மாதம் ரூ.1,000 கிடைக்கலாம்.. டெலிவரி பணியாளர்களுக்கு அரசு கொடுத்த சப்ரைஸ்!

NPS E-Shramik Pension Scheme: டெலிவரி பணியாளர்களுக்காக பென்சன் சலுகைகள் கிடைக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பென்சன் தொகையாக ரூ.1000 வரை கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.  

Written by - Umabarkavi K | Last Updated : Nov 10, 2025, 04:07 PM IST
  • டெலிவரி ஊழியர்களுக்கு ஜாக்பாட்
  • சூப்பரான திட்டம்
  • மாதம் ரூ.1,000 கிடைக்கலாம்
மாதம் ரூ.1,000 கிடைக்கலாம்.. டெலிவரி பணியாளர்களுக்கு அரசு கொடுத்த சப்ரைஸ்!

E-Shramik Pension Scheme For Gig Workers: நாட்டில் உள்ள பலதரப்பட்ட  மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஓய்வூதிய காலத்தில் அனைவரும் பொருளாதார ரீதியாக பலமாக இருக்கவும் அதற்காக திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. விவசாயிகள், ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசார தொழிலாளர்ளுக்கு அரசு ஓய்வூதிய திட்டங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில்,  டெலிவரி பணியாளர்களும் ஓய்வூதியம் பெறும் வகையில், புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

NPS E-Shramik Platform Workers Model திட்டம்

சோமேட்டோ, ஸ்விக்கி, பிளிக்கிட், இன்ஸ்டாமார்ட், செப்டோ போன்ற டெலிவரி பணியாளர்களுக்காக NPS பிளாட்ஃபார்ம் வொர்க்கர்ஸ் மாடல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது. டெலிவரி பணியாளர்களுக்கு எந்த ஒரு ஓய்வூதிமும் கிடையாது. இதற்காக தான் மத்திய அரசு NPS பிளாட்ஃபார்ம் வொர்க்கர்ஸ் மாடல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம், அவர்கள் ஓய்வூதியங்களை பெறுவார்கள். இதுவரை, NPS அல்லது PF போன்ற சலுகைகள் முக்கியமாக அரசு அல்லது தனியார் வேலைகளில் பணிபுரிபவர்களுக்குக் கிடைத்தன. தற்போது, இது டெலிவரி பணியாளர்களுக்கு கிடைக்க உள்ளது. இது டெலிவரி பணியாளர்களுக்கான எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

இந்த திட்டத்தில் எப்படி சேருவது?

Zomato, Swiggy, Blinkit, Ola, Uber, Urban Company போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து டெலிவரி ஊழியர்கள்  NPS ஓய்வூதியத் திட்டத்துடன் இணைக்கப்படுவார்கள். முதலில் நிரந்தர ஓய்வூதிய கணக்கை டெலிவரி பணியாளர்கள் திறக்க வேண்டும். இதற்கு பெயர், முகவரி, PAN, மொபைல் எண், வங்கி விவரங்கள சரிபார்க்கப்படும்.

இதன்பிறகு, தொழிலாளியின் ஒப்புதலின் அடிப்படையில், ஒரு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) உருவாக்கப்படுகிறது. தொழிலாளியும் நிறுவனமும் இணைந்து ஓய்வூதிய நிதி மற்றும் முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். தொழிலாளி தங்கள் பெற்றோரின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் வேட்பாளர் விவரங்களை வழங்க வேண்டும். திட்டத்தில் சேர்ந்த 60 நாட்களுக்குள் பரிந்துரைக்கப்பட்ட விவரங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம், நீங்கள் இந்த திட்டம் இணைவீர்கள்

மாதம் எவ்வளவு கிடைக்கும்?

தொழிலாளியின் ஓய்வூதியக் கணக்கில் பங்களிப்புகளைச் செய்ய மூன்று வழிகள் உள்ளன. ஜொமாட்டோ அல்லது ஓலா போன்ற நிறுவனங்கள் மற்றும் கிக் தொழிலாளி இருவரும் கணக்கில் பணம் செலுத்துகிறார்கள். மேலும், சிக் தொழிலாளி பங்களிப்பு செய்யலாம். தொழிலாளியின் சார்பாக நிறுவனம் மட்டும் கூட ஓய்வூதிய பங்களிப்பை வழங்கலாம். ஒவ்வொரு வைப்புத்தொகைக்கும் குறைந்தபட்ச பங்களிப்புத் தொகையை நிறுவனங்கள் நிர்ணயிக்கலாம். உதாரணமாக,  நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சேர்ந்து குறைந்தபட்சம் ரூ.200 பங்களிக்கலாம். NPS விதிகளின்படி,குறைந்தபட்ச பங்களிப்பு ரூ.500 ஆகும். இதன் மூலம், கிக் தொழிலாளர்ளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 வரை கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: வாழ்நாள் முழுவதும் இலவச சிகிச்சை.. அரசின் இந்த திட்டங்கள் பற்றி தெரியுமா?

 

மேலும் படிக்க: வீட்டில் எத்தனை சவரன் நகை வைக்கலாம்? இந்த விஷயம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

About the Author

Trending News