Notes) அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் பண பரிவர்த்தனைகளை மிகவும் கவனமாக செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் சந்தையில் பரவியுள்ள போலி நோட்டுகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டு நீங்கள் ஏமாற்றப்படலாம். ஆகையால் இந்த போலி ரூபாய் நோட்டுகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. 2024-25 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் மிக அதிகமாகும். கடந்த ஆண்டை விட 2024-25 நிதியாண்டில், இந்த போலி நோட்டுகளின் எண்ணிக்கை 37.35 சதவீதம் அதிகரித்து 1,17,722 ஆக உயர்ந்துள்ளது. 2023-24 நிதியாண்டில், இந்த எண்ணிக்கை 85,711 என்ற அளவில் இருந்தது. உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், அது அசலா அல்லது கள்ள நோட்டா என்பதை ஒரு முறை கவனமாகப் பாருங்கள். ரூ.200 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இதன் அளவு 13.9 சதவீதம் அதிகரித்து 32,600 ஆக உயர்ந்துள்ளது.
ரூ.500 அசல் மற்றும் கள்ள நோட்டுகளை எவ்வாறு அடையாளம் காண்பது
ரூ.500 மதிப்பிலான கள்ள நோட்டுகள் அசல் நோட்டை போலவே காணப்படுவதால், உண்மையான மற்றும் கள்ள நோட்டு எது என வேறுபடுத்துவது கடினமாகத் தான் உள்ளது. ஆனால் இனி கவலைப்படத் தேவையில்லை. சில எளிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அசல் மற்றும் கள்ள நோட்டுகளை நீங்களும் அடையாளம் காணலாம்.
RBI வெளியிட்டுள்ள MANI செயலி
RBI மொபைல் பயனர்களுக்காக MANI (Mobile Aided Note Identifier) என்ற பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி Android மற்றும் iOS இரண்டிலும் இலவசமாகக் கிடைக்கிறது. உங்கள் தொலைபேசியில் இந்த கள்ள நோட்டு கண்டறியும் செயலியை பதிவிறக்கி திறக்கவும். தொலைபேசியின் கேமராவை ஆன் செய்து 500 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்யவும். இந்த செயலி உடனடியாக அந்த நோட்டு அசலா அல்லது போலியானதா என்பதைச் சொல்லும். இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த செயலி ஆஃப்லைனிலும் செயல்படுகிறது. மேலும் சற்று கிழிந்த அல்லது பழைய நோட்டையும் கூட அடையாளம் காண உதவுகிறது.
நோட்டின் பாதுகாப்பு அம்சத்தை நீங்களே சரிபார்க்கலாம்
அசல் ரூபாய் நோட்டில் சில சிறப்பு அடையாளக் குறிகள் உள்ளன. நோட்டின் நடுவில் ஒரு பளபளப்பான கோடு இருக்கும். அதில் 'Bharat' மற்றும் 'RBI' ஆகியவை எழுதப்பட்டு இருக்கும். நோட்டை சற்று மடிக்கும்போது அதன் நிறம் மாறுவதைக் காணலாம். ரூபாய் நோட்டில் உள்ள காந்திஜியின் புகைப்படத்திற்கு அருகில் ஒரு வாட்டர் மார்க் இருக்கும். இதனை வெளிச்சத்தில் காணலாம். காந்திஜியின் கண்ணாடி மற்றும் சில பகுதிகளில் 'RBI', 'Bharat' மற்றும் '500' ஆகியவை மிகச் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இதனை புகைப்படம் எடுத்து ஜூம் செய்து பார்ப்பதன் மூலம் அல்லது கண்களால் உற்றுப் பார்ப்பதன் மூலம் அவற்றை அடையாளம் காணலாம்.
உங்கள் தொலைபேசி மூலம் UV சோதனை செய்யுங்கள்
உங்கள் ஸ்மார்ட்போனை UV விளக்காகப் பயன்படுத்தி அடையாளம் காணலாம். தொலைபேசியின் ஃபிளாஷில் ஒரு நீலம் அல்லது ஊதா நிற ட்ரான்பரெண்ட் பிளாஸ்டிக் துண்டை வைக்கவும். இப்போது ஃபிளாஷை இயக்கி ரூபாய் நோட்டை பாருங்கள். இதனால், ரூபாய் நோட்டில் இருக்கும் நூல் அல்லது சீரியல் எண் வெளிர் நீலம் அல்லது பச்சை நிற ஒளியில் பிரகாசிக்கத் தொடங்கும். இந்த முறை 100% சரியானதாக இருக்கும் என உறுதி அளிக்க முடியாது. ஆனால் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய டிஜிட்டல் சகாப்தத்தில், கள்ள நோட்டுகளிய அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் அல்ல. கொஞ்சம் புரிதலுடன் ஸ்மார்ட்போனின் உதவியுடன், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை எளிதாக அடையாளம் காணலாம். எனவே இன்றே MANI செயலியைப் பதிவிறக்கம் செய்து ரூபாய் நோட்டுகளை நீங்களே அடையாளம் காணவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ