)
CPGRAMS: வருங்கால வைப்பு நிதி தொகையை திரும்பப் பெறுவதில் தாமதம், ஓய்வூதியத்தில் பிழைகள், கூடுதல் வரி பணத்தை திரும்பப் பெறுவதில் தாமதம் போன்ற அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட சேவைகளில் ஏற்படும் நிதி சிக்கல்கள் மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம் அதிர்ஷ்டவசமாக, CPGRAMS (மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு) அத்தகைய புகார்களைப் பதிவு செய்வதற்கும், அவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், தேவைப்பட்டால் மேல்முறையீடுகளைக் கோருவதற்கும் ஒரு நெறிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறையை வழங்குகிறது.
- CPGRAMS என்பது 24/7 கிடைக்கும் ஒரு ஆன்லைன் போர்டல் ஆகும்.
- இது பொதுத்துறை அதிகாரிகளுக்கு எதிரான குறைகளைப் பதிவு செய்ய குடிமக்களால் பயன்படுத்தப்படுகிறது.
- இது மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் இரண்டையும் உள்ளடக்கியது.
- அதிகாரிகள் இந்த அமைப்பில், அவர்களது பங்கின் அடிப்படையிலான அணுகலைக் கொண்டுள்ளனர்.
- இது பிரத்யேக மொபைல் செயலிகளையும் கொண்டுள்ளது.
- மேலும் உமங் செயலி வழியாகவும் இதை அணுகலாம்.
மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பில் ஒருவர் ஒரு குறையை தாக்கல் செய்தவுடன், நிலையைக் கண்காணிக்க ஒரு தனித்துவமான பதிவு எண்ணைப் பெறுவார். தீர்வால் திருப்தி அடையவில்லை என்றால், மேல்முறையீடு செய்யலாம். அதே பதிவு ஐடி மேல்முறையீட்டைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் கோரிக்கை நிறைவடைந்த பிறகு, நீங்கள் உங்கள் கருத்துக்களை வழங்கலாம். தீர்வு "மோசமானது" என மதிப்பிடப்பட்டால், குறையை மீண்டும் தாக்கல் செய்யலாம்.
CPGRAMS குறிப்பாக இவற்றில் உதவியாக இருக்கும்:
- உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கின் தாமதமான அல்லது நிலுவையில் உள்ள தீர்வு/பரிமாற்றங்கள்.
- தவறான கணக்கீடுகள், காணாமல் போன நிலுவைத் தொகைகள் அல்லது பணம் செலுத்துவதில் தாமதம் போன்ற ஓய்வூதிய சிக்கல்கள்.
- தவறான தொகைகள், தாமதங்கள், இன்னும் தொகை கிடைக்காத நிலை போன்ற வருமான வரி ரீஃபண்டு சிக்கல்கள்
- கோரிக்கை தாமதங்கள், தீர்வு முறைகேடுகள் போன்ற பொதுத்துறை வங்கி அல்லது காப்பீட்டில் உள்ள சிக்கல்கள்.
- pgportal.gov.in போர்டலுக்கு சென்று “Lodge Public Grievance.” என்பதைத் தேர்வுசெய்யவும்.
- பொருத்தமான அமைச்சகம் அல்லது துறையைத் தேர்ந்தெடுக்கவும்.
- புகார் படிவத்தை நிரப்பி, ஏதேனும் துணை ஆவணங்கள் இருந்தால், அவற்றை இணைத்து சமர்ப்பிக்கவும்.
- கண்காணிக்க உங்கள் பதிவு ஐடியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதில் சில விதிவிலக்குகள் உள்ளன:
- RTI (தகவல் அறியும் உரிமை) தொடர்பான விஷயங்கள்.
- நீதிமன்ற முடிவுகளுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்.
- மத விஷயங்கள் அல்லது அரசு ஊழியர்களின் உள் சேவை விஷயங்கள் தொடர்பானவை.
மேலும், குறைகளை பதிவு செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. இருப்பினும் ஒரு பொது சேவை மையத்தை (CSC) பயன்படுத்தினால் ஒரு பெயரளவு கட்டணம் விதிக்கப்படலாம்.
ஓய்வு பெற்றவர்கள், ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு, பிஎஃப், ஓய்வூதியம் அல்லது வரி ரீஃபண்ட் விஷயங்களில், தாமதங்கள் அல்லது பிழைகள் குறிப்பிடத்தக்க நிதி விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். CPGRAMS, அடிக்கடி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவையை குறைத்து, இதுபோன்ற புகார்களைப் பதிவு செய்வதற்கான முறையான மற்றும் வெளிப்படையான வழியை உங்களுக்கு வழங்குகிறது. முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் திறன், முடிவுகளை மேல்முறையீடு செய்யும் திறன் மற்றும் கருத்து தெரிவிக்கும் திறன் ஆகியவை இந்த செயல்முறைக்கு அதிக பொறுப்புணர்வை அளிக்கின்றன. பணத்தின் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் இந்த காலத்தில், CPGRAMS ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிவது உங்கள் நிதி உரிமைகளைப் பாதுகாக்க உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ